Published:Updated:

`கார்ப்பரேட் முதலையும், பரிதாப மீன்களும்!' - மோடிஜி பற்றி கோவணாண்டியின் `குட்டி ஸ்டோரி'

கோவணாண்டி
கோவணாண்டி

விவசாய மசோதாக்களுக்கு அப்புறம் விவசாயிகளோட வருமானமே உயரப்போகுது, இனிமே கார்ப்பரேட் கூடயே விவசாயிகளும் போட்டி போடலாம்னு சொல்றாங்க... இது எப்படி தெரியுமா இருக்கு? கோவணாண்டி கதையாவே சொல்றாரு கேளுங்க!

``சுதந்திர வணிகம்னு சொல்றாங்களே... இவங்க கொடுக்குற சுதந்திரம் எப்படி இருக்குதுன்னு தெரியுமா?

ஒரு குளத்துல முதலைக் குட்டிகள், மீன் குஞ்சுகள் எல்லாம் இருந்துச்சாம். சின்ன வயசுல எல்லாம் ஓடிப் பிடிச்சு சந்தோஷமா விளையாடுவாங்களாம். முதலை குட்டிங்க, பெரிய முதலைகளா வளர வளர, தன்னோட ஓடி விளையாடுன மீன்களைப் பிடிச்சு திங்க ஆரம்பிச்சுடுச்சாம். மீன்களுக்கு ஒன்னும் புரியல. யாருகிட்டப் போய் நியாயம் கேட்குறதுனு முழிச்சாங்க. அப்ப அங்க வந்த ஒருத்தர், ``இந்தியாவுல மோடிஜினு ஒரு மாமன்னர் இருக்காரு. அவருகிட்ட அறிவாற்றல் மிகுந்த மந்திரிகள், அதிகாரிகள் நிறைய பேர் இருக்காங்க. அவங்ககிட்ட சொன்னா, நீதி கிடைக்கும்"னு சொன்னாராம்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மீன்கள் எல்லாம் கூடிப் பேசி, மோடிஜி தரப்புல நியாயம் கேட்டாங்களாம்.

`அதெப்படி குளத்தில் முதலை மட்டும் நாட்டாமை செய்யலாம். உங்களுக்கும் வாழச் சம உரிமை இருக்கிறது. இனிமே முதலை குறும்பு செய்யக் கூடாது. மீன்களையும் வாழ அனுமதிக்க வேண்டும்'னு சட்டம் போட்டாங்களாம். இப்ப போட்டுருக்க புது வேளாண் சட்டங்கள் மாதிரி. மீன்களும் ஆனந்தக் கூத்தாடி குளத்துக்குள்ள துள்ளி குதிச்சு விளையாண்டுச்சு.

ரெண்டு நாட்கள் பசியோட நீலிக்கண்ணீர் வடிச்ச முதலை, பிறகு ``மீன் நண்பர்களே... குளத்தில் வாழ எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை உங்களுக்கும் இருக்கிறது. எனவே நான் உங்களைக் கொன்று தின்பது போல, நீங்களும் என்னைக் கொன்று திங்கலாம்"னு சொல்லிச்சாம்.

Farmer
Farmer
AP / Channi Anand

மீன்களுக்கு ரொம்ப சந்தோஷம். முதலையைச் சுத்தி சுத்தி வந்து இஷ்டத்துக்கு கடிச்சதுங்க. ஆனா, ஒரு செதிலைக்கூட சிமிட்ட முடியலையாம். கடைசியில முதலை எல்லா மீன்களையும் கபளீகரம் செஞ்சிடுச்சாம். எங்களது மோடிஜி, போடுற சட்டமும் அப்படித்தான் இருக்கப்போகுது. இந்தச் சுதந்திர சந்தை ஒரு நாளைக்கு கார்ப்பரேட்காரனுக்கு இரையாக மாறிடுமோன்னு சந்தேகமா இருக்குது''

இந்தக் கதையோட சேர்த்து விவசாயத்துக்கு எதிரா, நடக்கும் சூழ்ச்சிகள் பற்றி இன்னும் விரிவா பல தகவல்களையும், விவசாய மசோதாக்கள் பத்தியும் புட்டு புட்டு வச்சிருக்கார் கோவணாண்டி.

- கோவணாண்டியின் கடிதத்தை பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > `முதுகெலும்பை’ உடைக்கும் மூன்று மசோதாக்கள்! - கடவுளுக்குக் கோவணாண்டி கடிதம்... https://bit.ly/33UQu8t

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற> https://bit.ly/2VRp3JV

Pasumai Youtube Channel
Pasumai Youtube Channel

இதுபோன்ற விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் பயனுள்ள வீடியோக்களைக் காண பசுமை விகடன் யூ-டியூப் சேனலுக்கு வாங்க. பசுமை விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய: bit.ly/pasumaiYoutube

அடுத்த கட்டுரைக்கு