Published:Updated:

கோன் உயர்வான்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

கோன் உயர்வான்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘வேளாண் உற்பத்தியைப் பெருக்க, ஆண்டுதோறும் விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்’

-அண்மையில் தமிழ்நாடு சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் அறிவித்துள்ளார்.

‘சொன்னதைச் செய்வோம்... செய்வதைத்தான் சொல்வோம்’ என்கிற வகையில் வாக்குறுதியை நிறைவேற்றத் துணிந்திருக்கும் தி.மு.க அரசுக்கு வாழ்த்துகள்.

உலக மக்களின் பசியைப் போக்கும் விவசாயிகள்தாம் எல்லோருக்கும் தலைவர்கள். எல்லாத்தொழிலுக்கும் முதன்மையானது உழவுத் தொழில். அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகளைப் போற்றிக் கொண்டாடியிருக்கின்றனர் நம்மவர்கள்.

அந்தவகையில் விவசாயத்துக்குத் தமிழ்நாட்டில் மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கதே. அதேசமயம், இங்கு விவசாயத்துக்கு எனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் இருக்கவேண்டும்.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சாகுபடிக்குத் தேவையான நிதி உதவிகள், நீர்ப்பாசன வசதிகள், விளைபொருள்களுக்கு நியாயமான விலை... எனச் செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளன. இந்தத் தேவைகள் அனைத்தையும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளால் திரட்டி தந்துவிட முடியாது. அப்படித் தருவது 100 சதவிகிதம் விவசாயிகளின் தேவை என்ன என்பதைச் சொல்லும் வகையிலும் இருக்காது. கழனியில் உள்ள விவசாயிகள்தான் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியும். ஆகையால், விவசாயத்துக்குத் தனிபட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு, விவசாயிகள், விவசாயச்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும்.

விவசாயத்துக்கான தனி பட்ஜெட் கர்நாடகா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், சில மாநிலங்கள் மட்டுமே தனிபட்ஜெட்டைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றன. சில மாநிலங்களில் அரசியல் போட்டியால் அடுத்து வந்த அரசுகள் கைவிட்டுள்ளன. இதையும் கவனத்தில்கொண்டு செயலாற்றவேண்டியது மிக முக்கியம்.

வரப்பு உயர்ந்தால் மட்டும் போதாது; குடியும் உயரவேண்டும். அப்போதுதான் ‘கோன் உயர்வான்!’

-ஆசிரியர்

கோன் உயர்வான்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism