Published:Updated:

நெல்லுக்கு ஆதார விலை... பி.ஜே.பி-யின் சதுரங்க விளையாட்டு!

நெல் அறுவடை
பிரீமியம் ஸ்டோரி
நெல் அறுவடை

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.65 உயர்த்தி ரூ.1,815 ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நெல்லுக்கு ஆதார விலை... பி.ஜே.பி-யின் சதுரங்க விளையாட்டு!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.65 உயர்த்தி ரூ.1,815 ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Published:Updated:
நெல் அறுவடை
பிரீமியம் ஸ்டோரி
நெல் அறுவடை

து தமிழக விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தையும் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்றொரு சொலவடையுண்டு. தாங்கள் உற்பத்திச் செய்யும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பல ஆண்டு களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் விளைவாக, கடந்த 2004-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு, முதன்முதலாக இந்திய தேசிய விவசாயிகள் ஆணையம் அமைத்தது. எம்.எஸ்.சுவாமிநாதனை தலைவராகக் கொண்ட இந்த ஆணையம், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் சுமார் 9,000 பக்கங்கள் கொண்ட ஐந்து அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

‘விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட விளைபொருள்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையானது (எம்.எஸ்.பி), சராசரி உற்பத்தி செலவைக் கணக்கிட்டு, அதைவிட குறைந்தபட்சம் 50 சதவிகிதம் கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்’ என்று ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதையறிந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அடுத்து வந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல் படுத்த முன்வரவில்லை. இதைக் கண்டித்து 2009-ல் தமிழக விவசாய சங்கத்தினர் டெல்லி நகர வீதிகளில் தலையில் நெல் மூட்டைகளைச் சுமந்து ஊர்வலமாகச் சென்று, நாடாளுமன்ற வாசலில் ‘நெல் கொட்டும்’ போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பி, சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டுமென விவசாயி களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது இரண்டாவது முறையாகவும் மத்தியில் ஆட்சியைப் பிடித்து அரியணையில் அமர்ந்திருக் கும் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு, சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்தியதா... நெல்லுக்கு உரிய ஆதார விலையை நிர்ணயம் செய்ததா?

தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்க அமைப் பாளர் ஆறுபாதி கல்யாணத்திடம் கேட்டோம்.

விமலநாதன், ஆறுபாதி கல்யாணம்
விமலநாதன், ஆறுபாதி கல்யாணம்

‘‘சுவாமிநாதன் ஆணையம் தஞ்சைக்கு வந்து எங்களிடம் கருத்து கேட்டபோது, ‘உரம், பூச்சி மருந்து விலை ஏறிப்போச்சு. விவசாயத் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்து போச்சு. குடிக்கிற தண்ணி, படிக்கிற கல்வி எல்லாமே வியாபாரமாகிப் போச்சு. இந்தச் சூழ்நிலையில விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படணும்னா, மொத்த உற்பத்திச் செலவோடு, 50 சதவிகிதம் லாபம் சேர்த்து நெல்லுக்கான விலையை நிர்ண யம் செய்ய வேண்டும்’ என்று இந்தியாவிலேயே முதன்முதலாக நாங்கள்தான் கூறினோம். அதை ஆணையமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்போதிருந்த நிதியமைச்சர் சிதம்பரத்தை டெல்லியில் சந்தித்துக் கேட்டோம். ‘நெல்லுக்கான ஆதார விலையை ஏற்றினால், வெளிச்சந்தையில் அரிசி விலை உயரும். நுகர்வோர் பாதிக்கப்படுவார் கள்’ என்று கூறினார். அதையேதான் தற்போதைய பி.ஜே.பி அரசும் கூறுகிறது. மொத்த உற்பத்திச் செலவோடு 50 சதவிகிதம் லாபம் சேர்த்தால், குவிண்டால் ஒன்றுக்கு 2,428 ரூபாய் தர வேண்டும். ஆனால், தற்போது உற்பத்திச் செலவு, விவசாயி ஊதியம், லாபம் எனக் கணக்கிட்டு 1,815 ரூபாய் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இரண்டுக்கும் இடையே வித்தியாசம் 613 ரூபாய். வெளிச்சந்தை யைக் காரணம் காட்டி விவசாயிகளை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்? நுகர்வோரும் பாதிக்க வேண்டாம்... விவசாயிகளும் பாதிக்கப்பட வேண்டாம். விலை வித்தியாசம் 613 ரூபாயை விவசாயிகளின் நில அளவைக் கணக்கிட்டு, அவர்களின் வங்கிக்கணக்கில் மானியமாக வழங்க அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.

தஞ்சை மாவட்ட காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் சுவாமிமலை விமலநாதன், ‘‘சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரை களை செயல்படுத்துவோம் என கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் பி.ஜே.பி வாக்குறுதி அளித்திருக்கிறது. 2016-ல் உத்தரப் பிரதேசத்தில், லட்சக்கணக்கான விவசாயிகள் கூடிய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன்’ என்று சூளுரைத்தார். தேர்தலை மனதில்கொண்டு நெல்லுக்கான ஆதார விலையைக் கடந்தாண்டு குவிண்டாலுக்கு 200 ரூபாய் உயர்த்திய பி.ஜே.பி அரசு, இந்தாண்டு வெறும் 65 ரூபாய்தான் உயர்த்தியிருக்கிறது.

நெல்லுக்கான ஆதார விலையை ஆண்டுதோறும் உயர்த்தும்போது, முந்தைய ஆண்டு உயர்த்திய தொகையை விட, அடுத்தாண்டு இன்னும் அதிகமாக உயர்த்தித் தருவதுதான் வழக்கம். அப்படிப் பார்க்கும்போது, கடந்தாண்டு 200 ரூபாய் உயர்த்திய மத்திய அரசு, இந்தாண்டு வெறும் 65 ரூபாய் மட்டும் உயர்த்தியது விவசாயி களை வஞ்சிக்கும் செயல். எதனால் ஆதார விலை இவ்வளவு குறைவாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு விளக்கம் சொல்ல வேண்டும். மன் கீ பாத் என்று மனசாட்சியின் குரல் பேசும் மோடி அரசு, சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளை ஏன் செயல்படுத்தவில்லை என்பதை மனசாட்சிப்படி சொல்ல வேண்டும்.

நெல்லுக்கு ஆதார விலை... பி.ஜே.பி-யின் சதுரங்க விளையாட்டு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விவசாயிகளின் வாக்குகளைப் பெற்று வென்றபின் அவர்களை ஏமாற்றலாமா? விவசாயிகள் வாழ்க் கையில் காங்கிரஸ், பி.ஜே.பி இரண்டுமே சதுரங்கம் ஆடுகின்றன. இதற்காக மீண்டும் பெரியளவில் போராட்டம் நடத்தவுள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்து தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கேட்டபோது, ‘‘தமிழக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில், சட்டசபையில் அறிவிக்கப்படும்’’ என்றார்.