Published:Updated:

காட்டுப்பன்றியைப் பிடிக்கச் சென்ற நபர், 5 வேட்டை நாய்கள் பலி... பின்னணி என்ன?

Electric fence ( pixabay )

மாணிக்கம் வேட்டையாடுவதற்காக அவர் வளர்த்து வந்துள்ள 5 வேட்டை நாய்களைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். மாணிக்கம் மற்றும் 5 நாய்களும் மின்சாரவேலியை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகத் தொட்டு இறந்துள்ளன.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வேட்டையாடச் சென்ற 35 வயதான மனிதரும், அவருடன் இருந்த 5 வேட்டை நாய்களும், தனியார் பண்ணையில் சட்ட விரோதமாகப் போடப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுப்பன்றியைப் பிடிக்கச் சென்ற நபர், 5 வேட்டை நாய்கள் பலி... பின்னணி என்ன?
pixabay

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்தான் 35 வயதான மாணிக்கம். இவரும் இவருடன் எல்.கருப்பசாமி மற்றும் ஆர்.மனோஜ் ஆகிய நண்பர்களும் கொண்டாயம்பட்டி அருகே காட்டுப்பன்றிகளை சனிக்கிழமை இரவு வேட்டையாடச் சென்றுள்ளனர்.

மாணிக்கம் வேட்டையாடுவதற்காக அவர் வளர்த்து வந்துள்ள 5 வேட்டை நாய்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அய்யனகௌண்டம்பட்டியில் 42 வயதான அசோக் குமார் என்பவரது பண்ணையில் காட்டுப் பன்றிகள் நுழையக் கூடாது என்பதற்காக சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளார். 

காட்டுப்பன்றியைப் பிடிக்கச் சென்ற நபர், 5 வேட்டை நாய்கள் பலி... பின்னணி என்ன?

இந்த ஆபத்தை உணராமல், மாணிக்கம் மற்றும் 5 நாய்களும் மின்சாரவேலியை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகத் தொட்டு இறந்துள்ளன. வேட்டைக்கு உடன் சென்ற கருப்பசாமி மற்றும் மனோஜ் எப்படியோ வேலியைத் தொடாமல் தப்பிப் பிழைத்தனர்.

அதைத் தொடர்ந்து அலங்காநல்லூர் காவல்துறை அதிகாரிகள் மாணிக்கத்தின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்த தற்காக அசோக்குமாரைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.