Published:Updated:

`சிவப்பு, மஞ்சள் குறியீடு பூச்சிக்கொல்லிகள்!' -சிக்கிமைத் தொடர்ந்து நீலகிரியிலும் வருகிறது தடை?

இந்தியாவில் சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் முக்கோண வேளாண் வேதியியல் பொருள்களை தடைசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

`சிவப்பு, மஞ்சள் குறியீடு பூச்சிக்கொல்லிகள்!' -சிக்கிமைத் தொடர்ந்து நீலகிரியிலும் வருகிறது தடை?

இந்தியாவில் சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் முக்கோண வேளாண் வேதியியல் பொருள்களை தடைசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Published:Updated:

மலை மாவட்டமான நீலகிரியில் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே தேயிலை, காபி, ரப்பர் போன்ற பணப் பயிர்களும் கேரட் பீட்ரூட், டர்னிப், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட ஏராளமான மலைக் காய்கறிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆங்கிலேயர்களிடமிருந்து விவசாய முறையைக் கற்றுக் கொண்டு நீலகிரியில் வாழக்கூடிய மக்களும் இன்றளவும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக தேயிலையும் மலைக் காய்கறிப் பயிர்களும் இருந்து வருகின்றன.

Pesticides
Pesticides

தற்போது நீலகிரியில் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை விவசாயமும் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மலைக் காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மற்ற காய்கறிகளைவிட நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை மற்றும் மலைக் காய்றிகளுக்கு அதிக அளவிலான ரசாயன மருந்துகளும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் ரசாயன உரங்களைக் கொட்டி அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் மகசூல் மருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ரசாயன உரம் மற்றும் மருந்துகளால் மனிதர்களுக்குப் பல தீராத நோய்கள் ஏற்படுவதோடு சுற்றுச்சூழலிலும் பெரிய அளவு கேட்டினை ஏற்படுத்தி வருகிறது எனச் சூழலியல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Pesticides
Pesticides

இந்தநிலையில் சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக வேளாண் வேதியியல் பொருள்கள் எனப்படும் ரசாயன மருந்துகளில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் முக்கோணக் குறியீடுகளைக்கொண்ட மருந்து வகைகளுக்குத் தடை விதிப்பதற்கான முயற்சியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து தேசியப் பசுமைப்படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், ``நீலகிரியில் விவசாயப் பணிகளுக்குத் தொடர்ந்து ரசாயனங்களைப் பயன்படுத்தி வந்ததன் விளைவாக மண்ணும் நீரும் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால் நீலகிரியில் இருக்கக்கூடிய மக்களுக்கு மட்டுமல்லாது இந்த நீரைப் பயன்படுத்தும் சமவெளிப் பகுதி மக்களுக்கும் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, சருமப் பிரச்னை போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Pesticides
Pesticides

எனவே, பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனங்களுக்குத் தடை விதிப்பது உடனடித் தேவையாக உள்ளது. விவசாயிகளும் பாதிக்காதவகையில் படிப்படியாக மாற்றம் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

இதுகுறித்து வேளாண் ஆய்வாளர் மரியா பிரான்சிஸ் கூறுகையில், ``பூச்சிக் கொல்லிகள் நான்காக வகைப்படுத்தி சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை வண்ணங்களில் முக்கோணக் குறியீடுகள் இடப்பட்டிருக்கும். இதன் குறியீட்டு நிறத்துக்கு ஏற்ப அவற்றின் வீரியம் அளவிடப்படும். இவற்றில் சிவப்பு மற்றும் மஞ்சள் முக்கோணம் இடப்பட்டுள்ள வகை மருந்துகள் வீரியமிக்கவை. இந்தவகையில் ஐம்பதுக்கும் அதிகமான மருந்து வகைகள் உள்ளன. தொடர்ந்து இந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி வருவதன் மூலம் மண் மற்றும் நீர் அதன் தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது" என்றார்.

Pesticides
Pesticides

இதுகுறித்துத் தோட்டக் கலைத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், ``நீலகிரியை முழு இயற்கை விவசாய மாவட்டமாக்க கடந்த 2 ஆண்டுகளாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவப்பு மற்றும் மஞ்சள் முக்கோண வேளாண் வேதியியல் பொருள்களைத் தடை செய்ய விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism