Published:Updated:

குளத்தில் குடியிருப்பு... ஏரியில் விவசாயம்! சாட்டையை எடுக்குமா நீதிமன்றம்?!

குடியிருப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
குடியிருப்பு

நீர்நிலை

நீர்நிலைகள் என்பவை, காலகாலமாகக் காப்பாற்றப்பட வேண்டியவை. அவை தான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான உண்மை யான சொத்து. நீர்நிலை ஆக்கிர மிப்பாளர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”

- இப்படி பல ஆண்டுகளாகவே நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் எச்சரிக்கை விடுத்தபடியேதான் உள்ளன. ஆனால், நீதிமன்றங் களும் தீர்ப்பாயங்களும் எத்தனை தடவை சொன்னாலும், `நாங்க தான் இங்க ராஜா. எங்களை யாராலும் அசைக்க முடியாது’ என்கிற இறுமாப்புடன் திரியும் அதிகார வர்க்கம், அரசியல்வாதி களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு ஆக்கிரமிப்பு விஷயத்தில் வெறித்தனமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஆக்கிரமிப்பு புகார்கள் மீதான நீதிமன்ற, பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது இந்த அதிகார வர்க்கம். அப்படி மிதிபட்டுக் கொண்டிருக்கும் ஒரு வழக்கு பற்றித்தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். இந்த வழக்கு, நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளை பொதுப்பணித்துறையும் வருவாய் துறையும் எப்படி கையாள்கின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணம்!

ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்பு


ஒரு பானை சோற்றுக்கு ஒரு துளி பதம் என்பதுபோல் செங்கல்பட்டு மாவட்டம், முகையூர் கிராமத்தில் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, ஏரியில் விவசாயமும் நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பு குறித்தான வழக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்திலும், அதை எதிர்க்கும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானோர் வழக்கு உயர் நீதிமன்றத்திலும் உள்ளது. இது சம்பந்தமான கட்டுரை விகடன் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.



அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்க https://www.vikatan.com/government-and-politics/environment/how-govt-failed-to-remove-encroachments-in-mugaiyur-village-lake-and-pond