Published:Updated:

ஆளுநர் உரை...! மகிழ்ச்சியும்... ஏமாற்றமும்...!

ஆளுநர் உரை
பிரீமியம் ஸ்டோரி
ஆளுநர் உரை

அறிவிப்பு

ஆளுநர் உரை...! மகிழ்ச்சியும்... ஏமாற்றமும்...!

அறிவிப்பு

Published:Updated:
ஆளுநர் உரை
பிரீமியம் ஸ்டோரி
ஆளுநர் உரை

டந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலன் சார்ந்த ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கியது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, தி.மு.க ஆட்சி பொறுப் பேற்றதும், விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. இந்நிலையில் புதிய அரசின் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜூன் 21-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது உரையில் ‘‘நீர்வளங்களுக்கென ஒரு தனி அமைச்சகம் இந்த அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப் படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசால் திட்டமிடப் பட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்துவதற்கான எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு கேரள அரசையும், ஒன்றிய அரசையும் தமிழக அரசு கேட்டுக்கொள்ளும்.

ஆளுநர் உரை
ஆளுநர் உரை


கடந்த ஆட்சியில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அது இந்த ஆட்சியிலும் தொடரும். இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடித்திட இந்த அரசு உறுதியாக உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ், இடைமலையாறு அணை கட்டுமானத்தைக் கேரள அரசு நிறைவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஆனைமலையாறு அணை கட்டுவதற்காகக் கேரள அரசுடன் இந்த அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கும். வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியாக ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

கக்கரை சுகுமாறன், தமிழக விவசாயச் சங்கங்களின் கூட்டியக்கத்தின் மாநில துணைத் தலைவர்.

‘‘விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் வேணும்னு கடந்த பத்தாண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வச்சிக்கிட்டு இருந்தோம். இது தொடர்பான அறிவிப்பு ஆளுநர் உரையில் வெளியாகி இருக்கு. இது மிகவும் பாராட்டுக்குரியது. விவசாயத்துக்குனு தனி பட்ஜெட் போடப்பட்டால், தூர்வாரும் பணி, பயிர்க்கடன் உள்ளிட்ட இன்னும் பல திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்க வாய்ப்பிருக்கு. கடந்த ஆட்சியில் தொடங்கப் பட்ட காவிரி-குண்டாறு திட்டம், விரைவாகச் செயல்படுத்தப்படும்னு சொல்லியிருக்காங்க. அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் இது போன்ற திட்டங்களைத் தொடர்வது ஆரோக்கியமானது. மேக்கேதாட்டூ அணை தொடர்பா போகிற போக்குல, ஒன்றிய அரசு இத்திட்டத்தை நிராகரிக்கணும்னு சொல்லப் பட்டிருக்கு. இது வேதனைக்குரியது. இதுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிச்சு, அரசியல் அழுத்தம் கொடுத்திருக்கணும். தி.மு.க தேர்தல் அறிக்கையில், நெல்லுக்குக் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய், கரும்புக்கு 3,500 ரூபாய் விலை வழங்கப்பட்டும்னு சொல்லியிருந்தாங்க. ஆனால், அது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்குது’’ என்றார்.

இளங்கீரன், சுகுமாறன்
இளங்கீரன், சுகுமாறன்இளங்கீரன், காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.

‘‘உழவர் சந்தைகள் புனரமைக்கப்படும்னு சொல்லியிருக்குறது ரொம்ப நல்ல விஷயம். விவசாயிகள் தங்களோட விளைபொருள்களை விற்பனை செய்ய, கூடுதலான சந்தை வாய்ப்புகள் உருவாகும். கடந்த பத்தாண்டு களாக உழவர் சந்தைகள் முறையாகச் செயல்படாததால், விவசாயிகள் பாதிக்கப் பட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்ப விடிவு கிடைக்கப்போகுது. கூட்டுறவு வங்கிகள்ல விவசாய நகைக்கடன் தள்ளுபடி செய்யப் பட்டதாகக் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுக்கான சான்றிதழ் வழங்கப்படவே இல்லை, நகைகளும் விவசாயிகளுக்குத் திருப்பிக் கொடுக்கப் படாமல் இருக்கு. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தேசிய வங்கிகள்ல விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்னு விவசாயிகள் எதிர்பார்த்தோம். இது தொடர்பாக ஆளுநர் உரையில் அறிவிப்புகள் வெளியாகாதது ஏமாற்றமா இருக்கு’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism