Published:Updated:

``வேளாண்மை துறைக்கும், விவசாயிகளுக்கும் என்ன இணைப்பு இருக்கிறது?!" - கேட்கிறார் பி.ஆர்.பாண்டியன்

பி.ஆர்.பாண்டியன்

``கடலில் போகும் தண்ணீரை கிராமப்புறங்களுக்கு கொண்டு போகிறோம் என்று எடுத்த முயற்சியை வரவேற்கிறோம். ஆனால், அதே நேரத்தில் அதற்கான திட்டமிடல் ஏதும் இல்லாமல், யாருடைய ஆலோசனையில் திறந்தார்கள் என்று தான் தெரியவில்லை” - பி.ஆர்.பாண்டியன்

``வேளாண்மை துறைக்கும், விவசாயிகளுக்கும் என்ன இணைப்பு இருக்கிறது?!" - கேட்கிறார் பி.ஆர்.பாண்டியன்

``கடலில் போகும் தண்ணீரை கிராமப்புறங்களுக்கு கொண்டு போகிறோம் என்று எடுத்த முயற்சியை வரவேற்கிறோம். ஆனால், அதே நேரத்தில் அதற்கான திட்டமிடல் ஏதும் இல்லாமல், யாருடைய ஆலோசனையில் திறந்தார்கள் என்று தான் தெரியவில்லை” - பி.ஆர்.பாண்டியன்

Published:Updated:
பி.ஆர்.பாண்டியன்

நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து, தேவையான வேளாண் உபகரணங்களை மலிவு விலையில் வழங்க மானியம் வழங்கி வருகிறது. ஆனால், அதிகாரிகள் வெளி மார்க்கெட்டில் குறைவான விலைக்கு உபகரணங்களைக் கொள்முதல் செய்து விவசாயிகளிடம் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்றும், அதிலும் மானியங்களைக் கழித்துக்கொண்டு, விவசாயிகளின் பங்களிப்பு தொகை என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

விவசாயம்
விவசாயம்

2021-22 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 11 கோடி, தோட்டக்கலைக்கு 5 கோடி, வேளாண் பொறியியல் கல்லூரிக்கு 211 கோடி என மொத்தம் 227 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடுகளின் அடிப்படையில் கடந்த மே 23-ம் தேதி கலைஞரின் அனைத்து கிராமங்கள் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள ஊராட்சிகளிலேயே தற்போது முதல்வர் தொடங்கி வைத்துள்ள கலைஞரின் அனைத்து கிராமங்கள் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில் 1997 ஊராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரங்கள், தார்ப்பாய்கள், வேளாண் உபகரணங்கள் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில்தான் விவசாயிகள் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தகவல்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் சில கேள்விகள் முன்வைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

``விவசாய நலத்திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றாட்டுகள் எழுந்துள்ளதே?”

``தொகுப்புகள் வழங்குவதில் ஊழல் நடக்கிறதா, நடக்கவில்லையா என்று தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளே கிடையாதே. ஏனெனில் திட்டங்களுக்கான பயனாளிகள் விவசாயிகளின் கருத்து கேட்டா தேர்வு செய்ப்படுகிறார்கள், திட்டம் போடுகிறார்கள். இல்லையே! விவசாய தேவையில், பணிகளில் ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒன்றியத்திற்கும் வேறுபாடுகள் இருக்கும். மேலே இருந்து அறிவிக்கக் கூடிய திட்டங்களுக்கான பயனாளிகளையும் சேர்த்தே அறிவித்து நிகழ்ச்சிகள் நடத்தி திட்டங்களை செயல்படுத்துகிறார்களே தவிர உண்மையில் யாருக்கு என்ன வேண்டும் என்பதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் தான் இது போன்ற குளறுபடிகள். அடுத்து அண்ணா, கலைஞர் பெயரில் இலவசம் எல்லாம் வேண்டாம். அந்த இலவசம் எல்லாம் தொகுத்து நீங்கள் சொன்னது போல் நெல், கரும்பு மற்றும் மற்ற விளைப்பொருட்களுக்கான விலையை கொடுத்தல் போதும்”

விவசாயம்
விவசாயம்

``அப்படி என்றால் அரசு அறிவிக்கும் நல திட்டங்கள் கடைகோடி விவசாயிக்கும் சென்றடைவதில்லையா?”

``பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள். அதை வரவேற்கிறோம். ஆனால், யானை பசிக்கு சோள பொரி போல் பெயர் அளவில் தான் நிதிகள் ஒதுக்குகிறார்கள். அதனால் எந்த திட்டங்களும் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைவதில்லை”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இதற்கான தீர்வுகள் தான் என்ன?”

``முதலில் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்கிற பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்வதாக தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ஆதாரவிலை அரசு நிர்னையம் செய்து, அந்த விலைக்கு குறைவில்லாமல் விற்பனை செய்து பணம் கிடைப்பதற்கான உத்திரவாதம் தான் அரசு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறோம். அரசு ஒரு இடைத்தரகராக இருந்து உற்பத்தி செய்கிறவர்கள் என்ன பொருள் உற்பத்தி செய்கிறார்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும். உள்நாட்டு வணிகர்கள் வைத்து கொள்முதல் செய்வதோடு, மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றம் செய்து ஏற்றுமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும்  சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்”

விவசாயம்
விவசாயம்

``அதை எப்படி சாத்தியப்படுத்துவது?”

``விவசாயத்தில் தொழில்நுட்பம் ஏராளமாக இருக்கிறது. சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தான் இல்லை. நிரந்திரமான சந்தை வசதியும் இங்கு இல்லை. மிகை உற்பத்தி காலங்களில் அடிமாட்டு அளவில் கொள்முதல் செய்கிறார்கள். அப்படி பதுக்கியதை, உற்பத்தி குறைவு காலத்தில் மக்களிடம் பல மடங்கு உயர்த்தி விற்கிறார்கள். அந்த நிலமை ஏன் வர வேண்டும். அதற்கு தான் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணையம் செய்ய கேட்கிறோம். அந்த ஆதாரவிலைக்கு குறைவில்லாமல் மிகை உற்பத்தி காலத்திலும் கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுங்கள். ஆதார விலைக்கு குறைவில்லாமல் எந்த நிறுவனம் கொள்முதல் செய்கிறதோ அதற்கு ஒப்பந்தம் போடுங்ககள். அதற்காகத்தான் ‘சந்தை ஒப்பந்தம்’ வேண்டும் என்கிறோம். அடுத்து விவசாயிகளுக்கு கிராமப்புறங்களில் உற்பத்தி குழுக்களை உருவாக்க வேண்டும். அந்த குழுக்களுக்கு என்ன மூலதனம் கொடுத்திருக்கிறார்கள். அது ஏதுமே இல்லாமல் வாயால் வடை சுட்டால் எப்படி?”  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அதற்கான முன் முயற்சி ஏதும் அரசு எடுக்கவில்லையா?”

``என்ன முன் முயற்சி எடுத்திருக்கிறார்கள். கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்கும், கிராம உள்ளாட்சி அமைப்புகளில் மண்புழு வளர்ப்புக்கும், குப்பைகளை மக்கா குப்பை, மக்கும் குப்பை என தரம் பிரித்து அதை எருவாக்கி விவசாயிகள் பயன்படுத்துவதற்கு என்ன கூட்டு அமைப்பு இங்கு இருக்கிறது. அதற்கான அறிவிப்புகளாக மட்டும் தானே உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்து மூன்று மாதங்கள் ஆகிறது. எந்த நிதியும் இதுவரை ஒதுக்கப்படவில்லையே. நிதி இல்லாமல் பட்ஜெட் போடுவது என்பது அறிவிப்பு மட்டும்தானே. நிதி ஆதாரம் என்றால் உள்ளாட்சி துறை, 100 நாள் வேலைத்திட்டம், உள்ளாட்சி அமைக்கு ஒதுக்கப்படுகிற நிதி, தூய்மை இந்தியா திட்டம், கிராமப்புற மேம்பாடு என்கிற பெயரில் மத்திய அரசு கொடுக்கிற நிதிகள் என எல்லாம் கிராமப்புற அடிப்படையான வேளாண்மைக்கு தானே. ஆனால், அதற்கான கட்டமைப்பு, ஊழல், முறைகேடுகள் இல்லாமல் இருக்க விவசாயிகளுடன் இணைந்து கூட்டு அமைப்பாக செயல்படுவதற்கான நடவடிக்கைகள் இங்கு என்ன இருக்கிறது?”

``அப்படி என்றால் அரசு விவசாயிகளை விட்டு விலகியிருக்கிறதா?”

``வேளாண்மை என்கிற துறைக்கும் விவசாயிகளுக்கும் என்ன இணைப்பு இங்கு இருக்கிறது. திட்டம் தேவை என்றால் அதற்கு என்ன நிதி ஒதுக்குகிறோம். அந்த தேவை யார் சொல்கிறார். அதை யார் கண்காணிக்க போகிறார். என்கிற திட்டமிடல் இல்லையே. மாவட்ட ஆட்சியர் கூட்டங்களில் கூட ஆளுகிற கட்சியின் மாவட்டச் செயலாளர், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தான் மாவட்ட விவசாய கூட்டத்தை நடத்துகிற நிலை தமிழநாட்டில் உருவாகி இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் நடத்தும் அந்த கூட்டம் அரசு போடுகிற திட்டங்களை சொல்லி குறை தீர்ப்பதற்குதான். ஆனால், விவசாயிகள் சுதந்திரமாக கருத்து செல்ல அனுமதிப்பதில்லை. வேளாண்மைக்கான எந்த ஒரு ஆலோசனை குழுக்களிலும் விவசாயிகள் இடம் பெறவில்லை என்பதுதான் சோதனை. சமீப காலங்களில் இந்த நெருக்கடி பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்திருக்கிறது”

``குறைகள் தெரிந்தால் தானே அதற்கான தீர்வுகள் கிடைக்கும்?”

``ஆமாம்... ஆனால் இங்கு விவசாயிகள் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. விவசாயிகள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. விவசாயிகளுக்கு ஒதுக்கப்படுகிற நிதிகளை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு கொண்ட குழுக்கள், வேளாண்மைக்காக நிர்வகிக்கப்படும் குழுக்கள் போன்றவைகளில் விவசாயிகள் இடம் பெறுவதில்லை. மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டங்களை ஆளுங்கட்சி பிரமுகர்களால் கருத்து சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் தன்னிச்சையாக செயலபட முடியவில்லை. விவசாயிகளுக்கான தேவைகள் அறிந்து திட்டங்கள் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. அதேபோல் வேண்மைக்கென்று ஒதுக்கீடு செய்யும் நிதியை கண்காணிப்பதற்கும் விவசாயிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. அதில் வெளிப்படை தன்மையும் கிடையாதே. இப்படி இருக்கும் போது வேளாண்மைக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் எப்படி எல்லோருக்கும் சென்றடையும்”

ஸ்டாலின், எடப்பாடி
ஸ்டாலின், எடப்பாடி

``விவசாயிகளின் முதல்வர் என்றெல்லாம் சொல்கிறார்களே...?”

``அது அவரவர் விருப்பம்.  அதற்குள் நான் கருத்து சொல்ல முடியாது. விவசாயி தன் கை எடுத்து தன் கண்ணையே குத்திக்கொள்ளும் நிலையைதான் அரசாங்கம் திட்டங்களாக போடுகிறார்கள். அதே போல் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏட்டளவில் தானே இருக்கிறது. செயல்பாட்டிற்கு வந்தால் தானே பயன்பற்றி சொல்ல முடியும்”

``இடுபொருள் விலை ஏற்றமாக உள்ளது. விளை பொருள் விலை குறைவாக இருக்கிறது. ஏன் இந்த முரண்?”

``இது இரண்டுமே மத்திய அரசு கொள்கை சார்ந்த விஷயம். அதை மாநில அரசு தனதாக்குவதற்கு என்ன வழியோ அதை பற்றி கலந்துரையாடல் நடத்தி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரத்திற்கான உற்பத்திக்கு மானியம் கொடுப்பது, விலை நிர்ணையம் செய்வதெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உற்பத்தி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை. அது குறித்து தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மூன்று மாதத்திற்கான உர மானியமாக ரூ.66 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், உரவிலை கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. தமிழ்நாடு அரசு, உற்பத்தி நிறுவனங்களை கேட்காமல் வணிக நிறுவனங்களை தான் மிரட்டுகிறார்கள். ‘இதை நீ இடுபொருளாக கொடுத்தால் தான் நான் உனக்கு யூரியா தருவேன்’ என்று உற்பத்தி நிறுவனங்களும் சேர்ந்து வணிக நிறுவனங்களை மிரட்டுகிறது. இதில் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். இது குறித்து தமிழக அரசிடம் பல முறை சொல்லியாச்சு. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

``ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், இந்த ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திறக்கப்பட்டது சரியான நடவடிக்கையா?”

``காவிரி நீர் கடலில் கலக்க போகிறது என்று அச்சப்பட்டு திறந்தார்கள். கடலில் போகும் தண்ணீரை கிராமப்புறங்களுக்கு கொண்டு போகிறோம் என்று எடுத்த முயற்சியை வரவேற்கிறோம். ஆனால், அதே நேரத்தில் அதற்கான திட்டமிடல் ஏதும் இல்லாமல், யாருடைய ஆலோசனையில் திறந்தார்கள் என்று தான் தெரியவில்லை. இயற்கையான பாசன கட்டமைப்புகளை கொண்டது காவிரி. தென்மேற்கு பருவ மழை தொடங்கிய பிறகு 12 நாள் கழித்து திறக்கும் மரபு ஏன் பின்பற்றப்பட்டது என்றால், இரவு நேரங்களில் கோடை மழை துளி டெல்டாவில் இருக்கும். பூமி குளிரும். வர நீர் பாசனப்பகுதிகளுக்கு போகும். இப்போது கடுமையான வெப்பம் நிலவும் நேரத்தில் மே மாதம் தண்ணீர் திறந்தால் அது எப்படி வயல்வெளிக்கு கொண்டு போக முடியும். அதேபோல் தூர்வாருவதற்கு குறைவான நிதிஒதுக்குகிறார்கள். 2019ஆம் ஆண்டும் ரூ.80 கோடி தான் ஒதுக்கினார்கள். இப்போதும் அதேதான். ஆனால் ரூ.80 கோடிக்கான தூர்வாரும் பணி எவ்வளவு தூரத்திற்கு செய்ய முடியும்?”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism