Published:Updated:

மீன் வளர்ப்பு தொழில் தொடங்க வழிகாட்டும் கருத்தரங்கு! சென்னையில் மே 5 முதல் 7 வரை நடைபெறும்!

மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு மிகவும் இலாபகரமான தொழில் . மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புபவர்கள் 'மீன் மற்றும் இறால் வளர்ப்பு' கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்.

மீன் வளர்ப்பு தொழில் தொடங்க வழிகாட்டும் கருத்தரங்கு! சென்னையில் மே 5 முதல் 7 வரை நடைபெறும்!

மீன் வளர்ப்பு மிகவும் இலாபகரமான தொழில் . மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புபவர்கள் 'மீன் மற்றும் இறால் வளர்ப்பு' கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்.

Published:Updated:
மீன் வளர்ப்பு

ஆசிய மீன்வள சங்கத்தின் இந்தியக்கிளை மற்றும் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்திய மீன்வளம் மற்றும் நீருயிரி வளர்ப்பு கருத்தரங்கு, சென்னையில் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் மூன்று நாட்கள் நடைபெறவிருக்கின்றன. இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் உதவியுடன் விவசாயிகளுக்காக இலவசக் கருத்தரங்கும் நடைபெறவிருக்கிறது. இது குறித்து அப்பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்புத்துறையின் இயக்குநர் டாக்டர். ஸ்டீபன் சம்பத்குமாரிடம் கேட்டபோது...

"மீன் வளம் குறித்து இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரும் கருத்தரங்கு இது. ஆசிய மீன் வளச்சங்கம்தான் முதலில் இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்தது. அதன் தொடர்ச்சியாக ஆசிய மீன் வளச்சங்கத்தின் இந்தியக்கிளை இக்கருத்தரங்கை நடத்துகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதன் 12-வது கருத்தரங்கு முதன்முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. 2021-ம் ஆண்டே நடத்தப்பட வேண்டிய இக்கருத்தரங்கு கொரோனா சூழல் காரணமாக தற்போது நடத்தப்படுகிறது.

ஸ்டீபன் சம்பத்குமார்
ஸ்டீபன் சம்பத்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இக்கருத்தரங்குக்கு இந்தியா முழுவதிலும் உள்ள நீருயிரி வள ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிப்பார்கள். நீருயிரி வளம் குறித்து இந்திய அளவில் என்னென்ன விதமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதன் முடிவு மற்றும் பயன்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது பற்றி பேசப்படும். நீருயிரி வளத்தினைப் பெருக்க அரசு எந்த விதமான திட்டங்களை செயல்படுத்தலாம் என்றும் நீருயிரி வளர்ப்பு சார்ந்த தொழில் நுட்பங்களை பயனாளிகளுக்கு எவ்விதம் கொண்டு சேர்க்கலாம் என்று உரையாடுவதே இக்கருத்தரங்கின் நோக்கம்.மேலும், அகில இந்திய அளவில் உள்ள மீன் வள ஆராய்ச்சி நிலையங்களின் தொழில்நுட்பங்கள், கண்டுப்பிடிப்புகளின் கண்காட்சியும் உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூன்று நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இறுதி நாளான 7-ம் தேதி காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை நீருயிரி வளர்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது. மீன், இறால் போன்ற நீருயிரிகள் வளர்ப்பு ஏரி, குளங்கள், நன்னீர், உப்பு நீர் என எல்லா விதமான நீர் நிலைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. மீன் வளர்ப்பில் கண்டறியப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிமுகத்தை மீன் வளர்ப்பவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதே இக்கருத்தரங்கின் நோக்கம்.

அறிவிப்பு
அறிவிப்பு

நீருயிரி வளர்ப்பு சாதனையாளர்கள் மற்றும் முன்னோடி பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தையும், மீன் வளர்ப்பின் நுட்பங்களையும் பகிர்ந்து கொள்வர். மீன் வளர்ப்பு மிகவும் இலாபகரமான தொழில் என்பதால் விவசாயிகளும் மீன் வளர்ப்பில் ஈடுபடலாம். எனவே, பண்ணையாளர்கள் மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புபவர்கள் என அனைவரும் 'மீன் மற்றும் இறால் வளர்ப்பு' கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்.

இக்கருத்தரங்கு அமர்வுக்கு மட்டும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை. மீன் வளர்ப்பில் உள்ள தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு புதிதாக மீன் வளர்ப்பில் ஈடுபடவும், பண்ணையாளர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் இக்கருத்தரங்கு வழிவகை செய்வதாக இருக்கும்" என்று அழைப்பு விடுத்தார் ஸ்டீபன் சம்பத்குமார்.

இந்த நிகழ்ச்சிக்கு பசுமை விகடன் இதழ் ஊடக ஆதரவு வழங்கியுள்ளது. மே 7-ம் தேதி நடைபெறவுள்ள 'மீன் மற்றும் இறால் வளர்ப்பு' கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://bitly.ws/qsSn

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism