Published:Updated:

கரும்பு டன் ரூ.3,550 நெல் குவிண்டல் ரூ.2,540 சத்தம் இல்லாமல் சாதனைகள்!

சத்தீஸ்கர் முதல்வருடன் சந்திப்பு
பிரீமியம் ஸ்டோரி
சத்தீஸ்கர் முதல்வருடன் சந்திப்பு

சரித்திரம் படைக்கும் முதல்வர்

கரும்பு டன் ரூ.3,550 நெல் குவிண்டல் ரூ.2,540 சத்தம் இல்லாமல் சாதனைகள்!

சரித்திரம் படைக்கும் முதல்வர்

Published:Updated:
சத்தீஸ்கர் முதல்வருடன் சந்திப்பு
பிரீமியம் ஸ்டோரி
சத்தீஸ்கர் முதல்வருடன் சந்திப்பு

சந்திப்பு

ந்தியாவில் வேறு எந்த ஒரு முதலமைச் சரும் இதுவரை விவசாயிகளுக்குச் செய்திடாத, பல நன்மைகளைச் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், செய்திருப்பதாக நெகிழ் கிறார்கள் தமிழகக் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர். இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் 10 பேர், கடந்த ஏப்ரல் 19, 20 தேதிகளில் சத்தீஸ்கருக்குச் சென்று, அந்த மாநில முதல்வரை நேரில் சந்தித்து, தங்களின் பாராட்டையும் அன்பையும் வெளிப் படுத்தினார்கள். மகிழ்ச்சியோடு வரவேற்ற முதல்வருக்கு, அன்புப் பரிசாக, பண்ருட்டி பலாப்பழம், அரியலூர் அச்சு வெல்லம், பெரம்பலூர் முந்திரிப்பழம், கடலூர் கரும்பு ஆகியவற்றை வழங்கி அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். எல்லை கடந்து, ஏன் அவர் மீது நம் விவசாயிகளுக்கு இவ்வளவு அன்பு?

இதுகுறித்து தமிழகக் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதனிடம் பேசினோம், ``விவசாயிகளுக்கு யார் நல்லது செய்தாலும், அவர்களை நேரில் சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவிப்பது, எங்களுடைய தலையாயக் கடமை. அந்த அடிப்படையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அவர்களை நேரில் சந்தித்து எங்களுடைய அன்பை வெளிப்படுத்தினோம். இந்தியாவிலேயே சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் நெல்லுக்கும் கரும்புக்கும் அதிக விலை வழங்கப்படுகிறது.

சந்திப்பு
சந்திப்பு

மத்திய அரசின் கரும்புக்கான சட்டபூர்வ விலை டன் ஒன்றுக்கு 2,755 ரூபாய். சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஸ் பாகல், இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இதுவரை தராத, மாநில அரசின் ஆதரவு விலையாக டன் ஒன்றுக்கு 795 ரூபாய் அறிவித்தார். இதன் காரணமாக சத்தீஸ்கரில் ஒரு டன் கரும்புக்கு 3,550 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப் படுகிறது. அந்த மாநிலத்தில் விளையக்கூடிய கரும்புகளில் பெரும்பாலானவை 10 - 11 சதவிகிதம் சர்க்கரை கட்டுமானம் இருக்கும். அதன் காரணமாக அங்குள்ள பெரும்பாலான கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் விலை கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் கரும்பு டன் ஒன்றுக்கு 2,950 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோன்று சத்தீஸ்கர் மாநில அரசு, அம்மாநில நெல் விவசாயிகளின் நலன் கருதி நிகழாண்டில், குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையான 1,940 ரூபாயுடன், குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக 600 ரூபாய் சேர்த்து வழங்கி, 2,540 ரூபாய் விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகிறது. அதே வேளையில் நம் தமிழ்நாட்டில், நெல் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2,060 ரூபாய் மட்டுமே கொள்முதல் விலையாகத் தரப்படுகிறது.

சத்தீஸ்கர் முதல்வருடன் சந்திப்பு
சத்தீஸ்கர் முதல்வருடன் சந்திப்பு

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யவே திணறுகிறார்கள். ஆனால், சத்தீஸ்கர் மாநில அரசோ, இந்த ஆண்டு 98 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. அம்மாநில விவசாயிகள் தங்களுடைய நெல்லை எந்தச் சிரமும் இல்லாமல் விற்பனை செய்கிறார்கள். ‘ராஜீவ் காந்தி விவசாயிகள் நியாய நிதி’ என்ற பெயரில் அம்மாநில விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு 10,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. எந்தப் பயிராக இருந்தாலும் எத்தனை ஏக்கராக இருந்தாலும் அதில் சாகுபடி நடைபெறுவதை உறுதி செய்து கொண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சத்தீஸ்கரில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

கொட்டான் என்ற பெயரில், வருவாய் கிராமம்தோறும் கால்நடை ஊட்டத்து மையத்தைச் சத்தீஸ்கர் அரசு செயல் படுத்துகிறது. விவசாயிகள் தினம்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் தங்களின் கால்நடை களை அங்கு விட்டுவிடுகிறார்கள். பசுந்தீவனம் அடர்தீவனம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஊட்டத்து மையத்தில் கால்நடைகள் இருக்கும்போது கிடைக்கக்கூடிய கழிவுகளைப் பயன்படுத்தி, பசுந்தீவனம் மட்டுமல்லாமல், காய்கறிகள், பூக்கள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு, சந்தைகளில் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், சாணத்தைக் கிலோவுக்கு 2 ரூபாய் விலை கொடுத்து, கால்நடை ஊட்டச்சத்து மையங்களே கொள்முதல் செய்கின்றன. அந்தச் சாணத்தைக் கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மண்புழு உரம் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு மலிவான விலையில் வழங்கப்படுகின்றன.

மண்புழு உரம் உற்பத்தி பார்வையிடல்
மண்புழு உரம் உற்பத்தி பார்வையிடல்

இதனால், அம்மாநிலத்தில் ரசாயன பயன்பாடு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். விவசாயிகளுக்கு உற்பத்தி செலவும் குறையும். முதல்வர் பூபேஷ் பாகேல், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ரவிந்திரநாத் சௌபே ஆகியோரை தலைமைச் செயலகத்தில் சந்திக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், இவர்கள் இருவருமே தங்களுடைய வீட்டுக்கு எங்களை வரவழைத்து மிகவும் அன்புடன் உபசரித்தார்கள். தேசிய அளவிலான இயற்கை விவசாயிகள் மாநாட்டைச் சத்தீஸ்கரில் நடத்த வேண்டுமென நாங்கள் விடுத்த கோரிக்கையை, சத்தீஸ்கர் முதல்வர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism