இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி உலக அளவில் பெருத்த சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் கொந்தளிப்பில் ராஜபக்சே அரசு வீழ்ந்துள்ளது. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சே அரசு திடீர் நடவடிக்கையாக இயற்கை விவசாயத்துக்குத் திரும்பியதுதான் காரணம் என்கிற கருத்து ஒரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது. இக்கருத்தின் உண்மைத்தன்மை அறிய பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்துவிடம் பேசினோம்.

"இலங்கையில் ராஜபக்சே அரசின் மோசமான நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவின் விளைவாகவே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மொத்த பழியையும் தூக்கி இயற்கை விவசாயத்தின் மீது சுமத்துவது ஏற்புடையதல்ல. இலங்கையில் ஏதோ நேற்றுதான் இயற்கை விவசாயத்தை நோக்கிய நகர்வு ஏற்பட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜபக்சேவுக்கு முந்தைய ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியிலேயே இயற்கை விவசாயத்தை நோக்கிய முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை ஒட்டி அங்கு ரவுண்ட் அப் எனும் பூச்சிக்கொல்லி தடை செய்யப்பட்டது. ராஜபக்சே அரசும் இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு காட்டியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSராஜபக்சே அரசு இயற்கை விவசாயத்தை முன் நிறுத்தும் பொருட்டு ஒட்டுமொத்தமாக ரசாயன உரங்கள் இறக்குமதியைத் தடை செய்தது. உலக அளவிலேயே ரசாயன உரங்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இச்சூழலில் ரசாயன உரங்கள் தவிர்த்த இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்புவதுதான் ஒரே தீர்வு என்கிற முடிவுக்குள் பலரும் வந்திருக்கின்றனர். அவ்வகையில் ராஜபக்சே அரசு முழுவதுமாக இயற்கை விவசாயத்தைக் கொண்டு வர முனைந்ததில் எந்தத் தவறும் இல்லை. ரசாயன உர இறக்குமதியின் டீலர்ஷிப் எதிர்கட்சியினர் வசம் இருந்ததால் அதனை உடைக்கும் அரசியல் நோக்கும் அம்முடிவில் இருந்தது. முற்றிலும் ரசாயனங்களைத் தவிர்த்த இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு மட்டுமே ஓர் நாடு தன்னிறைவு அடைய முடியுமா? என்று பலரும் கேட்கின்றனர். நிச்சயமாக முடியும். க்யூபா போன்ற நாடுகளை அதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.

Also Read
உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் இயற்கை விவசாயிகள் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் நம்மாழ்வார் போன்று இயற்கை விவசாயத்துக்காக பலரும் பணியாற்றியதால் நம்மிடம் இயற்கை விவசாயத் தொழில்நுட்பமும் நிபுணத்துவமும் இருக்கிறது. அத்தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்க பல நிபுணர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் இயற்கை விவசாயம் குறித்தான தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை. அதனைப் பயிற்றுவிக்கும் நிபுணர்களும் இல்லை என்கிற போது, தடாலடியாக இயற்கை விவசாயத்துக்கு மாறுவது மோசமான விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதால் ராஜபக்சே அரசின் இம்முடிவு தவறானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சீனாவிலிருந்து இயற்கை இடுபொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அவற்றில் ரசாயனக்கலப்பு இருப்பது கண்டறியப்பட்டு பல்லாயிரம் டன் இடுபொருட்கள் பயன்படுத்த முடியாமற்போனதும் முக்கிய இழப்பு. இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்ததால்தான் இப்பிரச்னை என்று பொதுவாக சொல்லக்கூடாது... அதனை எப்படி செயல்படுத்துவது என்கிற தெளிவான திட்டமிடல் இல்லாததே காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே பார்த்தாலும் 4 சதவிகித அளவில்தான் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறபோது இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு அதனைக் காரணமாகச் சொல்வது முரணானது.

இலங்கையின் பொருளாதாரம் தேயிலை உற்பத்தி, டெக்ஸ்டைல் மற்றும் சுற்றுலா சார்ந்துதான் உள்ளது. கொரோனாவின் விளைவால் தேயிலை ஏற்றுமதி தடைபட்டது. சுற்றுலாவும் முற்றிலுமாக நின்று போனது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதனை நிகர் செய்யத் தேவையான பொருளாதாரம் சார்ந்த தெளிவோடு அரசின் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். தவறான கொள்கை முடிவுகள் வகுக்கப்பட்டதோடு கொள்ளையும் நடந்தேறியதன் விளைவைத்தான் நாம் இலங்கையில் பார்க்கிறோம். பொருளாதார சரிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கையில்தான் இயற்கை விவசாயத்துக்கு முற்றிலும் மாறுவது என்கிற முடிவு எடுக்கப்படுகிறது.

சரியான முடிவு கூட முறையாக செயல்படுத்தாவிட்டால் தோல்வியில்தான் முடியும். அப்படித்தான் இயற்கை விவசாயத்தை நோக்கிய நகர்வும் தோல்வியில் முடிவடைந்தது. எனவே இயற்கை விவசாயத்தின் மீது பழியைப் போடாமல், ராஜபக்சே அரசின் தவறான கொள்கை முடிவுகளே இதற்குக் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் நடந்தது இந்தியாவுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இன்றைக்கு உலக அளவில் ரசாயன உரங்களுக்கான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இயற்கை விவசாயத்தை நோக்கிய நகர்வைத் தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம். தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னோடி இயற்கை விவசாயிகள் உள்ளனர். இயற்கை வேளாண் பயிற்சிகளை இவர்களைக் கொண்டு அரசு முன்னெடுக்கலாம்" என்கிறார் அனந்து.