Published:Updated:

`12,000 லிட்டர் பஞ்சகவ்யம்; 50 டன் மண்புழு உரம்!'- ஊட்டி தோட்டக்கலைத் துறையின் புதிய முயற்சி

பூங்காக்களில் உள்ள மலர் நாற்றுகளுக்குப் பயன்படுத்த நீலகிரி மாவட்ட அரசு தோட்டக்கலைப்பண்ணையில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தோட்டக்கலைத் துறை
தோட்டக்கலைத் துறை

கோடை வாசஸ்தலமான நீலகிரியில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா இது தவிர தேயிலை பூங்கா போன்ற பூங்காக்கள் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தப் பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுகிறது.

organic fertilizer
organic fertilizer

இந்தக் கோடை விழாவுக்காகப் பல மாதங்களுக்கு முன்பே பூங்காக்கள் தயாராகும். லட்சக்கணக்கான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். இந்த மலர் நாற்றுகள் நன்கு செழித்து வளரவும் நன்கு பூக்கவும் இதுவரை ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளே பயப்படுத்தப்பட்டுவருகிறது.

Vikatan

இந்த நிலையில், இனி வரும் காலங்களில் பூங்காக்களில் உள்ள மலர் நாற்றுகள் உற்பத்திக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்த தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக குன்னூர் காட்டேரி அருகில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில், மண் புழு உரம் மற்றும் பஞ்சகவ்யம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

organic fertilizer.
organic fertilizer.

இது குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், ``ஆண்டுக்கு 12,000 லிட்டர் பஞ்சகவ்யம் மற்றும் தச கவ்யம், 50 டன் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்றுவருகிறது. இவற்றை மலர் நாற்றுகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன் விவசாயிகளுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.