Published:Updated:

திண்டுக்கல்: கிடப்பில் காய்கறிக்கழிவு மின்சாரத் திட்டம்; மீண்டும் தொடங்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

காய்கறிக் கழிவில் மின்சாரம் தயாரிப்பு நிலையம்

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளில் துப்புரவுப் பணியாளர்கள் 440 பேரை 15 குழுக்களாகப் பிரித்து குப்பைக் கழிவுகளை சேகரித்து வருகிறோம். நாளொன்றுக்கு 92 மெட்ரிக் டன் கழிவுகள் உருவாகின்றன. இதில் 45 டன் ஈரக்கழிகவுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

திண்டுக்கல்: கிடப்பில் காய்கறிக்கழிவு மின்சாரத் திட்டம்; மீண்டும் தொடங்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளில் துப்புரவுப் பணியாளர்கள் 440 பேரை 15 குழுக்களாகப் பிரித்து குப்பைக் கழிவுகளை சேகரித்து வருகிறோம். நாளொன்றுக்கு 92 மெட்ரிக் டன் கழிவுகள் உருவாகின்றன. இதில் 45 டன் ஈரக்கழிகவுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

Published:Updated:
காய்கறிக் கழிவில் மின்சாரம் தயாரிப்பு நிலையம்

திண்டுக்கல் மாநகராட்சியில் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு பயோ கேஸ் தயாரித்து அதை மின்சாரமாக மாற்றும் திட்டம் 2013-2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காகத் திண்டுக்கல் மாநகரில் வீடுகள், காய்கறிச் சந்தைகள், திருமண மண்டபங்களில், ஹோட்டல்கள், வீடுகளில் சேகரிக்கப்படும் பசுமைக் கழிவுகளான காய்கறிக் கழிவுகளைக் கொண்டு 400 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மின்சாரம் தயாரிப்பு நிலையம்
மின்சாரம் தயாரிப்பு நிலையம்

திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலை பின்புறம் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 5 மெட்ரிக் டன் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டப் பணிகள் நடைபெற்றன. 2017-ம் ஆண்டு திட்டப் பணிகள் நிறைவு பெற்று அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள நீரேற்று நிலையம், மாநகராட்சி வார்டுகளில் தெரு விளக்குகளுக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனால் மாநகராட்சிக்கு மின் கட்டணம் 5,000 ரூபாய் வரை மிச்சமானது.

அறிவிப்பு பலகை
அறிவிப்பு பலகை

மேலும், பயோ-கேஸ் உற்பத்திக்குப் பிறகு, கிடைக்கும் கழிவுகளை விவசாய நிலங்களுக்கு உரமாகப் பயன் படுத்தப்பட்டது. திண்டுக்கல் மக்களால் பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டத்துக்கு திறப்பு விழா நடந்து ஓராண்டு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. பிறகு, இத்திட்டம் செயல்படாமல் முடங்கியது. இதனால் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயோ-கேஸ் தயாரிக்கும் நிலையத்தில் உள்ள அரவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் அனைத்தும் துருப்பிடித்து வீணாகிக்கொண்டிருக்கின்றன.

திட்டம் தொடங்கப்பட்டது குறித்த அறிவிப்பு
திட்டம் தொடங்கப்பட்டது குறித்த அறிவிப்பு

கடந்த 4 ஆண்டுகளாக அதிகாரிகளால் நடத்தப்பட்டு வந்த நிர்வாகம் தற்போது நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிக்கப்பட்டு திண்டுக்கல் மாநகராட்சிக்கு பெரும்பான்மையான தி.மு.க கவுன்சிலர்களைக் கொண்டு முதல் பெண் மேயரும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பயோ-கேஸ் மூலம் மின்சாரம் எடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வருமா எனத் திண்டுக்கல் மக்கள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் சுரேஸ் குமாரிடம் பேசினோம். ``திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளில் துப்புரவு பணியாளர்கள் 440 பேரை 15 குழுக்களாகப் பிரித்து குப்பைக் கழிவுகளை சேகரித்து வருகிறோம். நாளொன்றுக்கு 92 மெட்ரிக் டன் கழிவுகள் உருவாகின்றன. இதில் 45 டன் ஈரக்கழிகவுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. தற்போது 35 டன் கழிவுகளைப் பயன்படுத்தி உரம் தயாரிக்க 9 பிளான்ட்கள் அமைத்துள்ளோம். கடந்த ஆட்சியில் 5 டன் கொள்ளளவு கொண்ட பயோ-கேஸ் தயாரிப்பதற்கான நிலையம் அமைக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் திட்டத்தைத் தொடங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேறொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.

திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சி

மாநகராட்சி மேயர் இளமதியிடம் பேசியபோது, ``காய்கறி உள்ளிட்ட ஈரக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். அப்போது தான் அதுகுறித்த முழுமையான விஷயம் கிடைக்கும். கடந்த ஆட்சியில் தொடக்கப்பட்ட இத்திட்டம் தோல்வியடைந்துவிட்டது. அங்கிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை மின்வாரியம் வாங்கி கொள்ள தயாராக இல்லை. எனவேதான் அத்திட்டம் முடங்கிவிட்டது. முழுமையான ஆய்வுக்குப் பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இளமதி
இளமதி

மாநகராட்சியின் அதிகாரியோ திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூற, அதற்கு மாற்றாக மேயரின் கருத்து முரணாக இருக்கிறது. அ.தி.மு.க-வின் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக மின்தட்டுபாடு உள்ள இந்நேரத்தில் நல்ல திட்டத்தை முடக்கி விட வேண்டாம் என்பது திண்டுக்கல் மாநகரவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.