Published:Updated:

`90% நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது!’- சிவகங்கை ஆட்சியருக்கு நீதிபதி பாராட்டு

ஜெயகாந்தன் - ஆட்சியர்
ஜெயகாந்தன் - ஆட்சியர்

நீர்நிலைகளைச் சுத்தம் செய்ய புதிய ஜே.சி.பி இயந்திரங்கள் வாங்கி 90% நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியரை உயர்நீதிமன்ற நீதிபதி பாராட்டினார்.

சிவகங்கை மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பதை உணர்ந்த அப்போதைய மன்னர்கள் ஊருக்கு, ஊர் கோயில்களையும் குளங்களையும் அமைத்துள்ளனர். அதனால் சிவகங்கையில் அதிகப்படியான கண்மாய்கள் உள்ளன.

கல்லல் கண்மாயில் ஆட்சியர்ன ஆய்வு செய்தபோது.
கல்லல் கண்மாயில் ஆட்சியர்ன ஆய்வு செய்தபோது.

இதனால் வறட்சியான சமயத்தில் தேக்கிய நீர்களைப் பயன்படுத்திவந்தனர். காலப்போக்கில் ஆக்கிரமிப்பு ஆதிகரித்து நீர்பிடிப்பு இடங்கள் குறைந்தன.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் நீர்நிலைகளுக்கு வரும் வரத்துக் கால்வாய்களை சுத்தம் செய்ய 20 புதிய பொக்லைன் வாகனங்களை வாங்கி மாவட்டம் முழுவதும் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இதனால் பல்வேறு கண்மாய்கள் கண்டுபிடிக்கப்பட்டு தூர்வாரப்பட்டன. அதைத் தொடர்ந்து மழையும் கைகொடுத்தால் மாவட்டம் முழுவதும் அனைத்து நீர்பிடிப்பு கண்மாய்களும் நிறைந்தன.

சீரமைக்கப்பட்ட தஞ்சாகூர் கண்மாயைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர்
சீரமைக்கப்பட்ட தஞ்சாகூர் கண்மாயைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர்

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் தஞ்சாகூரைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் கண்மாய் தூர்வாருவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ``சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற உத்தரவைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. சீமைக் கருவேலமரம் அகற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற அவரது நடவடிக்கையால் சிவகங்கை மாவட்டத்தில் 90% நீர்நிலைகள் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பயன்பெற்றுள்ளன.

கலெக்டர் ஜெயகாந்தன்
கலெக்டர் ஜெயகாந்தன்

எதிர்கால நோக்கோடு நீர்நிலைகளைத் தூர்வார புதிதாக பொக்லைன் இயந்திரங்களையும் மாவட்ட ஆட்சியர் வாங்கியுள்ளார். இது பாராட்டத்தக்கது" எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு