Published:Updated:

தண்ணீர் மட்டும் கொடுங்கள் போதும் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்பு குழுவினர்!

தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டியும் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதியை அறிவிக்க வேண்டும் என்பதே எங்களுடைய முதற்கட்ட குறிக்கோள் தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டும்.

காவிரி உரிமை மீட்பு குழு
காவிரி உரிமை மீட்பு குழு

காவிரி ஆறு காவிரி நீர் எல்லாமே இன்றைக்கு பிரச்சினைக்குரிய வார்த்தைகளாக மட்டுமே இருக்கின்றது காவிரி நீர் சார்ந்த பிரச்சினைகள் இன்றைக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு ஜூன் 12ஆம் தேதி காவிரியில் இருந்து நீர் திறக்கப்படும் அதை வைத்து தான் தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதி மக்கள் குறுவை சாகுபடியை செய்து வந்தனர் ஆனால் இன்றைய நிலைமை இப்போது ஏன் ஜுலை 1ம் தேதி காவிரியிலிருந்து நீர் வரவில்லை மக்களுக்கு அதற்கான எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை மழையும் பொய்த்து போன நிலையில் காவிரி ஆறுகளில் இருந்து வருடா வருடம் வரும் இந்த நீரை வைத்து தான் குறுவை சாகுபடி செய்து டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது சரியான நேரத்தில் தண்ணீர் வழங்கப்படாமல் பிரச்சினைக்குரிய ஒரு செயலாகவே இருந்தது இருந்து வருகிறது தமிழகத்திற்கு தேவையான நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் அந்த உத்தரவையும் மீறி தமிழகத்திற்கு கொடுக்கக் கூடிய நீரை கர்நாடக அரசு பதுக்கி வைத்து உள்ளது என்றும் காவிரி ஆணையத்திற்கு ஆனா முழு நேர தலைவரை நியமிக்க கூறியும் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் இன்றைக்கு திருவாரூரில் மொத்தமாக எட்டு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

காவிரி உரிமை மீட்பு குழு
காவிரி உரிமை மீட்பு குழு

தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டியும் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதியை அறிவிக்க வேண்டும் என்பதே எங்களுடைய முதற்கட்ட குறிக்கோள் தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டும் என்றோம் காவிரி உரிமை மீட்பு குழுவினர் இன்று காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை வாசகங்களை ஏந்தி போராட்டம் செய்துவருகின்றனர் .எங்களை வாழ வைக்க அவர்கள் அள்ளிக் கொடுக்க வேண்டாம் எங்களுக்கான உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம் எங்களுடைய உரிமை எங்களுக்கான நீரை எங்களுக்கு வழங்குவது ஆனால் அரசும் மக்களைப் பற்றிய எந்த கவலையுமின்றி மெத்தன போக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

எத்தனை விஷயத்திற்காக தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பது ஆனால் இன்றைக்கு சோறு தின்பது என்றால் போராடித்தான் ஆகவேண்டும் என்ற நிலைமைக்கு நாங்கள் வந்திருக்கிறோம் எங்கள் மக்களுக்காக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தான் கொடுக்க வேண்டும் எங்களுக்காக பேசுவதற்காக கூட ஒரு தலைவரை கூட நியமிக்காமல் இருக்கின்றது இந்த அரசு எனவே காவிரி ஆணையத்திற்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும் எங்கள் உரிமையை எங்களுக்காக கொடுக்கவேண்டும்.

எங்களை வாழ வைக்க அவர்கள் அள்ளிக் கொடுக்க வேண்டாம் எங்களுக்கான உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

சோலைவனத்தை பாலைவனம் ஆக்குவதில் இவர்களுக்கு என்னதான் அத்தனை மகிழ்ச்சி என்று தெரியவில்லை எங்கள் உரிமையை எங்களுக்கான வாழ்க்கையை நாங்கள் வாழத்தான் ஆனால் அதற்குக் கூட இங்கு போராட வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம் என்றனர் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்பு குழுவினர் திடீரென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர் எங்கள் உரிமைக்காக போராடி நின்ற எத்தனை கைது வந்தாலும் சரி எத்தனை சிறை செல்ல வேண்டிய நிலை வந்தாலும் சரி எங்களுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று கூறினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் .