Published:Updated:

3 டன் அன்னாசிப் பழத்தில் தயாராகும் பைனாப்பிள் ஜாம்... அசத்தும் நீலகிரி தோட்டக்கலைத்துறை!

பைனாப்பிள் ஜாம்
பைனாப்பிள் ஜாம்

குன்னுாா் சிம்ஸ் பூங்கா அருகிலுள்ள பழவியல் நிலையத்தில் 3 டன் அன்னாசி பழங்களைக் கொண்டு பைனாப்பிள் ஜாம் தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீல­கிரியில் நிலவும் காலநிலைக்கு ஏற்ப பிளம்ஸ், பேரி, பீச், ஊட்டி ஆப்­பிள், துரி­யன், மங்­குஸ்­தான், ஸ்ட்ராபெரி எனப் பல்­வேறு வகையான பழங்­கள் விளை­விக்கப்படுகின்­றன.

தோட்­டக்­க­லைத்துறை­ குன்னூர், கல்லார், பர்லியார் ஆகிய இடங்களில் அரசு பழப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

பைனாப்பிள் ஜாம்
பைனாப்பிள் ஜாம்

தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குன்னூர் பழவியல் நிலையத்தில், பேரி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களைக் கொண்டு ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்து, பூங்காக்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 டன் அன்னாசிப் பழங்களில் ஜாம் மற்றும் ஜூஸ் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதைத் தயாரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையின் பெண் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பைனாப்பிள் ஜாம்
பைனாப்பிள் ஜாம்

ஜாம் தயாரிப்பு குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அதிகாரி, "அரசின் பழ பதனிடும் மையத்தில் பழங்களைக் கொண்டு பல்வேறு வகையான பொருள்களைத் தயாரிக்கிறோம். நமது தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 300 கிராம் ஜாம் ரூ.90க்கும், 500 கிராம் ஜாம் ரூ.110-க்கும் விற்பனை செய்கிறோம். 700 மில்லி லிட்டர் கொண்ட அன்னாசி ஜூஸ் 135 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தோட்டக்கலையின் கீழ் உள்ள அனைத்து விற்பனை மையங்களிலும் இது கிடைக்கும். மேலும் 3 டன் அளவுக்கு அன்னாசியுடன் பப்பாளி உள்ளிட்ட பழங்களைக் கொண்டு மிக்ஸட் ஜாம் தயாரிக்கும் பணி நிறைவுபெற்று விற்பனை மையங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு