Published:Updated:

சிறைக்குள் விவசாயம் செய்தாரா சசிகலா... கைதிகள் விவசாயம் செய்ய வாய்ப்புண்டா?

சசிகலா

``ஒரு கைதிக்கு விவசாயம் செய்ய அரை ஏக்கர் நிலம் வழங்கப்படுமா? சிறையில் ஒருவர் விவசாயம் செய்ய முடியுமா?" எனத் தமிழக சிறைத்துறையின் முன்னாள் டிஐஜி-யான ஜி.ராமச்சந்திரனிடம் பேசினோம்

சிறைக்குள் விவசாயம் செய்தாரா சசிகலா... கைதிகள் விவசாயம் செய்ய வாய்ப்புண்டா?

``ஒரு கைதிக்கு விவசாயம் செய்ய அரை ஏக்கர் நிலம் வழங்கப்படுமா? சிறையில் ஒருவர் விவசாயம் செய்ய முடியுமா?" எனத் தமிழக சிறைத்துறையின் முன்னாள் டிஐஜி-யான ஜி.ராமச்சந்திரனிடம் பேசினோம்

Published:Updated:
சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா இன்னும் சில மாதங்களில் விடுதலை ஆகவிருக்கிறார். இந்த நிலையில், இதுவரையான தனது தண்டனைக் காலத்தில் சசிகலா கன்னட மொழியைக் கற்றுக்கொண்டதாகவும் சிறை வளாகத்தில் அரை ஏக்கர் நிலத்தில் சிறப்பான முறையில் விவசாயம் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்
பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரது தண்டனைக் காலம் வரும் பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்திவிட்டதால் வரும் ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. சிறைக்குச் சென்றதிலிருந்து சசிகலாவைச் சுற்றி அவ்வப்போது ஏதாவதொரு சர்ச்சைகள் வெடித்தன. `ஷாப்பிங் செய்ய சிறையிலிருந்து வெளியே சென்றார். சிறைக்குள் சசிகலாவுக்காக சொகுசான வசதிகள் செய்யப்பட்டுள்ளன’ என்றெல்லாம் நெகட்டிவான செய்திகள் வரிசைகட்டின. சசிகலா வெளியே வரப்போகும் சூழலில் தற்போது அவரைப் பற்றி சில பாசிட்டிவ் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சிறைக்கு வந்தபோது சசிகலாவுக்கு கன்னட மொழி தெரியாது. ஆகையால் சிறை ஊழியர்களுடன் உரையாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். சிறை அதிகாரிகளுக்கும் தமிழ் தெரியாததால் ஒரு கட்டத்தில், கன்னடம் கற்க முடிவு செய்தார் சசிகலா. கன்னட ஆசிரியர் மூலம் அவருக்கு முறைப்படி கன்னட மொழி கற்பிக்கப்பட்டது. இப்போது அவர் கன்னடத்தில் எழுதவும், படிக்கவும் சரளமாகப் பேசவும் கற்றுத் தேர்ந்துள்ளார். இதுமட்டுமல்லாது, சசிகலா சிறையில் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்துள்ளார். ஒரு டன் பப்பாளி சாகுபடி செய்துள்ளார். துவரை, பீன்ஸ், கத்திரிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளையும் சாகுபடி செய்துள்ளார். விவசாயம் மட்டுமல்லாது ஆடை வடிவமைப்பிலும் சசிகலா ஆர்வம் காட்டினார். காலையில் தோட்ட வேலை, மதியம் புடவை டிசைன் போடுவது, மாலையில் தியானம் என தன் ஒவ்வொரு நாளையும் முறைப்படுத்திக்கொண்டார் சசிகலா. மகளிர் சிறைக்குச் செல்லும் வழியில் 150-க்கும் மேற்பட்ட ரோஜா செடிகளை நட்டு வளர்த்துள்ளார்” என்று பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜி.ராமச்சந்திரன்
ஜி.ராமச்சந்திரன்
க.பாலாஜி

``இந்தத் தகவல் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதா... ஒரு கைதிக்கு விவசாயம் செய்ய அரை ஏக்கர் நிலம் வழங்கப்படுமா? சிறையில் ஒருவர் விவசாயம் செய்ய முடியுமா?" எனத் தமிழக சிறைத்துறையின் முன்னாள் டிஐஜி-யான ஜி.ராமச்சந்திரனிடம் பேசினோம், ``ஒரு கைதிக்கு இவ்வளவு நிலம் விவசாயம் செய்ய தரலாம் என்றெல்லாம் எந்த விதியும் கிடையாது. சசிகலா உயர் பாதுகாப்பு தண்டனைக் கைதியாக இருப்பதால் அவருக்கென தனி காம்ப்ளெக்ஸ் கொடுத்திருப்பார்கள். அங்கு வேறு கைதிகள் அடைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்லாது அந்த காம்ப்ளெக்ஸை பராமரிப்பதற்காகத் துப்புரவுப் பணியாளர்கள், பாத்திரம் கழுவதற்கான பணியாளர்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பணியாட்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.

அந்தப் பணியாளர்களை வைத்துக்கொண்டு இருக்கிற இடத்தில் தோட்டம் அமைத்து அதைப் பராமரிப்பதற்கான நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. சிறையில் அடைக்கப்படும் பல வி.ஐ.பி-க்கள் இப்படிச் செய்வதுண்டு. எனவே, சசிகலாவும் அப்படிச் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வி.ஐ.பி கைதிகள் மட்டுமல்ல சாதாரண கைதிகள்கூட தங்கள் அறைக்கு எதிரே இருக்கும் முற்றத்தில் சில செடிகளை வைத்து பராமரிப்பார்கள். எனவே, ஒரு கைதிக்கு விவசாயம் செய்ய இவ்வளவு நிலம் வழங்கப்படும் என்றெல்லாம் கிடையாது. இருக்கும் இடத்தில் தோட்டம் அமைத்து பராமரிக்கலாம். தோட்டம் அமைப்பதற்கான கருவிகள் சிறையிலேயே இருக்கும். நீங்கள் விரும்பும் விதைகள் செடிகள் வேண்டுமானால் உங்கள் சொந்தப் பணத்தில் வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.