Published:Updated:

உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம்: விவசாயத்தில் ராணுவத்தை களமிறக்கிய இலங்கை அரசு..!

இலங்கை ராணுவ வீரர்கள்

இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசுக்குச் சொந்தமான 1,500 ஏக்கர் தரிசு நிலத்தில் ராணுவ வீரர்களை உணவு உற்பத்தியில் ஈடுபடுத்தி உள்ளது இலங்கை அரசு.

உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம்: விவசாயத்தில் ராணுவத்தை களமிறக்கிய இலங்கை அரசு..!

இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசுக்குச் சொந்தமான 1,500 ஏக்கர் தரிசு நிலத்தில் ராணுவ வீரர்களை உணவு உற்பத்தியில் ஈடுபடுத்தி உள்ளது இலங்கை அரசு.

Published:Updated:
இலங்கை ராணுவ வீரர்கள்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு இல்லாததால் இலங்கையில் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் இலங்கையில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இலங்கை அரசு
இலங்கை அரசு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணவு மிகவும் முக்கியம் என்பதால் உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது இலங்கை அரசு.

அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு குறுகிய கால தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பொருள்களை பெற மக்கள் நீண்ட நெடிய வரிசையில் காத்திருக்கும் நிலை உண்டாகியுள்ளது. எனவே, உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கவும், அரசுக்கு சொந்தமான 1,500 ஏக்கர் தரிசு நிலத்தில், ராணுவ வீரர்களை உணவு உற்பத்தியில் ஈடுபடுத்தியுள்ளது இலங்கை அரசு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்காக பசுமை விவசாய வழிகாட்டல் குழுவை ராணுவம் உருவாக்கியுள்ளது. இந்த ராணுவக் குழு முதலில் வேளாண் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, தேர்ந்தெக்கப்பட்ட நிலத்தில் விதைகளைப் பயிரிட முடிவு செய்துள்ளது. நிலத்தை களையெடுப்பது, உழுவது போன்ற நிலத்தைப் பண்படுத்தும் செயலிலும் ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க
ரணில் விக்கிரமசிங்க

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ``அடுத்த 6 மாதங்களுக்கு இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும்" எனத் தெரிவித்தார்.

வழக்கமாக நாட்டைக் காக்கும் பணியில்தான் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மாறாக, விவசாயம் செய்ய வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபடுத்தியுள்ளது. இது சர்வதேச நாடுகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism