Published:Updated:

மகசூலைக் கூட்டும் 'மண்புழு உரநீர்' உற்பத்தி!

தொழில்நுட்பம்

பிரீமியம் ஸ்டோரி

ண்ணின் வளத்தை அதிகப் படுத்தவும், மகசூலைப் பெருக்கிடவும், ‘மண்புழு உரநீர் கட்டுமான’ தொழில்நுட்ப அமைப்பை அறிமுகப்படுத்தி விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறது, கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திரத்தில் இயங்கி வரும் இயற்கை வள அபிவிருத்தி மையம்.

இது தொடர்பாகப் பேசினார் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணன். ‘‘மண்புழுக்கள், தங்களின் உணவை உட்கொண்டு வெளியேற்றும் கழிவுதான் மண்புழு உரம். மண்புழு தன் உடலின் வெளிப்புறத்தை ஈரமாக வைத்திருக்க அவை வியர்வை போன்ற ‘செலோமிக்’ என்ற திரவத்தைச் சுரக்கும். அதன் மூலம் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. இந்தத் திரவத்தைச் சேகரித்துப் பயன் படுத்தப்படும் உத்திதான் ‘மண்புழு உரநீர்.’

மண்புழுக்களின் உணவுப் பாதையில் சுரக்கும் பல்வேறு வகையான என்சைம்கள், அமினோ அமிலங்கள் இந்தத் திரவத்தில் அடங்கி இருப்பதால், இது மிகச்சிறந்த நுண்ணூட்டச் சத்து. இது வளர்ச்சி ஊக்கியாகவும், நுண்ணுயிர் பெருக்கியாகவும் செயல்படுகிறது” என்றார்.

மண்புழு உரநீர் கட்டுமான அமைப்பது எப்படி?

மண்புழு உரநீர் கட்டுமான அமைப்பை அமைப்பது குறித்து ஆராய்ச்சி உதவியாளர் பிரேமலதா சொல்லிய தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

மண்புழு உரநீர் கட்டுமானத்தை அமைப்பதற்கு நிழலான மற்றும் காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். சாணம் கொட்டும் இடம், உரக்கிடங்கு, மேல்நிலை தண்ணீர்த் தொட்டிக்கு அருகில் அமைத்தால் மனித உழைப்பு மிச்சமாகும்.

1. தேர்வு செய்த இடத்தைக் கட்டியான மண் தரையாகச் சமப்படுத்தி 6 அடி அகலம், 6 அடி நீளம் மற்றும் 1 அடி உயரத்திற்குச் செங்கற்களை அடுக்கிக்கொள்ள வேண்டும். இதை மேடை என்றழைப்போம். வசதி இருப்பவர்கள் சிமென்ட்டாலும் இதே அளவில் மேடை அமைத்துக் கொள்ளலாம்.

மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு


மீன் வலையையும் பயன்படுத்தலாம்

2. மேடை அமைக்கப்பட்ட பிறகு, பிளாஸ்டிக்கால் ஆன சிறிய அளவிலான துளைகள் கொண்ட வலையை 6 அடி அகலம், 18 அடி நீளத்திற்கு வெட்டிக் கொள்ள வேண்டும் (இதற்கு மீன்பிடி வலையையும் பயன்படுத்தலாம். மீன்பிடி வலை என்றால், இதே அளவில் இரண்டு அல்லது மூன்று அடுக்குச் சுற்றாகச் சுற்றுவதற்கு ஏற்றாற்போல வாங்கிக் கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட பழைய மீன் வலையைக்கூட வாங்கிக் கொள்ளலாம்).

3. பிளாஸ்டிக் வலையின் நான்கு ஓரங்களையும் சைக்கிள் டயர் கொண்டு தைத்துக் கொள்ள வேண்டும் (வட்ட வடிவ டயரை வெட்டி நீளமாக்கிக் கொள்ளலாம்), சைக்கிள் டயரின் உள்ளே நைலான் கயிறை வைத்து வலையுடன் சேர்த்து தைக்க வேண்டும். இப்படி டயரால் இணைத்துக் கட்டுவதால் வலை மடியாமல் இருக்கும். பிறகு வலையை உருளை வடிவத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்(பார்க்க படம்). வலைகளை நிறுத்துவதற்கு மூங்கில் கம்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

4. உருளையாக இணைக்கப்பட்ட வலைக்கட்டுமான அமைப்பின் உட்பகுதியைச் சுற்றிலும் ஒரு வரிசை செங்கற்களை அடுக்கி வைக்க வேண்டும். இதனால், வலைக்கட்டுமானம் உறுதியாக நிற்கும். வலைக்கட்டுமானத்திற்குள் முதலில் இலை தழைகளுடன் மட்கிய சாணம் கலந்து அரையடி உயரத்திற்குப் போட வேண்டும். அதன் மீது, மூடியுடன் கூடிய 20 காலியான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை 2 அடி இடைவெளியில் இலைதழைகளுக்குள் அமுக்கிச் செங்குத்தாக நிறுத்தி வைக்க வேண்டும். இதனால், மண்புழுக்களுக்குக் காற்றோட்டம் கிடைக்கும்.

அதிக உப்புத்தண்ணீர் கூடாது

5. காய்ந்த இலைதழைகள், தொழுவுரம், 5 தண்ணீர் பாட்டில்கள் கொண்ட 10 சாக்கு மூட்டைகளைக் கிடைமட்டமாக அடுக்கி வைக்க வேண்டும். இதுதான் ஓர் அடுக்கு. அடுத்ததாக இதன் மீது, மீண்டும் அரையடி உயரத்திற்கு இலை தழைகளுடன் மட்கிய சாணம் நிரப்பி, 20 தண்ணீர் பாட்டில்களை நிறுத்த வேண்டும். அதன் மீது மீண்டும் 10 சாக்கு மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். இப்படியாக 6 அடுக்குகள் அடுக்க வேண்டும். வலையமைப்பின் மீது தண்ணீர் விடுவதற்காக, மேல் பகுதியில் சொட்டுநீர்க் குழாயை வட்ட வடிவமாக அமைத்துக்கொள்ள வேண்டும். இலை தழைகள், மட்கிய சாணத்தில் உள்ள வெப்பம் தணிவதற்காக 3 நாள்கள் முழுவதும் சொட்டுநீர் மூலம் தண்ணீரை விட வேண்டும். இதற்காகப் பயன்படுத்தும் தண்ணீர் அதிக உப்புத்தன்மையுடன் இருக்கக் கூடாது.

6. நான்காவது நாள், 3 முதல் 5 கிலோ மண்புழுக்களை வலைக் கட்டுமானத்தின் மேற்பரப்பில் விட வேண்டும். இக்கட்டுமானத்தின் மேற்பகுதியில் வெயில் படாமல் இருக்கவும், பறவைகள் மண்புழுக்களைக் கொத்திச் செல்லாமல் இருக்கவும் காய்ந்த தென்னங்கீற்றுகளால் மூடி விடலாம்.

மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு
மண்புழு உரநீர் தயாரிக்கும் கட்டுமான அமைப்பு


6 மாதத்தில் இரண்டு மடங்காகும் மண்புழுக்கள்

7. தினமும் 5 மணி நேரம் சொட்டுநீர்க் குழாயில் தண்ணீர்விட்டால் போதும். மண்புழு உர நீர் கட்டுமானம் அமைத்ததிலிருந்தது முதல் 6 நாள்கள்வரை கிடைக்கும் நீரைச் சேகரிக்க வேண்டாம். 7-ம் நாளிலிருந்தது மண்புழு உரநீரைச் சேகரிக்கலாம்.

8. 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மண்புழு உரநீரைக் கலந்து பயிர்களுக்குக் கைத்தெளிப்பானால் தெளிக்கலாம். பாசனநீரிலும் கலந்து விடலாம். 3-ம் மாதத்தில் கட்டுமானத்தின் உயரம் குறைந்து காணப்படும். அப்போது மீண்டும் 2 முதல் 3 அடுக்கு உரக்கலவையை நிரப்பிக் கொள்ளலாம். 6 மாதத்திற்குப் பிறகு இந்தக் கட்டுமானத்தை முழுவதுமாகப் பிரித்து மீண்டும் அமைக்கலாம்.

9. பிரிக்கப்பட்ட கட்டுமானத்திலுள்ள சாக்குகள், பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மண்புழு உரத்தை நிழலில் கொட்டி மண்புழுக்களைத் தனியே பிரித்தெடுக்க வேண்டும், மண்புழு உரத்தைக் காய வைத்து அடியுரமாகப் பயன்படுத்தலாம். ஒன்று முதல் ஒன்றரை டன் வரை மண்புழு உரமும், 8 முதல் 10 கிலோ வரை தரமான மண்புழுக்களும் கிடைக்கும்.

10. செங்கற்களைக் கொண்டு ஒரு மண்புழு உரக்கட்டுமான அமைப்பு அமைக்க 3,000 முதல் 4,000 ரூபாய் வரை செலவாகும். 6 அடி உயரம்தான் அமைக்க வேண்டும் என்பதில்லை. குறைந்தபட்சமாக 3 அடி உயரத்தில்கூட இந்தக் கட்டுமான அமைப்பை அமைக்கலாம்.

மண்புழு உரம்
மண்புழு உரம்
ராமகிருஷ்ணன், பிரேமலதா, ராஜாமணி
ராமகிருஷ்ணன், பிரேமலதா, ராஜாமணி

தினமும் 200 லிட்டர் மண்புழு உரநீர்

மண்புழு உரநீரின் பயன்பாடுகள் குறித்துப் பேசிய ஆராய்ச்சி உதவியாளர் ராஜாமணி, ‘‘இது செலவு குறைந்த ஒரு எளிதான தொழில்நுட்பம். தினசரி மேற்பார்வை தேவையில்லை. அதிக இடம் தேவைப்படாது. கட்டுமானப் பணியும் அதிகம் இல்லை. ஒரு மண்புழு உரநீர் தொட்டி அமைத்தால் நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் வரை மண்புழு உரநீர் கிடைக்கும். இதை 5 முதல் 20 ஏக்கர் நிலப்பரப்புக்குப் பயன்படுத்தலாம். இந்தத் தொட்டிகளில் விடப்படும் மண்புழுக்கள், 5 முதல் 6 மாதங்களில் பல மடங்காகப் பெருகிவிடுகிறது.

இந்த மண்புழுக்களைத் தனியாக விற்பனை செய்வதன் மூலம் உபரி வருமானம் கிடைக்கும். இதைக் கோழி, மீன்களுக்குத் தீவனமாகவும் கொடுக்கலாம். 6 மாதங்களில் 4 முதல் 5 டன் வரை தரமான உரமும் கிடைக்கும்.

மண்புழு உரநீரைப் பயன்படுத்துவதால், நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் மண்புழுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பயிர்களில் பூக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் காய்களின் சுவையும் தரமும் நன்றாக இருக்கும். 20 சதவிகிதம் வரை மகசூல் அதிகரிக்கிறது. ரசாயன உரம் பயன்படுத்தப்பட்ட நிலத்தை உழவு செய்து மண்புழு உர நீரை நிலத்தில் தொடர்ச்சியாகப் பாய்ச்சுவதால் மண்ணை வளமாக்கி இயற்கை விவசாயத்திற்கு ஏற்றபடி மாற்றிவிட முடியும்” என்றார்.


தொடர்புக்கு:

இயக்குநர்,

இயற்கை வள அபிவிருத்தித் திட்டம்,

விவேகானந்தா கேந்திரம்,

விவேகானந்தாபுரம்,

கன்னியாகுமரி - 629 702

தொலைபேசி: 04652 246296

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு