Published:Updated:

`மாநிலங்களை மத்திய அரசு மிரட்டுகிறது'- பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!

நெல்லுக்கு உரிய விலை
நெல்லுக்கு உரிய விலை

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலை கொடுக்கும் மாநிலங்களை மத்திய அரசு மிரட்டுகிறது.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலை கொடுக்கும் மாநிலங்களை மத்திய அரசு மிரட்டுகிறது. இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் நாகை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், நேற்று (14.12.2019) நாகை மாவட்டம் சீர்காழியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். ``மத்திய அரசு விவசாயத்தை மேம்படுத்துவதற்கான வகையில் நெல் உட்பட உற்பத்தி பொருள்களுக்கு லாபகரமான விலை கொடுக்க மறுக்கிறது. தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதோடு விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை மேற்கொள்ளுகின்ற சதிச் செயலில் மறைமுகமாக ஈடுபடுகிறது.

விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கும் அதே நேரத்தில் ரிலையன்ஸ், டாட்டா நிறுவனங்களுக்குத் தற்போது ரூ.36,000 கோடிகளை தள்ளுபடி செய்கிறது. நெல் கொள்முதலை முற்றிலும் கைவிட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து வாங்கும் உற்பத்திப் பொருள்களின் சக்தியை உயர்த்தாமல், இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

நெல் குவிண்டால் 1-க்கு ரூ.2,500/- விலை கொடுக்கும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களை, அதைக் கைவிட வேண்டும் என்று வற்புறுத்தி மத்திய அரசு மிரட்டுவதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வரும் 17-ம் தேதி நெல் குவிண்டால் 1-க்கு தமிழக அரசு ரூ.2,500 வழங்க வலியுறுத்தி, சென்னை ஜார்ஜ் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு