Published:Updated:

`பொங்கல் முடியும்வரை பாதுகாக்கணும்!' - நீதிமன்றத் தடையால் சோகத்தில் மேலூர் கரும்பு விவசாயிகள்

கரும்பு விவசாயம்
கரும்பு விவசாயம்

மேலூர் வட்டாரத்தில் நாவினிப்பட்டி, எட்டிமங்கலம், தணியாமங்கலம், சருகுவலைப்பட்டி, கீழையூர், உறங்கான்பட்டி எனப் பரவலாகக் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசு 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், இந்த உத்தரவு சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும், கரும்பு விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கரும்பு விவசாயம்
கரும்பு விவசாயம்

தமிழகத்தில் பொங்கல் கரும்பு என்று சொல்லப்படும் செங்கரும்புக்கு புகழ்பெற்றது மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் வட்டாரம். இப்பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. வழக்கமாகப் பொங்கலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு தமிழகம் முழுவதுமிருந்தும் வியாபாரிகள் வந்து கரும்புகளை வாங்கிச் செல்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொங்கல் பரிசு வழங்கி வரும் நிலையில் அதற்காகக் கரும்பு கொள்முதல் செய்து வருவதால் அதை நம்பி கூடுதலாகக் கரும்பு பயிரிட்டு வருகின்றனர்.

கரும்பு விவசாயம்
கரும்பு விவசாயம்

அதை நம்பி, மேலூர் வட்டாரத்தில் நாவினிப்பட்டி, எட்டிமங்கலம், தணியாமங்கலம், சருகுவலைப்பட்டி, கீழையூர், உறங்கான்பட்டி எனப் பரவலாகக் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு வழங்க பொது விநியோகத் துறையினரும் கூட்டறவு சங்கத்தினரும் கொள்முதல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் உயர் நீதிமன்றம் அரசுக்குத் தடை போட்டுள்ளதால், அரசுத் தரப்பில் யாரும் கரும்பு வாங்க வரவில்லை. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகுதான் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நிலையில் அதுவரை முழுமையாக விளைந்துவிட்ட கரும்பை வெட்டாமலும் வருமானம் இல்லாமலும் பாதுகாப்பது தங்களுக்குப் பெரிய சுமையாக உள்ளதாக விவசாயிகள் கூறி வருகிறார்கள்.

கரும்பு விவசாயம்
கரும்பு விவசாயம்

உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்பு எப்போது கரும்பு கொள்முதல் செய்வார்கள் என்பது உறுதியாகத் தெரியாமல் கரும்பு விவசாயிகள் கரும்பு வயலை பார்த்தபடி கவலையுடன் காத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு