Published:Updated:

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க முத்தான யோசனைகள்!

விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயம்

ஆலோசனை

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க முத்தான யோசனைகள்!

ஆலோசனை

Published:Updated:
விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயம்

விவசாயத் துறையில் தமிழக அரசு பல புதிய மாற்றங்களை உருவாக்கும் சூழல் தெரிகிறது. குறிப்பாக, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல இருப்பது முதலமைச்சரின் பேச்சு, அறிக்கைகளில் தெரிகிறது. ‘மண்ணின் வளமே மக்கள் வளம்’ என்று பசுமை விகடனின் தாரக மந்திரத்தை முதலமைச்சர் உச்சரிக்கிறார்.

இது வரவேற்புக்குரிய செயல்.

விவசாயத்துக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசு, இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவும், விவசாயிகள் நலன்களைக் கவனத்தில் கொள்ளவும் சில ஆலோசனை களை முன்வைக்கிறேன்.

இயற்கை விவசாயத்தைத் தீவிரமாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டுமென்றால், அதற்காகத் தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்கெனத் தனியான இயற்கை விவசாயக் கொள்கை ஒன்றையும் உருவாக்க வேண்டும். விவசாயி களின் அறிவு, தமிழகத்தின் விவசாயப் பண்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

அறச்சலூர் ரா. செல்வம்
அறச்சலூர் ரா. செல்வம்


வேளாண் துறையில் உள்ள அலுவலர்களுக்கு இயற்கை விவசாய வழிமுறைகள் குறித்தும் அதன் அறிவியல் குறித்தும் முறையான களப் பயிற்சி அளிக்க வேண்டும். வேளாண் விரிவாக்கத்தில் அனுபவ விவசாயிகளைப் பயன்படுத்தும் முறையை உருவாக்க வேண்டும். விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யப் பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி மையங்களைப் பரவலாக்க வேண்டும். பல்வேறு பயிர்களுக்கு ஏற்ற வகையில் சிறு கருவிகளை உருவாக்க வேண்டும்.

சூரியஒளி மின்சாரம் மூலம் ஒவ்வொரு கிணற்று மேட்டையும், வீட்டின் மாடி, கூரையையும் மின் உற்பத்தி நிலையமாக மாற்ற முடியும். அதை அரசு முன்னெடுக்க வேண்டும். உள்ளாட்சிகள் தங்களுக்கான விவசாயக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூர் சந்தைகளை உருவாக்க வேண்டும். விவசாயிகளின் கண்டு பிடிப்புகளைப் பதிவு செய்யும் வகையில் இணையதளத்தை உருவாக்கி அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பாரம்பர்ய விதைகள் பற்றிய அறிவை அதிகப்படுத்த வேண்டும். அவற்றைப் பரவலாக்கம் செய்ய வேண்டும். உள்ளாட்சிகளில் பராமரிக்கப்பட வேண்டிய உயிரினப் பன்மய பதிவேட்டில் பாரம்பர்ய விதைகளும் பதிவு செய்யப்பட வேண்டும். விதைக் கிராமங்கள் உருவாக வேண்டும்.

விவசாயம்
விவசாயம்

உள்ளாட்சிகளின் கழிவுகளை உரமாக்க பயிற்சிகள் வழங்க வேண்டும். அதிக இடங் களில் பண்ணைக்குட்டைகள் வெட்டி மழைநீர் சேமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள மழைநீர் ஓடைகளை உயிர்ப்பித்து மூன்று மாதங்களாவது தண்ணீர் ஓடச் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டப் பணியாளர்களை விவசாய வேலைகளுக்கு முழுமையாகப் பயன் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பாரம்பர்ய பயிர் வகையிலும் இயற்கை விவசாய விளைச்சல் போட்டிகளை மாவட்ட, மாநில அளவில் நடத்த வேண்டும். விதை, உணவுத் திருவிழாக்கள் அதிக அளவில் நடத்த வேண்டும். தமிழகத்தில் தற்போதுள்ள பி.டி பருத்தி தவிர வேறு எந்தப் புதிய பயிர்களுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் இடமில்லை என்றும், வயல்வெளியில் சோதிக்க அனுமதி இல்லை என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இயற்கை விவசாயப் பண்ணைகளின் தர அளவை அறிவதற்கான இணையதளம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும்.

இன்னும் இதுபோன்ற ஆலோசனைகள் உள்ளன. அதை வாசிக்க கீழே உள்ள க்யூ.ஆர் கோடுகளை ஸ்கேன் செய்யவும். லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://www.vikatan.com/news/agriculture/what-state-govt-should-do-to-make-tamilnadu-into-a-fully-organic-farming-state

https://www.vikatan.com/news/agriculture/farmer-activist-lists-out-suggestions-to-tn-govt-for-improving-tamilnadu-farmers-lives

அறச்சலூர் ரா. செல்வம்,

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு.

க்யூ.ஆர். கோடு
க்யூ.ஆர். கோடு