Published:Updated:

Live Updates: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை

அமித் ஷா
அமித் ஷா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்தனர். குடியரசு தினமான இன்று, டெல்லியை நோக்கி மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவித்தனர். அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

26 Jan 2021 4 PM

`விரும்பத்தகாத, ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளைக் கண்டிக்கிறோம்!

``எங்களின் எல்லாவிதமான முயற்சிகளையும் மீறி, சில அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டனர். சமூக விரோத சக்திகள், அமைதியான இயக்கத்தில் ஊடுருவியிருந்தன. சமாதானமே எங்கள் மிகப்பெரிய பலம். எந்த வகையிலான மீறலும் இந்த இயக்கத்தை பாதிக்கும் என்றே நாங்கள் எப்போதும் கருதுகிறோம்.

Live Updates: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை

இன்றைய குடியரசு தின விவசாயிகள் அணிவகுப்பில் பங்கேற்ற விவசாயிகளுக்கு நன்றி கூறுகிறோம். இன்று நடந்த விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை நாங்கள் கண்டிக்கிறோம், வருந்துகிறோம், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து நம்மைப் பிரித்துக்கொள்கிறோம்” என சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்திருக்கிறது.

26 Jan 2021 4 PM

அமித் ஷா முக்கிய ஆலோசனை!

அமித் ஷா
அமித் ஷா

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போரட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் அவர் விளக்கம் கேட்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

26 Jan 2021 3 PM

டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு?!

Live Updates: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. டெல்லியின் முக்கியச் சாலைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். பல இடங்களில் தடியடியும், சில இடங்களில் கண்ணீர்ப் புகைக்குண்டும் வீசப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு விவசாயி உயிரிழந்த நிலையில், தற்போது அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தச் சூழலில், டெல்லியின் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. மறு உத்தரவு வரும்வரை இணையதள சேவையை வழங்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

26 Jan 2021 3 PM

செங்கோட்டையை முற்றுகையிட்ட நிலையில், அதன் கோபுரத்தில் கொடியைக் கட்டிய போராட்டக்காரர்கள்!

26 Jan 2021 3 PM

வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை!

Live Updates: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லியில் சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள் அல்ல... அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பாரதீய கிசான் யூனியனின் ராகேஷ் டெல்லியில் நடக்கும் வன்முறை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், ``பிரச்னைகளை உருவாக்க முயலும் நபர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தைக் கேவலப்படுத்த முயல்கின்றனர்” என்ற குற்றசாட்டை முன்வைத்திருக்கிறார்.

26 Jan 2021 2 PM

``விவசாய எதிர்ப்பு சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள்” - ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு ஆகாது. யாராவது காயமடைந்தால், சேதம் நம் நாட்டுக்கும்தான். நாட்டின் நலனுக்காக விவசாய எதிர்ப்பு சட்டத்தை திரும்பப் பெறுங்கள்” - ராகுல் காந்தி

26 Jan 2021 2 PM

சிங்கு எல்லையிலிருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணியில் போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். டெல்லியில் நடப்பது என்ன? - களத்திலிருந்து...

சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். டெல்லியில் நடப்பது என்ன? - களத்தில் இருந்து

Posted by Vikatan EMagazine on Tuesday, January 26, 2021
26 Jan 2021 2 PM

போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி உயிரிழப்பு.. பதற்றம்!

Live Updates: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று டிராக்டர் பேரணி நடைபெற்றது. விவசாயிகள் போலீஸாரின் அனுமதியை மீறி டெல்லியின் முக்கிய சாலைகளில் செல்ல முயன்றனர். இதனால் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல இடங்களில் தடியடியும், சில இடங்கலில் கண்ணீர் புகைக்குண்டும் வீசப்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் படுகாயமடைந்து பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. பலியான விவசாயி உடலை சாலையில் வைத்து, விவசாயிகள் காவல்துறைக்கு எதிராக போராடி வருகின்றனர்.

26 Jan 2021 2 PM

செங்கோட்டையில் விவசாயிகள்!

Live Updates: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை

குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் டெல்லி செங்கோட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. விவசாயிகள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

26 Jan 2021 2 PM

செங்கோட்டையில் விவசாயிகள்!

