Published:Updated:

``அதிகாரமிக்க குடும்பத்தின் ஆதிக்கத்தில் 10​ ​லட்சம் ஏக்கர் நிலம்" - பி.ஆர்.பாண்டியன் காட்டம்

பி.ஆர்.பாண்டியன்

``ஆனால் ​​தேனி மாவட்டம் மட்டுமின்றி முல்லைப்பெரியாறு பாச​​ன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10​ ​லட்சம் ஏக்கர் நிலத்தில் அதிகாரமிக்க பெரிய குடும்பம் ஒன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.” - பி.ஆர்.பாண்டியன்

``அதிகாரமிக்க குடும்பத்தின் ஆதிக்கத்தில் 10​ ​லட்சம் ஏக்கர் நிலம்" - பி.ஆர்.பாண்டியன் காட்டம்

``ஆனால் ​​தேனி மாவட்டம் மட்டுமின்றி முல்லைப்பெரியாறு பாச​​ன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10​ ​லட்சம் ஏக்கர் நிலத்தில் அதிகாரமிக்க பெரிய குடும்பம் ஒன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.” - பி.ஆர்.பாண்டியன்

Published:Updated:
பி.ஆர்.பாண்டியன்

​தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குக்கு உட்பட்ட சின்னமனூர் சுற்றுவட்டாரத்தில் மேடான வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் ​கொண்டு ​செல்ல ​அமைக்கப்பட்டிருந்த ​​​குழாய்கள் ​அகற்றப்பட்டன. இது தொடர்பாக சின்னமனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ​​தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்​ தலைமையில் ​​விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.‌ 

லோயர்கேம்ப் முல்லைப்பெரியாறு
லோயர்கேம்ப் முல்லைப்பெரியாறு

​முன்னதாக குழாய்கள் உடைக்கப்பட்ட இட​ங்களை பி.ஆர்.பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார்.‌ அதற்கு ​போலீஸார் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்ட​ நிலையில், விவசாயிகள்​ சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அ​வர்களை போலீஸார் கைதுசெய்​து விடுவித்தனர். 

அப்போது செய்தியாளர்க​ளைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன்​, ``தமிழக நீர்ப்பாசனத் துறை ஒப்புதலோடு தேனி மாவட்டம், சின்னமனூர் சுற்றுவட்டாரத்தில் மேடான பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்​டுள்ள​து.‌ இதனால் வறண்ட பகுதி​கள்​ பசுமையாக ​மாறியுள்ளன.

பி.ஆர். பாண்டியன்
பி.ஆர். பாண்டியன்

​ஆனால் ​​தேனி மாவட்டம் மட்டுமின்றி முல்லைப்பெரியாறு பாச​​ன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10​ ​லட்சம் ஏக்கர் நிலத்தில் அதிகாரமிக்க பெரிய குடும்பம் ஒன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்களின் சுய லாபத்திற்காக அனுமதியின்றி குழாய்கள் பதித்ததாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்ல நீதிமன்றம் இடைக்கால விதித்துள்ளது.‌  

​மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் தற்போது குழாய்களை ​அகற்றியுள்ளனர். இது அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயலாகும். எனவே தமிழக முத​ல்வர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் நவம்பர் 1-ம் தேதி சின்னமனூர் காந்தி சிலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுடன் நீதி கேட்கும் போராட்டம் நடத்த ​இருக்கிறோம். 

 பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

​நீதி கேட்கும் பயணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு உபரி மற்றும் தரிசு நிலங்களை வழங்குவோம் என்ற கொடுத்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில்,​ அக்குடும்பத்தி​ன் ​பினாமி பெயர்களில் உள்ள நிலங்களை, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படும்" என்றார்.