Election bannerElection banner
Published:Updated:

`கொரோனாவால் விற்கமுடியாத ரப்பர் ஷீட்டுகள்' - இருப்பு வைத்து வட்டி இல்லாக் கடன் பெறும் திட்டம்!

ரப்பர் மரம்
ரப்பர் மரம்

உற்பத்தி செய்யும் ரப்பர் ஷீட்டுகளை ஒழுங்குமுறைக் கூடத்தில் இருப்பு வைத்து அதற்குரிய பொருளீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருளீட்டுக் கடனுக்கு ஒரு மாதம் வரை வட்டி கிடையாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் பெரிய அளவில் இல்லை. வாழை, தென்னை, ரப்பர் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் மட்டுமே நடந்துவந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக வாழைப் பழங்கள் விலை இல்லாமல் போயின. வெளி ஊர்களுக்கு அனுப்ப முடியாததால் உள்ளூரில் மட்டுமே விற்பனையாவதால் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. தேங்காயின் மீதுள்ள மட்டையிலிருந்து தேங்காய் நார் எடுத்துக் கயிறு, பிரஸ் போன்றவை தயாரிக்கப்பட்டு வந்தன. ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்தப் பணியும் நடக்கவில்லை. இதனால் தோப்புகளில் தேங்கிக்கிடக்கும் தேங்காய் மட்டைகள் பதப்படுத்த எடுத்துச் செல்லப்படாமல் உள்ளன. மேலும் நார் எடுப்பதற்காக ஊறவைக்கப்பட்ட தேங்காய் மட்டைகள் குறிப்பிட்ட நாள்களுக்குள் எடுக்காமல் இருந்தால் அவை உலர்ந்து நாசமாகிவிடும்.

குமரி கலெக்டர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே
குமரி கலெக்டர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே

அதுபோன்று ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிகள் வேலைக்குச் செல்வதில்லை. இதனால் பெரும்பாலான ரப்பர் மரங்கள் பால் எடுக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் வீட்டின் அருகில் தோட்டம் உள்ளவர்கள், சொந்தமாகப் பால் வெட்ட தெரிந்தவர்கள் மட்டும் பால் வடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ரப்பர் ஷீட்டுகளை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.

அடுத்த மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் குமரி மாவட்ட அனைத்து வகை விவசாயிகளும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் ரப்பர் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ரப்பர் ஷீட்டுகளை இருப்பு வைத்து வட்டி இல்லா கடன் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

ரப்பர் மரங்கள்
ரப்பர் மரங்கள்

இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, ``ரப்பர் உற்பத்தி செய்யும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் ரப்பர் ஷீட்டுகளை ஒழுங்குமுறைக் கூடத்தில் இருப்பு வைத்து அதற்குரிய பொருளீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருளீட்டுக் கடனுக்கு ஒரு மாதம் வரை வட்டி கிடையாது" எனக் கூறப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு