Published:Updated:

சத்துணவுத் திட்டத்தில் தேங்காய்க்குப் பதில் நீராவைக் கொடுக்கலாமே? அரசுக்கு ஒரு யோசனை!

சத்துணவுத் திட்டம்

1939-ம் ஆண்டு காந்தி குறிப்பிட்டிருக்கிறார். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நீரா ஓர் அருமருந்து என அவர் கூறியுள்ளார். எனவே, சத்துணவுத் திட்டத்தில் சத்துள்ள நீரா பானத்தை வழங்குவதன் மூலம் பல நன்மைகள் உள்ளன.

சத்துணவுத் திட்டத்தில் தேங்காய்க்குப் பதில் நீராவைக் கொடுக்கலாமே? அரசுக்கு ஒரு யோசனை!

1939-ம் ஆண்டு காந்தி குறிப்பிட்டிருக்கிறார். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நீரா ஓர் அருமருந்து என அவர் கூறியுள்ளார். எனவே, சத்துணவுத் திட்டத்தில் சத்துள்ள நீரா பானத்தை வழங்குவதன் மூலம் பல நன்மைகள் உள்ளன.

Published:Updated:
சத்துணவுத் திட்டம்

நேற்று சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, `சத்துணவில் தேங்காய்க் கீற்று ஒன்றை சேர்ப்பதற்கு, அரசு முன்வருமா?' என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், `மதிய உணவின்போது, ஒரு தேங்காய் கீற்று வழங்கும் கோரிக்கையை, அரசு பரிசீலிக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.

பள்ளிக்குழந்தைகளுக்கு தேங்காய்க் கீற்றுகள் வழங்குவதை எப்படிப்பார்க்கலாம் என வனம் இந்தியா அமைப்பின் நிறுவனர் பாலசுப்ரமணியத்திடம் கேட்டோம்.

நீரா
நீரா

``பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தைக் கருத்தில் கொண்டும் தேங்காயின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டும் சமூக நலத்துறை அமைச்சர் இக்கோரிக்கையை பரிசீலனை செய்வதாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பள்ளி மாணவர்களின் நலம் மட்டுமல்லாமல் தென்னை விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவும் வழிவகை செய்வதாக இருக்கும். ஆனால், அரசிடம் தென்னை விவசாயிகள் சார்பில் நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் தேங்காய்க்கு பதிலாகத் தென்னை மரத்திலிருந்து சுரக்கும் நீரா பானத்தை வழங்க வேண்டும் என்பதுதான். தென்னம்பாலையில் இருந்து சுரப்பதுதான் நீரா பானம். அது சுரந்து வெளியே வந்ததும் வெப்பநிலை காரணமாகப் புளிக்கும்போது அது கள் ஆகிறது. சுண்ணாம்பு சேர்த்து இறக்கினால் அது பதநீர். இந்த மூன்று படிநிலைகளில் முதலாவது நீரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊட்டச்சத்தளிக்கும் இயற்கை பானமாக இருக்கும் நீரா குறித்து 1939-ம் ஆண்டு காந்தி குறிப்பிட்டிருக்கிறார். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நீரா ஓர் அருமருந்து என அவர் கூறியுள்ளார். எனவே, சத்துணவுத் திட்டத்தில் சத்துள்ள நீரா பானத்தை வழங்குவதன் மூலம் பல நன்மைகள் உள்ளன. தேங்காயை விடவும் நீரா பானம் சுவையாக இருக்கும் என்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவார்கள்.

பாலசுப்ரமணியம்
பாலசுப்ரமணியம்

தென்னை விவசாயிகளுக்கு தேங்காய் உற்பத்தியில் கிடைக்கும் லாபத்தைவிட நீரா உற்பத்தியின் மூலம் நான்கு மடங்கு அதிக லாபம் கிடைக்கும். தேங்காயை விநியோகிப்பதைவிட நீராவை டெட்ரோ பாக்கெட்டில் அடைத்து எளிமையாக விநியோகிக்கலாம். இது போன்று பல நன்மைகள் இருப்பதால் நீரா பானத்தை வழங்கி தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்" என்கிறார் பாலசுப்ரமணியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism