Published:Updated:

"பல்லுயிர்களைக் காப்பதில் தமிழ் பண்பாடு முன்னணியில் இருக்கிறது!" மத்திய வனத்துறை அமைச்சர்!

விழாவில்

உலக பொருளாதாரத்தில் சுமார் 40 சதவிகித பொருட்கள் மற்றும் செயல்முறைகள் பல்லுயிர்களை சார்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளது.

"பல்லுயிர்களைக் காப்பதில் தமிழ் பண்பாடு முன்னணியில் இருக்கிறது!" மத்திய வனத்துறை அமைச்சர்!

உலக பொருளாதாரத்தில் சுமார் 40 சதவிகித பொருட்கள் மற்றும் செயல்முறைகள் பல்லுயிர்களை சார்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
விழாவில்

ஆண்டுதோறும் மே 22 -ம் தேதி அன்று சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையில் சர்வதேச பல்லூயிர் தினத்தை முன்னிட்டு தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியபோது, "தமிழ்நாட்டின் மக்கள், கலாசாரம் மற்றும் வளமான பாரம்பர்யத்தின் ஒருங்கிணைப்பு முதலியவை இந்த பகுதியில் தனித்துவமான பல்லுயிர்களைப் பாதுகாக்கிறது.

பூபேந்தர் யாதவ்
பூபேந்தர் யாதவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வதேச பொருளாதார இயக்கத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை பல்லுயிர்கள் அளித்து வருகின்றன. உலக பொருளாதாரத்தில் சுமார் 40 சதவிகித பொருட்கள் மற்றும் செயல்முறைகள் பல்லுயிர்களை சார்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திய நாடானது, சர்வதேச பல்லுயிர் இலக்குகளை அடையும் முயற்சியில் குறிப்பிடத்தக்க பங்கை செய்து வருவதோடு, தேசிய அளவில் பல்லுயிர் இலக்குகளை அடையும் பாதையில் முன்னேறியும் வருகிறது. தேசிய பல்லுயிர் ஆணையமும், தமிழ்நாடு பல்லுயிர் வாரியமும், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, ஆண்டுதோறும் பாம்பின் விஷத்திலிருந்து பெறப்படும் மொத்த வருமானத்தில் 5 சதவிகிதம் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தப்படும். இந்த தொகை இருளர் மக்களின் நலனுக்காக உபயோகிக்கப்படும்.

விழாவில்
விழாவில்

உலக வெப்பமயமாதல் என்ற சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான முயற்சி முழுமையான வெற்றியை அடையும். எனவே இயற்கை வளங்களின் பாதுகாப்பு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பல்லுயிர்களை பாதுகாப்போம் என மக்கள் உறுதிமொழியை மேற்கொள்ள வேண்டும்" என பேசினார்.

Forest
Forest

அமைச்சர் புபேந்தர் யாதவ் உடன் கலந்து கொண்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன், ஆகியோர் சிறப்பு நினைவு அஞ்சல் உறையை வெளியிட்டனர். மேலும் 'இந்தியா நேச்சுரல்' என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டு, 2021-ம் ஆண்டுக்கான இந்திய பல்லுயிர் விருதுகளையும் வழங்கினர். தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவர் டாக்டர் மாத்தூர், செயலாளர் ஜெ.ஜஸ்டின்... உள்ளிட்டவர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த பல்லுயிர் மேலாண்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். பல்லுயிர்களின் முக்கியத்துவத்தை சொல்லும் வகையில் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism