Published:Updated:

`மதுரை பாசனத்துக்கு தண்ணீரே செல்லாத நிலை ஏற்படும்!' - எச்சரிக்கும் விவசாயிகள்

வைகை அணையில் இருந்து தண்ணீர் செல்லும் பாசனக் கால்வாய் பல இடங்களில் சேதமடைந்திருப்பதாகவும், அதனை சரி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

சேதமடைந்துள்ள கால்வாய்
சேதமடைந்துள்ள கால்வாய்

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஆதாரமாக வைகை அணை இருக்கிறது.

சேதமடைந்துள்ள கால்வாய்
சேதமடைந்துள்ள கால்வாய்

இதிலிருந்து தண்ணீர் செல்லும் பாசனக் கால்வாய் பல இடங்களில் சேதமடைந்திருப்பதாகவும், அதனை சரி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கடந்த 9ம் தேதி, வைகை அணையில் இருந்து மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 36,109 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும் வகையில், தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தண்ணீரை திறந்துவைத்தார்.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் தேனி கலெக்டர்
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் தேனி கலெக்டர்
பானைகள், எலும்புகள், சுடுமண் உறைகிணறு! -பாம்புவிழுந்தானில் வைகை நாகரிகச் சான்று?

மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதி 3ற்கு 9.11.2019 முதல் 16.11.2019 வரை உள்ள 7 நாள்களுக்கு 1441 மில்லியன் கன அடியும், வைகை பூர்வீக பாசன பகுதி 2ற்கு 17.11.2019 முதல் 21.11.2019 வரை 4 நாள்களுக்கு 386 மில்லியன் கன அடியும், 22.11.2019 முதல் 25.11.2019 வரை மூன்று நாள்களுக்கு 48 மி.க.அடியும் பகுதி 1-யைச் சார்ந்த நான்கு கண்மாய்களுக்கு,

கால்வாய்
கால்வாய்

விரகனூர் மதகணையில் வழங்கவும் மற்றும் வைகை பூர்வீகபாசனப்பகுதி 1-க்கு 26.11.2019 முதல் 2.12.2019 வரை 240 மில்லியன் கன அடி தண்ணீரை, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து வைகை அணையிலிருந்து திறந்துவிடவும் திட்டமிட்டு, தண்ணீர் வைகை அணையில் இருந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், தண்ணீர் செல்லும் கால்வாய் ஆங்காங்கு உடைப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர் விவசாயிகள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய குள்ளப்புரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ``வைகை அணையில் இருந்து மதுரைக்குச் செல்லும் தண்ணீர் கால்வாய், பல இடங்களில் சேதமடைந்திருக்கிறது. அதனை கவனிகாமல்விட்டால், கால்வாயில் உடைப்பு ஏற்படும் நிலை ஏற்படும். இதனால், மதுரை பாசன விவசாயிகளுக்குச் செல்லும் தண்ணீர் தடைபடும். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், உடனே, கால்வாய் சேதப்பகுதிகளை சரி செய்ய வேண்டும்” என்றார்.

`வைகை தெர்மாகோல் திட்டத்துக்கு செலவு எவ்வளவு?' - ஆர்.டி.ஐயில் கிடைத்த பதில்

இது தொடர்பாக விளக்கம் பெற, பெரியாறு, வைகை வடிநிலக் கோட்ட அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை நிறுத்தியிருக்கிறோம். கால்வாய் சரி செய்யும் பணி நடந்துவருகிறது. விரைவில் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும்.!” என்றார்.