Published:Updated:

தொடர் மழை, நோய்த் தாக்குதல்... விலையேறும் சின்ன வெங்காயம்!

வெங்காயம்
வெங்காயம்

வைகாசி, புரட்டாசி மற்றும் தை பட்டங்களில் சின்ன வெங்காயமானது பயிரிடப்பட்டு சமீபகாலமாக கார்த்திகை பட்டத்திலும் பயிரிடப்படுவதால் ஆண்டு முழுவதும் சந்தைக்கு வெங்காய வரத்து உள்ளது.

இந்தியாவில் சின்ன வெங்காயமானது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெருமளவு பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. வைகாசி, புரட்டாசி மற்றும் தை பட்டங்களில் சின்ன வெங்காயமானது பயிரிடப்பட்டு சமீபகாலமாக கார்த்திகைப்பட்டத்திலும் பயிரிடப்படுவதால் ஆண்டு முழுவதும் சந்தைக்கு வெங்காய வரத்து உள்ளது.

சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம்

இத்தகைய சூழலில் புரட்டாசி, கார்த்திகை பட்டங்களில் பெரம்பலூர், துறையூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயமானது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாக உற்பத்தி மற்றும் தரம் குன்றிக் காணப்படுகிறது. தொடர்ச்சியான மழை மற்றும் ஏதுவான காலநிலையின் காரணமாக இந்தத் தாக்கங்கள் வெங்காயம் பயிரிடப்படும் பகுதிகளில் சுமார் 9,000 ஹெக்டேர் பரப்பில் காணப்படுவதாக வர்த்தக மூலகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாகத் திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிடப்படும் முக்கிய பகுதிகளில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

வெங்காயம்
வெங்காயம்

விலை மற்றும் சந்தை ஆய்வுகளின்படி நல்ல தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை வரும் காலங்களில் கிலோவுக்கு 50 ரூபாய்க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விலை உயர்வு வரும் அறுவடைக் காலமாகிய மார்ச் 21 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு,

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயமுத்தூர்-641 003. தொலைபேசி- 0422-2431405

வேளாண்மைப் பல்கலைக்கழகம்
வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தொழில்நுட்ப விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்

காய்கறிப் பயிர்கள் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் - 641 003. தொலைபேசி எண் :- 0422-6611374

அடுத்த கட்டுரைக்கு