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், செங்கோட்டையின் கோபுரங்களில் தங்கள் கொடிகளை அசைத்து வேளாண் சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

26 Jan 2021 2 PM

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்!

டெல்லியில் டிராக்டர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தற்போது டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று மதியம் டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகள் தற்போது செங்கோட்டையை முற்றுகை யிட்டுள்ளார்கள். முன்னதாக சிங்கு எல்லையிலிருந்து டெல்லியின் சஞ்சய் காந்தி போக்குவரத்து நகருக்கு அனுமதி இன்றி வந்த விவசாயிகள்மீது போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர்.

26 Jan 2021 12 PM

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம்!

Live Updates: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை

கடலூர்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று விவசாயிகள் சங்கம் சார்பில் காவல்துறை அனுமதி மீறி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

26 Jan 2021 11 AM

கண்ணீர் புகைக்குண்டு வீச்சு! - என்ன நடந்தது?

சிங்கு எல்லையிலிருந்து டெல்லியின் சஞ்சய் காந்தி போக்குவரத்து நகருக்கு வந்த விவசாயிகள்மீது போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே பேரணி தொடங்கப்பட்டதால், போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இதை விவசாயிகள் நீக்க, போலீஸார்-விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. நிலைமயைக் கட்டுக்குள் கொண்டு வர, மறுபுறம் விவசாய சங்கத் தலைவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையும் நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

26 Jan 2021 11 AM

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டு! 

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 60 நாள்களை கடந்திருக்கும் நிலையில் இன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் சிங்கு எல்லையிலிருந்து டெல்லியின் சஞ்சய் காந்தி போக்குவரத்து நகருக்கு வந்த விவசாயிகள்மீது போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். போலீஸார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலே கண்ணீர்ப் புகைக்குண்டு வீசக் காரணமாக சொல்லப்படுகிறது.

26 Jan 2021 9 AM

டிராக்டர்களில் தேசியக்கொடி; கண்காணிப்பு பணியில் ட்ரோன்கள்

`வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், குடியரசு தினமான இன்று டெல்லி நோக்கி டிராக்டர் பேரணியை நடத்துகின்றனர். டெல்லி முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 100 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த பின்னர் இந்தப் பேரணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில பகுதிகளிலிருந்து டிராக்டர்கள் பேரணியாகச் செல்ல தொடங்கியுள்ளன. பெரும்பாலான டிராக்டர்களில் தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது. டிராக்டர்களைக் காண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தபட்டுள்ளன என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

26 Jan 2021 8 AM

குடியரசு தினம், டிராக்டர் பேரணி - அலர்ட் டெல்லி!

விவசாயிகளின் டிராக்டர் பேரணி காரணமாக டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற, மத்திய அரசுக்கு அழுத்தம் தரும்விதமாக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. டெல்லியின் முக்கியச் சாலைகளின் தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

26 Jan 2021 7 AM

உத்தரப்பிரதேசத்தில் நோ டீசல்!

இன்று விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி நடத்தவிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிராக்டர்களுக்கு டீசல் வழங்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உத்தரபிரதேசத்திலிருந்து விவசாயிகள் டிராக்டரில் டெல்லிக்குச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

26 Jan 2021 7 AM

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டம் 60-வது நாளை எட்டியிருக்கிறாது. இதுவரை பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும், முடிவு எட்டப்படவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்தனர். குடியரசு தினமான இன்று, டெல்லியை நோக்கி மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவித்தனர். இந்தப் பேரணியில் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் டிராக்டர்கள் வரை கலந்துகொள்ளும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

டிராக்டர்
டிராக்டர்

இதற்கிடையே இந்தப் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. டெல்லி காவல்துறை, `குடியரசு தின விழா முடிந்த பின்னர் பேரணியைத் தொடங்க வேண்டும்’ போன்ற சில கட்டுப்பாடுகளுடன் பேரணிக்கு அனுமதி வழங்கியது. `காஜிப்பூர், சிங்கு, சில்லா, டிக்ரி எல்லை வழியாகவே டெல்லிக்குள் நுழைய வேண்டும். மத்திய டெல்லி பகுதிக்குள் பேரணி நடத்தக் கூடாது’ என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு