Published:Updated:

வேளாண்மை பட்ஜெட் விவசாயிகளின் கோரிக்கையை... அமைச்சரிடம் வழங்கிய பசுமை விகடன்!

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நாட்டு நடப்பு

வேளாண்மை பட்ஜெட் விவசாயிகளின் கோரிக்கையை... அமைச்சரிடம் வழங்கிய பசுமை விகடன்!

நாட்டு நடப்பு

Published:Updated:
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

‘வேளாண்மைக்கு... தனி பட்ஜெட்!’ வேண்டும் என்கிற நீண்டகாலக் கோரிக்கை, கடந்த ஆண்டுத் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றி வைக்கப்பட்டுவிட்டது. தேசிய அளவிலும் இப்படி வேளாண்மைக்குத் தனிப் பட்ஜெட் வேண்டுமென்கிற கோரிக்கைக் குரல்கள் ஒலித்தபடியே இருக்கின்றன.

இந்நிலையில், இரண்டாவது ஆண்டாகத் தமிழ்நாடு வேளாண்மைக்கான மாநில தனி பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் மும்முரமாகியுள்ளன. வருகின்ற 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய ஆக்கப்பூர்வமான அம்சங்கள் குறித்து அரசுத் தரப்பில் ஆலோசனைகள் நடக்கின்றன. அதற்கு உதவும் வகையில், கடந்த ஆண்டைப் போலவே விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளைப் பசுமை விகடன் தொகுத்திருக்கிறது. அதை, வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் பசுமை விகடன் ஆசிரியர் குழுவினர் அண்மையில் நேரில் சந்தித்து வழங்கினர்.

பரிந்துரைகளை ஆர்வமாகப் படித்த அமைச்சர், ‘‘தமிழ்நாட்டின் வேளாண்மை வளர்ச்சிக்குப் பசுமை விகடனும் உதவி வருகிறது. வெறும் எழுத்து பணியுடன் நின்று விடாமல், விவசாயிகளின் தேவைகள், பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்து தீர்வுகளையும் தேடி தருகிறது பசுமை விகடன் இதழ். வேளாண்மைத்துறை அமைச்சர் என்ற வகையிலும், அடிப்படையில் நானும் ஒரு விவசாயி என்பதாலும், உங்களுக்கு முதலில் என் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடந்த ஆண்டு வேளாண்மைக்கான முதல் தனிபட்ஜெட் தயாரிப்புப் பணியிலிருந்தபோது, விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். பல தரப்பிலிருந்தும் பரிந்துரைகளைப் பெற்றோம். அப்போது, பசுமை விகடன் வழங்கிய பட்ஜெட் பரிந்துரைகளும் கிடைத்தன. அவற்றில் சில பரிந்துரைகள் பட்ஜெட்டிலும் இடம்பெற்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கு வழங்கியுள்ள பட்ஜெட் பரிந்துரைகளையும் நிச்சயமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்.

பட்ஜெட் பரிந்துரைகள் மட்டுமல்லாமல், வேளாண்மை - உழவர் நலத்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள், ஆலோசனைகளையும் பசுமை விகடன் வழங்கினால், வாய்ப்பு உள்ளவற்றைச் செயல்படுத்த தயாராக உள்ளேன்’’ என்று சொன்னார்.

வேளாண்மை பட்ஜெட்டில் நிறைய விஷயங்கள் இடம்பெற்றாலும், இன்னமும் பல விஷயங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது குறித்து அமைச்சரிடம் கேட்டோம்.

‘‘அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அறிவிக்கப்படவிருக்கிற திட்டங்கள் அனைத்துமே நிச்சயம் செயல்படுத்தப்படும். இந்த விஷயத்தில் மாநிலத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, அடுத்தடுத்து நிறைவேற்றுவோம்’’ என்று உறுதியான குரலில் சொன்னார் அமைச்சர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism