Published:Updated:

நிலைத்து நிற்கும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

நிலைத்து நிற்கும்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

திரும்பிய பக்கமெல்லாம், வேளாண் பட்ஜெட் பற்றிய பேச்சாகவே உள்ளது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது தி.மு.க அரசு. ஆம், சாதனைதான். பல ஆண்டுகளாக வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் வேண்டும் என்று கோரிக்கை வைத்த விவசாயிகள், உண்மையிலேயே வாய் நிறைய வாழ்த்துகிறார்கள். இந்தியாவில் வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வரும் மாநிலங்களில் விவசாய வளர்ச்சி உயர்ந்து வருகிறது. பின்தங்கிய மாநிலம் என்று சொல்லப்படும் ஒடிசாவில் நிதிஆயோக் பாராட்டும் வகையில் விவசாய வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது. இதனால்தான், வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் வேண்டும் என்று பல மாநிலங்களில் குரல் எழும்பி வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் நீண்ட கால ஏக்கம் இப்போது தீர்ந்துள்ளது. வேளாண் பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் ஆச்சர்யமும் மறுபக்கம் அச்சமாகவும் உள்ளது. காரணம், மாநிலத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது என்று மைக் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் சுட்டிக்காட்டி வருகிறார் நிதிஅமைச்சர். இந்தச் சூழ்நிலையில் பட்ஜெட் மூலம் வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.34,220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தரப்பில் இன்னும் சில அறிவிப்புகளையும் எதிர்பார்த்தார்கள். மாநிலத்தில் உள்ள நிதி நிலைமையால் அவை இடம் பெறாமல் இருந்திருக்கலாம். வரும் காலங்களில் அவையும் அறிவிப்புக்களாக இடம் பெற்று விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றட்டும். இப்போது அறிவித்துள்ளவற்றைச் சேதாரம் இல்லாமல் திட்டங்களாகச் செயல் வடிவம் கொடுக்கும்போதுதான், தனி பட்ஜெட் தாக்கல் செய்த சாதனை தமிழக வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

- ஆசிரியர்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நிலைத்து நிற்கும்!