Published:Updated:

``சர்க்கரையைவிட கூடுதல் இனிப்பு; புதிய ரக கரும்பால் அதிக விளைச்சல் பெறலாம்!"- ககன்தீப் சிங்

``தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் 86032 என்ற ரக கரும்பு அதிக அளவில் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. இந்த ரக கரும்பின் மூலம் வரப்பெறும் சர்க்கரையின் அளவைக்காட்டிலும், 0.5 சதவிகிதம் கூடுதல் இனிப்புச்சுவையை சி.ஓ 11015 என்ற வகையான கரும்பு தருகிறது.''

ககன்தீப் சிங் பேடி ஆய்வு
ககன்தீப் சிங் பேடி ஆய்வு
Vikatan

``தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.ஓ 11015 என்ற புதிய ரக கரும்பை பயிரிடுவதால், குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் பெறலாம்" என்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக்குப்பின், தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

ககன்தீப் சிங் பேடி ஆய்வு
ககன்தீப் சிங் பேடி ஆய்வு

கரூர் மாவட்டம், புகளுரில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலையில், தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Vikatan

இந்நிறுவனத்தில் கரும்பு பயிரிடும் முறை குறித்தும், விவசாயிகளுக்குப் பயன்படக்கூடிய வகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்த அரசு முதன்மைச் செயலர், பின்னர் தமிழக அரசால் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.ஓ.11015 என்ற வகையான கரும்பு பயிரிடப்பட்டுள்ள வயலையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ககன்தீப் சிங் பேடி ஆய்வு
ககன்தீப் சிங் பேடி ஆய்வு
நா.ராஜமுருகன்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, ``கரும்பு விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசால் கடந்த ஆண்டு முதல் கோயம்புத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் உதவியுடனும், பல்வேறு கரும்பு தயாரிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும் வகையில், சி.ஓ 11015 என்ற வகையான கரும்பு கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் 86032 என்ற ரக கரும்பு அதிக அளவில் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது.

இந்த ரக கரும்பின் மூலம் வரப்பெறும் சர்க்கரையின் அளவைக்காட்டிலும், 0.5 சதவிகிதம் கூடுதல் இனிப்புச்சுவையை சி.ஓ 11015 என்ற வகையான கரும்பு தருகிறது. மற்ற கரும்பு ரகங்கள் முழுவதுமாக விளைய 12 மாதங்கள் ஆகும். ஆனால், சி.ஓ 11015 என்ற புதிய ரக கரும்பு 8 மாதம் முதல் 12 மாதத்துக்குள் அறுவடை செய்யும் வகையில் உள்ளது.

ககன்தீப் சிங் பேடி ஆய்வு
ககன்தீப் சிங் பேடி ஆய்வு
நா.ராஜமுருகன்

எனவே, விவசாயிகள் சி.ஓ 11015 என்ற கரும்பு ரகத்தை பயன்படுத்தினால், அதிக அளவில் மகசூல் எடுக்கலாம். தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பாக கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, கரும்பு பயிரிடும் நிலங்களுக்கும் மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன திட்டத்தைப் பயன்படுத்த கூடுதல் சலுகைகள் வழங்கியுள்ளார். மற்ற பயிர்களுக்கு வழங்கும் சொட்டுநீர்ப் பாசனத்தின் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,13,133 வழங்கப்படுகிறது. ஆனால், கரும்பு பயிரிடும் நிலங்களுக்கு கூடுதலாக ரூ.38,235 சேர்த்து, மொத்தம் ரூ.1,51,368 வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.ஓ 11015 என்ற ரக கரும்பை பயிரிட்டு பயன்பெற வேண்டும்" என்றார்.