Published:Updated:

`ஃபாரின் அளவுக்கு மதுரை மாறப்போகுது!'- செல்லூர் ராஜு

வைகையைக் காப்பற்ற பாண்டிய மன்னன் எடுத்த நடவடிக்கைகள் போன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

மதுரையில் செல்லூர் கண்மாயை குடிமராமத்து திட்டப் பணியையும், வைகை ஆற்றை சீர் செய்யும் பணியையும் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.

தூர்வாரும் பணி
தூர்வாரும் பணி

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ``பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை எமாற்றி 2021-ல் ஆட்சிக்கு வர நினைக்கிறது தி.மு.க. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லை என்றாலும் அவர் நினைத்த திட்டங்கள் நிறைவேறி வருகிறது. வெளிநாட்டில் இருக்கக்கூடிய வகையில் பேருந்து நிலையம் மதுரையிலும் அமையவுள்ளது. வைகையைக் காக்க தமிழக அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஃபாரின் அளவுக்கு மதுரை மாற உள்ளது.

பல பிரதான வரலாறுகளை கொண்டது மதுரை. இதனால் வைகையைக் காப்பற்ற பாண்டிய மன்னன் எடுத்த நடவடிக்கைகள் போன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். ஆனால், தமிழக அரசு செயல்படுத்தும் பணிகளை தி.மு.க செய்தது போல சித்திரிக்கப்படுகிறது. அவ்வளவு ஏன் தமிழக அரசின் பணிகளை தான் செய்தது போல ஸ்டாலின் போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

தூர்வரும் பணியை தொடங்கி வைக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ
தூர்வரும் பணியை தொடங்கி வைக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். மிக திறமையான நபர்களையும் எதிர்க்கட்சி குறை சொல்லவேண்டும் என்ற காரணத்தால் குறை சொல்கின்றனர்'' என்றார். இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.