Published:Updated:

வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

முன்னறிவிப்பு

பிரீமியம் ஸ்டோரி

டகிழக்குப் பருவமழை குறித்துத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ம் ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்குப் பருவமழை குறித்தான முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையையொட்டியுள்ள கடற்பரப்பின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் (Australian Rainman International V.4.3 Software) எனும் கணினி கட்டமைப்பைக் கொண்டு 2021-ம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. அதன்படி,

முன்னறிவிப்பு மாவட்டங்கள் வாரியாக
முன்னறிவிப்பு மாவட்டங்கள் வாரியாக
USER

தமிழ்நாட்டில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர் மற்றும் விருதுநகர்.

தமிழ்நாட்டில் சராசரியைவிட அதிக அளவு மழை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு,

வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்,

பயிர்கள் மேலாண்மை இயக்ககம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

கோயம்புத்தூர் - 641003.

தொலைபேசி: 0422 6611319

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு