Published:Updated:

வேளாண் சட்டம்: `இன்று எங்களுக்கு துரோக தினம்!' - ராகேஷ் டிகாயித்

ராகேஷ் டிகாயித் ( Twitter Photo: @RakeshTikaitBKU )

``விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த மத்திய அரசு அளித்த கடிதத்தின் அடிப்படையிலேயே, கடந்த டிசம்பர் 9-ம் தேதி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், மத்திய அரசு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை." - ராகேஷ் டிகாயித்

மத்திய அரசு 2020-ல் மூன்று வேளாண் திருத்த சட்டங்களைக் கொண்டு வந்தது. அந்த மூன்று சட்டங்களும் தங்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி பல மாநிலங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் மக்கள் ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில், பலவிதமாகப் போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில், மூன்று வேளாண் திருத்த சட்ட மசோதாக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அதிகாரபூர்வ உத்தரவாதம் அளிப்பதாகவும், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால், இதுவரையில் மத்திய அரசு குறிப்பிட்டது போல இன்னும் எந்தச் சட்டத்தையும் நிறைவேற்றவில்லை என பாரதிய கிசான் யூனியன் சங்க தலைவர் ராகேஷ் டிகாயித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

``விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த மத்திய அரசு அளித்த கடிதத்தின் அடிப்படையிலேயே, கடந்த டிசம்பர் 9-ம் தேதி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், மத்திய அரசு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, மத்திய அரசைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் `துரோக தினம்' அனுசரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Rakesh Tikait
Rakesh Tikait

ராகேஷ் டிகாயித்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, விவசாயிகள் இன்று 31 ஜனவரி திங்களை விவசாயிகளுக்கு எதிரான துரோக தினமாக அனுசரித்து வருகின்றனர்.