Published:Updated:

இனி சென்னையிலேயே இயற்கை விவசாய சான்றிதழ் பெறலாம்; புதிதாகத் திறக்கப்பட்ட விதைச்சான்று அலுவலகம்!

விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று புதிய இயக்குநர் அலுவலம்

அங்கக வேளாண்மை என்பது ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக் கொல்லிகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல் இயற்கை இடுபொருள்களை உபயோகப்படுத்தி சாகுபடி செய்யும் முறையாகும்.

இனி சென்னையிலேயே இயற்கை விவசாய சான்றிதழ் பெறலாம்; புதிதாகத் திறக்கப்பட்ட விதைச்சான்று அலுவலகம்!

அங்கக வேளாண்மை என்பது ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக் கொல்லிகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல் இயற்கை இடுபொருள்களை உபயோகப்படுத்தி சாகுபடி செய்யும் முறையாகும்.

Published:Updated:
விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று புதிய இயக்குநர் அலுவலம்

கோயம்புத்தூரில் இயங்கி வந்த விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் அலுவலகம், சென்னைக்கு மாற்றப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், நிர்வாகக் காரணங்களுக்காக சென்னைக்கு மாற்றப்பட உள்ளது என்று அரசு தெரிவித்திருந்தது.

புதிய இயக்குநர் அலுவலம் திறப்பு
புதிய இயக்குநர் அலுவலம் திறப்பு

இந்நிலையில் சென்னை, கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள சிறுதொழில் வளர்ச்சிக் கழக வளாக இரண்டாம் தளத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம். அலுவலகத்தை திறந்து வைத்ததோடு முழு இயற்கை விவசாயப் பண்ணை என உறுதிச் செய்யப்பட்ட 17 இயற்கை விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியபோது, ``அங்கக வேளாண்மை என்பது ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லிகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல் இயற்கை இடுபொருள்களை உபயோகப்படுத்தி சாகுபடி செய்யும் முறையாகும். இம்முறையில் நஞ்சில்லா உணவு விளைவிக்கப்பட்டு மண்வளம், மனிதவளம் மற்றும் இயற்கை சூழ்நிலை பாதுகாக்கப்படுகிறது.

உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்.
உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்.

தமிழ்நாடு அங்ககச் சான்றுத் துறை (TNOCD) 2007-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் பதிவு செய்துள்ள அங்கக விவசாயிகளின் பண்ணைகள் அங்ககச் சான்று ஆய்வாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாய்ப்புச் சான்றிதழ் மூலம் இயற்கை விவசாய விளைபொருள்களுக்கு கூடுதல் விலையும், உள்நாட்டு வணிகம் மட்டுமன்றி ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிக அளவில் கிடைக்கும்" என்றார்.

வேளாண்மைக்கான தனி நிதி நிலை அறிக்கையில், நஞ்சில்லா உணவு விளைவிக்கும் விவசாயிகளின் அங்ககவிளை பொருள்களில் உள்ள எஞ்சிய நச்சு மதிப்பீடு ஆய்வு செய்ய ஆகும் ஆய்வகக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.12.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுப்பாய்வு மாதிரி ஒன்றுக்கு ஆகும் செலவான ரூ.4720/-ஐ முழு மானியமாக விவசாயிகளுக்கு அரசால் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

நிகழ்வில்
நிகழ்வில்

தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறையில் முழு நிலையில் உள்ள 264 இயற்கை விவசாயப் பண்ணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல சான்று விதைகள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளும் இனி இந்த அலுவலகத்தை அணுகலாம்.