Published:Updated:

சத்தீஸ்கர் முதலமைச்சரை சந்திக்கச் செல்லும் தமிழக விவசாயிகள்; எதற்குத் தெரியுமா?

சத்தீஸ்கர் புறப்பட்ட விவசாயிகள்

இந்தியாவில் வேறு எந்த ஒரு முதலமைச்சரும் இதுவரை விவசாயிகளுக்கு செய்திடாத, பல நன்மைகளை சத்தீஸ்கர் முதல்வர் செய்திருக்கிறார்.

சத்தீஸ்கர் முதலமைச்சரை சந்திக்கச் செல்லும் தமிழக விவசாயிகள்; எதற்குத் தெரியுமா?

இந்தியாவில் வேறு எந்த ஒரு முதலமைச்சரும் இதுவரை விவசாயிகளுக்கு செய்திடாத, பல நன்மைகளை சத்தீஸ்கர் முதல்வர் செய்திருக்கிறார்.

Published:Updated:
சத்தீஸ்கர் புறப்பட்ட விவசாயிகள்

தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஏப்ரல் 19-ம் தேதி சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலை நேரில் சந்தித்து தங்களின் நெகிழ்ச்சியான பாரட்டுகளைத் தெரிவிக்க இருக்கிறார்கள். தமிழக காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. எதற்காக இந்த சந்திப்பு ?

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய இச்சங்கத்தின் செயலாளரும், சத்தீஸ்கர் பயண நிகழ்வின் ஒருங்கிணைப் பாளருமான சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``விவசாயிகளுக்கு யார் நல்லது செய்தாலும், அவர்களை நேரில் சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவிப்பது, எங்களுடைய தலையாய கடமை. இந்த அடிப்படையில் சத்தீஸ்லர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலை நேரில் சந்தித்து எங்களுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்த இருக்கிறோம்.

முதல்வர் பூபேஷ் பாகல்
முதல்வர் பூபேஷ் பாகல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவில் வேறு எந்த ஒரு முதலமைச்சரும் இதுவரை விவசாயிகளுக்கு செய்திடாத, பல நன்மைகளை அவர் செய்திருக்கிறார். அந்த மாநில விவசாயிகளுக்கு இடுபொருள் உதவித் தொகையாக, ஏக்கருக்கு 10,000 ரூபாய் வழங்கி வருகிறார். ராஜீவ் காந்தி விவசாயிகள் நியாய நிதித் திட்டம் என்ற பெயரில் இந்த உதவித் தொகையை அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். இதற்கு உச்ச வரம்பு கிடையாது என்பது ஆச்சர்யம். ஒரு விவசாயியிடம் 10 ஏக்கர் நிலம் இருந்தால், பத்து ஏக்கருக்கும் உதவித் தொகை பெற முடியும். வேற எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் கிடையாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவிலேயே அதிக விலை கொடுத்து கரும்பைக் கொள்முதல் செய்து வருவதும் தற்போதைய சத்தீஸ்கர் மாநில அரசுதான். 2021-22-ம் ஆண்டு கரும்பு அரைவை பருவத்தில் மத்திய அரசின் கரும்புக்கான சட்டபூர்வ விலை டன் ஒன்றுக்கு 2,755 ரூபாய். சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஸ் பாகல், இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இதுவரை தராத, மாநில அரசின் ஆதரவு விலையாக டன் ஒன்றுக்கு 795 ரூபாய் அறிவித்தார். இதன் காரணமாக அம்மாநிலத்தில் ஒரு டன் கரும்புக்கு 3,550 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டாலும், அம்மாநிலங்களில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3,550 விலை தரப்படுவதில்லை. கரும்பு விவசாயிகளுக்கு சத்தீஸ்கர் அரசு வழங்கி வரும் விலை குறித்து தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர்கள் பலமுறை தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். ஆனாலும், இப்போது தமிழ்நாடு அரசின் கரும்புக்கான பரிந்துரை விலையுடன் தமிழ்நாட்டில் கரும்பு டன் ஒன்றுக்கு 2,950 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த விலை சத்தீஸ்கர் மாநில அரசின் கரும்பு விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது டன் ஒன்றிற்கு 600 ரூபாய் குறைவாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோன்று சத்தீஸ்கர் மாநில அரசு அம்மாநில நெல் விவசாயிகளின் நலன் கருதி நிகழாண்டில், குவிண்டால் ஒன்றுக்கு இந்திய ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையான 1,940 ரூபாயுடன், குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக 600 ரூபாய் சேர்த்து வழங்கி, நெல்லை குவிண்டால் ஒன்றுக்கு 2,540 ரூபாய் விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகிறது. அதே வேளையில் நம் தமிழ்நாட்டில், நெல் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2,060 ரூபாய் மட்டுமே கொள்முதல் விலையாகத் தரப்படுகிறது.

இந்தியாவிலேயே கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,550 ரூபாயும் நெல் குவிண்டாலுக்கு 2,540 ரூபாயும் கொள்முதல் விலை தருகின்ற சத்தீஸ்கர் மாநில அரசைப் பாராட்டி 24.3.2022 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், அனைவருக்கும் இனிப்புக்கு மாற்றாக பேரீச்சம் பழங்களும், ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

சத்தீஸ்கர் புறப்பட்ட விவசாயிகள்
சத்தீஸ்கர் புறப்பட்ட விவசாயிகள்

தமிழக விவசாயிகள் சார்பில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும் எனவும் முடிவெடுத்தோம். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் மற்றும் நெல் விவசாயிகள் அடங்கிய குழுவாகச் செல்லவும் தீர்மானித்தோம். இதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வரை சந்தித்திட அனுமதி பெற்றோம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 விவசாயிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஏப்ரல் 19-ம் தேதி மாலை சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதோடு, அடுத்த நாள், சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறோம். மேலும் சத்தீஸ்கர் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கால்நடை ஊட்டச்சத்து மையங்களையும் பார்வையிட உள்ளோம். சத்தீஸ்கர் பயண ஏற்பாடுகளை தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் மேற்கொள்கிறது’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism