Published:Updated:

‘வில்லங்க சான்றிதழை இணையதளத்தில் இனி பார்க்க முடியாது’ வாட்ஸப் தகவல் சொல்வது உண்மையா?

Vikatan Fact Check

பத்திரப்பதிவுத் துறையின் இணைதளத்தில் சென்றால், யார் வேண்டுமானாலும் உடனடியாக வில்லங்க சான்றிதழைப் பார்வையிட முடியும். உரிய விவரங்களைப் பதிவிட்டால், உடனே பார்த்துவிடலாம் என்கிற வசதி இத்தனை ஆண்டுகளாக இருந்தது. தற்போது, இந்த நடைமுறையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

‘வில்லங்க சான்றிதழை இணையதளத்தில் இனி பார்க்க முடியாது’ வாட்ஸப் தகவல் சொல்வது உண்மையா?

பத்திரப்பதிவுத் துறையின் இணைதளத்தில் சென்றால், யார் வேண்டுமானாலும் உடனடியாக வில்லங்க சான்றிதழைப் பார்வையிட முடியும். உரிய விவரங்களைப் பதிவிட்டால், உடனே பார்த்துவிடலாம் என்கிற வசதி இத்தனை ஆண்டுகளாக இருந்தது. தற்போது, இந்த நடைமுறையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
Vikatan Fact Check

‘விடியல் அரசாங்கம்.. நேற்றிலிருந்து பத்திரப் பதிவுத்துறை இணையதளத்திலிருந்து நிலம் மற்றும் வீடுகளுக்கான சர்வே நெம்பரை உள்ளிட்டு வில்லங்க சான்றிதழ், அதாவது சொத்தை பொறுத்து யார் பெயரில் தற்போது உள்ளது? எவ்வளவு அடமானம் வைத்துள்ளார்கள்?? யார் விற்பனை செய்துள்ளார்கள்??? முன் ஆவணம் (டைட்டில் டீட்) சுத்தமாக உள்ளதா.???? என்று நாமே பரிசோதித்துக் கொள்ளும் வசதியினை வெப்சைட்டிலிருந்து சப்தமில்லாமல் எடுத்து விட்டார்கள். இனிமேல் சொத்து வாங்க வேண்டுமென்றால்.. பத்திர பதிவு அலுவலகம் சென்று.. ஒரு சர்வே நெம்பருக்குக் குறைந்தது 500/- ரூபாய் பணம் செலுத்திதான் வில்லங்கம் பார்க்க வேண்டும். மறைமுகமாக இது மக்களுக்கு இழைக்ககூடிய பெரும் அநீதியாகும்’

-இப்படி ஆரம்பித்து, நீண்டுகொண்டே போகும் ஒரு வாட்ஸப் தகவல், கடந்த சில தினங்களாக வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

பத்திரப் பதிவு
பத்திரப் பதிவு

அதில், ‘நம்ம (போலி) சமூகப் போராளிகள் இதற்கெல்லாம் பொங்கமாட்டார்கள். நவ துவாரத்தையும் அடைத்துக் கொள்வார்கள். முன்களப்பணியாளர்களும் இதற்கெல்லாம் பொங்க மாட்டார்கள். ஏனென்றால்.. அவர்களுக்குத் தொடர்ந்து எலும்பு துண்டுகள் வீசப்படுகின்றன’ என்கிற சாடல்கள் வேறு அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.

இதுபோல அவ்வப்போது பற்பல பதிவுகள் வந்து கதிகலங்க அடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பல சந்தர்ப்பங்களில் அவை ஃபேக் என்கிற வகையில் வரும் தவறான பதிவுகளாகவே இருக்கின்றன. அந்த வகையில், நாம் விசாரித்தபோது, வாட்ஸப்பில் வந்திருக்கும் வில்லங்க சான்றிதழ் குறித்த இந்தத் தகவலும் ஃபேக் தகவலே.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதாவது, வில்லங்க சான்றிதழைப் பார்வையிடும் வசதி, பத்திரப்பதிவுத்துறையின் இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது என்பதுதான் அந்தப் பதிவின் ஒட்டுமொத்த சாராம்சம். உண்மையில் அந்த வசதி நீக்கப்படவில்லை. பத்திரப்பதிவுத் துறையின் இணைதளத்தில் சென்றால், யார் வேண்டுமானாலும் உடனடியாக வில்லங்க சான்றிதழைப் பார்வையிட முடியும். உரிய விவரங்களைப் பதிவிட்டால், உடனே பார்த்துவிடலாம் என்கிற வசதி இத்தனை ஆண்டுகளாக இருந்தது. தற்போது, இந்த நடைமுறையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பத்திரப்பதிவுத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்பவர்கள்... பயனர் முகவரி (யூஸர் ஐடி) மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உருவாக்கிக் கொள்வதன் மூலமாக வில்லங்க சான்றிதழைப் பார்க்கமுடியும். பதிவிறக்கமும் செய்யமுடியும்.

பத்திரப் பதிவுத் துறை
பத்திரப் பதிவுத் துறை

ஆக, பத்திரப்பதிவுத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என்பது மட்டும்தான் கூடுதலாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலும் இருப்பது போன்ற நடைமுறைதான். இந்த விஷயத்தைத்தான், ‘இனிமேல் வில்லங்க சான்றிதழையே பார்க்க முடியாது. ரிஜிஸ்டர் ஆபீஸுக்கு சென்றுதான் பார்க்க முடியும்’ என்றெல்லாம் ஊதிவிட்டுள்ளார்கள்.

பத்திரப்பதிவுத் துறை இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டு இந்த விஷயம் தொடர்பாகக் கேட்டபோது, ‘இணைய தளத்தில் பதிவு செய்து பார்க்கவேண்டும். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்’ என்று சொன்னார்கள்.

நாமும் அதன்படியே பதிவு செய்து உள்நுழைந்தபோது, பழையபடி வில்லங்க சான்றிதழைப் பார்க்க முடிந்தது... பதிவிறக்கமும் செய்ய முடிந்தது. இதைத் தவிர, இன்னும் பல வசதிகளையும்கூட பயன்படுத்த முடிந்தது.

Website
Website
Jayakumar T

வில்லங்க பார்ட்டிகளே... உங்கள் அரசியலை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். இல்லாததையெல்லாம் கிளப்பிவிட்டு மக்களை ஏன் குழப்புகிறீர்கள்... வதைக்கிறீர்கள்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு துறை இணையதளத்தில் சென்று அறியலாம்.

https://tnreginet.gov.in/portal/