Published:Updated:

சென்னைக்கு அருகில் அமையும் வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி மையம்; விசாயிகளுக்கு என்ன நன்மை தெரியுமா?

காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள்

இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என வேளாண் விற்பனை துறை தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகில் அமையும் வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி மையம்; விசாயிகளுக்கு என்ன நன்மை தெரியுமா?

இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என வேளாண் விற்பனை துறை தெரிவித்துள்ளது.

Published:Updated:
காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள்

200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் தாலுகா நாவலுார் கிராமத்தில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முனையம் அமைக்கப்பட உள்ளது. அதில் 3 லட்சம் முதல் 5 லட்சம் கிலோ விளைபொருட்களை இருப்பு வைக்கலாம். இதன் மூலம் அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 1000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என வேளாண் விற்பனை துறை தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி
ஏற்றுமதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெர்மினலை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாவலூர் கிராமத்தில் உள்ள 35 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்துள்ளனர். மேலும் இதற்கான பணிகளை திறம் பட செய்ய உழவர் களஞ்சியம் என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள விவசாய உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து, காய்கறிகள் மற்றும் வேளாண் பொருட்களை வாங்கி, விற்பனை செய்யப்பட உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து பேசிய வேளாண் விற்பனை துறை இயக்குநர் முகமது ரபிக், ''அரசு தேர்வு செய்துள்ள 35 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, உழவர் களஞ்சியம் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முனையம் அமைக்கப்படுவதன் மூலம் 1000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும் வேளாண் விளை பொருட்களுக்கான விலை கிடைக்க வாய்ப்புள்ளது'' என தெரிவித்துள்ளார்.

வேளாண்மை
வேளாண்மை

2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, நாவலூர் கிராமத்தில் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய டெர்மினல் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் எனும் முனையம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆன நிலையில், இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism