Published:Updated:

முன்வருவாரா முதல்வர்?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

முன்வருவாரா முதல்வர்?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

தி.மு.க அரசின் ‘ஓராண்டு சாதனைகள்!’ கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

‘வேளாண்மைக்கு... தனி பட்ஜெட்!’ எனும் நீண்டகால கோரிக்கை, நிறைவேறியுள்ளது; ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டையும் தவிர, சொல்லிக்கொள்ளும்படி விவசாயத்துக்காகவும் விவசாயிகளுக்காகவும் எதையும் சாதிக்கவில்லை என்பதே உண்மை. வேதனைகள் நீடிக்கவே செய்கின்றன!

ஒரு சோறு பதமாக... நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 ரூபாய் வரையிலும் விவசாயிகளிடம் கொள்ளையடிக்கப்படுவதை, ‘முதலமைச்சருக்கு சவால் விடும் ஊழல் பேய்கள்’ என்கிற தலைப்பில் கட்டுரை மற்றும் வீடியோவாகக் கடந்த ஆண்டு பசுமை விகடன் வெளியிட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு, ‘நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுவோருக்கு ஊதியம் உயர்த்தப்படுகிறது. புகார்களுக்கு இடமளிக்காமல் பணியாற்றுங்கள்’ என்று தஞ்சாவூர் நிகழ்ச்சியில் உற்சாகமாகச் சொன்னார் முதல்வர். கூடவே, விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் அரசு அலுவலர்கள் மீது ஒரு சில நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், இவையெல்லாம் வழமைபோல வெறும் கண்துடைப்பு என்பதே உண்மை. இன்றைக்கும்கூட 60 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்காமல், தாம் விளைவித்த நெல்லை விவசாயிகளால் விற்க முடியாத சூழலே நீடிக்கிறது. இப்படி, வேதனைகளின் பட்டியல் வெகு நீளமே!

காவல் நிலையங்களுக்குச் செல்வது, பள்ளி மாணவர்களிடம் நேரடியாக உரையாடுவது, பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் நலம் விசாரிப்பது என்று மக்களோடு மக்களாக வலம் வரும் முதல்வர், கழனிக்காடுகளைத் தேடிச் சென்று உண்மையான விவசாயிகளுடன் கலந்துரையாடல் செய்யவும் முன்வர வேண்டும். அப்படி களத்தில் இறங்கினால்தான், ‘ஓராண்டு கால ஆட்சியில் விவசாயத்துக்கு செய்தது சாதனையா... இல்லையா?’ என்கிற உண்மை அவருக்குத் தெரியவரும். வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் களைகளையும் அகற்ற முடியும்.

முன்வருவாரா முதல்வர்?

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism