Published:Updated:

வேளாண் மண்டல விதிமுறைகள்... நிறைகளும் குறைகளும்!

வேளாண் மண்டல விதிமுறைகள்
பிரீமியம் ஸ்டோரி
வேளாண் மண்டல விதிமுறைகள்

அடுத்தகட்டம்

வேளாண் மண்டல விதிமுறைகள்... நிறைகளும் குறைகளும்!

அடுத்தகட்டம்

Published:Updated:
வேளாண் மண்டல விதிமுறைகள்
பிரீமியம் ஸ்டோரி
வேளாண் மண்டல விதிமுறைகள்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கான விதிமுறைகள் குறித்துத் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனால் டெல்டாவைப் பசுமை மண்டலமாகப் பாதுகாக்கப்படுதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக, டெல்டா விவசாயிகளின் மனதில் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே இப்பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணெய்-எரிவாயு திட்டங்களால் இப்பகுதி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மிகப்பெரும் பேரிடியாக, நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அபாயத் திட்டங்கள் இப்பகுதி விவசாயிகளை அச்சுறுத்த தொடங்கின. அத்தகைய பேராபத்துகளிலிருந்து காவிரி டெல்டா விவசாயத்தைத் தற்காத்துக்கொள்ள, இதைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துச் சட்டம் இயற்ற வேண்டும்’ என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது. இக்கோரிக்கையை வலியுறுத்தித் தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்தான், கடந்த பிப்ரவரி மாதம், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்கான சட்ட முன்வடிவும் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் டெல்டா மக்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்தாலும்கூட, ஆங்காங்கே எண்ணெய்-எரிவாயு கிணறு விரிவாக்கம், கெயில் குழாய் பதிப்பு போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஜெயராமன், பாரதிச்செல்வன், வெ.ஜீவக்குமார்
ஜெயராமன், பாரதிச்செல்வன், வெ.ஜீவக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையில், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதால், இங்கு மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவக்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறை வகுக்கப்படவில்லை என்ற உண்மையைப் போட்டு உடைத்தது, தமிழக அரசு. இது விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து 10.9.20 தேதியிட்ட இதழில் ‘மணல் குவாரி... கெயில் குழாய்... பரிதவிக்கும் வேளாண் மண்டலம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் டெல்டா மக்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில்தான் ஆகஸ்ட் 16-ம் தேதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவரிக்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

‘‘இச்சட்டத்தின் குறிக்கோள்களாக ஐந்து கூறுகள் சொல்லப்பட்டுள்ளன. விவசாயம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளால் விவசாயப் பரப்புப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது. ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மை செயல்பாடுகளால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மேம்படுத்துவது. வேளாண் பணியில் நீரைப் போதுமான அளவிற்குச் சரியாகப் பயன்படுத்துதல், வெள்ளப்பெருக்கை மேலாண்மை செய்தல், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை வளர்த்தெடுப்பது, வேளாண்மை மற்றும் இதன் தொடர்புடைய துறைகளின் திறன், ஆய்வு மற்றும் மேம்பாட்டை வளர்த்தெடுத்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேளாண் வளர்ச்சிக்காக... வேளாண்மைத்துறையானது... தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை துறைகளுடன் ஆலோசித்து, விரிவான ஒரு திட்டத்தைத் தயாரித்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையத்திடம் ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 30 மற்றும் டிசம்பர் 30 என ஆண்டுக்கு இரண்டு முறை, வேளாண் முன்னேற்ற நிலவரம் குறித்த அறிக்கையை ஆணையத்திற்கு வேளாண் துறை சமர்ப்பிக்க வேண்டும்.

காவிரி டெல்டா மக்களின் உடனடி எதிர்பார்ப்பு, கடந்த ஆண்டு, எரிவாயு நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்ட திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பதே.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையத்தின் பணிகளும் இதில் வரையறுக்கப்பட்டுள்ளன. மண், நீர், இயற்கைப் பரப்பைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஆலோசனைகளை வழங்குதல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மேலும் சேர்க்க வேண்டிய பகுதிகள் குறித்துப் பரிந்துரை வழங்குதல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் ஏற்படுத்த வேண்டிய வேளாண்மை சார்ந்த தொழில்கள் குறித்து ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. ஆணையத்திற்குப் பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் வழங்க வேளாண்மைத்துறைச் செயலாளர் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறை இயக்குநர், தோட்டக்கலை இயக்குநர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தொழிற்சாலைகள் மற்றும் வணிகத் துறைக்கான இயக்குநர். கால்நடைப் பராமரிப்புத் துறையின் இயக்குநர் உள்ளிட்டோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில், நாம் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்காவிட்டாலும், ஏதும் இல்லாத நிலையில் இச்சட்டம் ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும் என்ற வகையில் இதை வரவேற்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன், ‘‘எந்தெந்த தொழில்கள் இங்கு அனுமதிக்கப்படும், எவையெவை அனுமதிக்கப்பட மாட்டாது என ஏற்கெனவே சட்ட முன்வடிவில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக எண்ணெய்-எரிவாயுத் தொழில்களும், ரசாயன தொழிற்சாலைகளும் இங்கு அனுமதிக்கப்படமாட்டாது எனச் சொல்லப்பட்டுள்ளது.

வேளாண் மண்டல விதிமுறைகள்... நிறைகளும் குறைகளும்!

காவிரி டெல்டா மக்களின் உடனடி எதிர்பார்ப்பு, கடந்த ஆண்டு, எரிவாயு நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்ட திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். எரிவாயு திட்டங்களைச் செயல்படுத்த, மக்களின் கருத்துக்கேட்பும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் தேவையில்லையென மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள 2020-சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டெல்டா உழவர்கள் அச்சமடைந்துள்ளார்கள். அந்த ஆபத்திலிருந்து, தற்போதைய வேளாண் மண்டல சட்டம் பாதுகாக்குமா எனத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளில் ஒருவருமான வெ.ஜீவக்குமார் ‘‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் தற்போது உயிர் பெற்றுள்ளது. காவிரி டெல்டாவை, பசுமை மண்டலமாகக் கண்டிப்பாகப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.வேளாண் மண்டல ஆணையத்திற்குப் பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப வல்லுநர் குழுவில் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடம்பெறாததும் பெரும் குறை. இக்குழுவில் அரசு அலுவலர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளார்கள். இவர்கள் விவசாயிகளின் நலன் சார்ந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே இக்குழுவில் விவசாயிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism