Published:Updated:

மாற்றுப் பயிருக்கு மாறினால் மானியம்! - தெம்பு தரும் தெலங்கானா அரசு!

மானியம்
பிரீமியம் ஸ்டோரி
News
மானியம்

முயற்சி

மிழகத்தைப் போலவே காலநிலையும் மண்வளமும் கொண்டது தெலங்கானா மாநிலம். அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ் விவசாயிகளுக்காக ‘ரைத்து பந்து’, ‘ரைத்து பீமா’ என்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

அதோடு மத்திய அரசின் விவசாயம் சார்ந்த திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் ஒரு காலத்தில் அதிகளவில் நடந்த விவசாயத் தற்கொலைகள் தற்போது குறைத்துள்ளது. இந்திய உணவுக் கழகத்துக்கு வழக்கமாக 50 லட்சம் டன் நெல் மூட்டைகளை அனுப்பும் தெலங்கானா, இந்த ஆண்டு 90 லட்சம் டன் நெல் மூட்டைகளை அனுப்பி் சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்திலும் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட்டுள்ளது. ரைத்து பந்து திட்டத்தின் மூலமாக, ஓர் ஆண்டுக்கு, 1 ஏக்கர் நிலத்துக்கு 10,000 ரூபாய் வீதமும், இறந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. பாசனத் திட்டத்துக்காக அரசு 90 சதவிகித மானியம் வழங்குகிறது.

ஹைதராபாத்தில் உள்ள வறண்ட வெப்ப மண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிலையம் (The International Crops Research Institute for the Semi-Arid Tropics) மூலம் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் கறுப்பு, சிவப்பு மற்றும் களிமண் போன்ற மண் வளங்களின் தன்மைகளைப் பரிசோதித்து, அதன் தன்மைக்கு ஏற்ப வெப்பநிலைகளுடன் தகுந்த பயிர்களைச் சாகுபடி செய்வதற்கான காலநிலையும் உள்ளது. இந்தக் காலநிலைக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தெலங்கானா வேளாண் பல்கலைக்கழகத்தோடு இணைந்து காலநிலையைக் கணக்கெடுத்த மாநில அரசு, எந்தெந்தப் பயிரைச் சாகுபடி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. தொலைவில் உள்ள ஊர்களிலிருந்து காய்கறிகளைக் கொண்டு வருவதைத் தவிர்ப்பதற்காக, நகரங்களையொட்டிய விவசாய நிலங்களில் காய்கறிப் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்யச் சொல்கிறார்கள். இதனால் வெகுதொலைவில் உள்ள ஊர்களிலிருந்து காய்கறிகள் கொண்டு வருவது தவிர்க்கப்படும். அதேபோலத் துவரை தவிர்த்து உளுந்து, பச்சைப் பயறு, சிவப்புப் பயறு உள்ளிட்ட பயறு வகைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மாநிலத்தில் தலா 10 லட்சம் ஏக்கரில் நெல், துவரை, 50 லட்சம் ஏக்கரில் பருத்திச் சாகுபடி செய்யப்பட வேண்டும். மீதியுள்ள நிலங்களில் மாற்றுப் பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்ய அரசால் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மானியம்
மானியம்

விதைச் சட்டம் தெலங்கானாவில் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. கம்பெனி விதைகள் போலியாகவோ, தரம் குறைந்ததாகவோ இருந்தால் விதை ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. போலி விதைகள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழக அரசும் உற்பத்திக்கு ஏற்ப, இன்ன பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினால், விளையும் பொருள்களுக்கு உறுதியான விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரேமாதிரியான பயிர்களை உற்பத்தி செய்து களைப்படைந்த நிலங்கள், பலவிதமான பயிர்களைச் சாகுபடி செய்யும் நிலமாக மாறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலப்புப் பயிர்களை ஊக்குவிக்க வேண்டும்!

மாற்றுப் பயிருக்கு மாறினால் மானியம்! - தெம்பு தரும் தெலங்கானா அரசு!

துகுறித்துத் தெலங்கானா முன்னோடி இயற்கை விவசாயி நாகரத்தின நாயுடுவிடம் பேசினோம். “எங்கள் மாநிலத்தில் இந்த முறை நெல் உற்பத்தி அதிகமாக இருந்தது. கொரோனா காலத்தில் சேமிப்புக் கிடங்குகளில் இடம் பற்றாக்குறையால் பள்ளிக்கூடங்களிலும் நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டன. மாநிலத்தில் நெல் உபரியாக இருப்பதால் அடுத்த பருவத்துக்கு அதிகமாகக் காய்கறிகள், பயறு வகைகளைச் சாகுபடி செய்ய வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்படிச் செய்யவில்லையென்றால் ரைத்து பந்து திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மானியம் வழங்கப்பட மாட்டாது என்று எச்சரித்துள்ளது. அதனால் விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கு மாறி வருகின்றனர். நான் உட்பட முன்னோடி விவசாயிகள் கலப்புப் பயிர்களைச் சாகுபடி செய்ய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதன்படி இப்போது கலப்புப் பயிர்களைச் சாகுபடி செய்ய அரசு களத்தில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே, இயற்கை விவசாயத்தில் கலப்புப் பயிர்களைச் சுழற்சி முறையில் சாகுபடி செய்வதால், நிறைவான வருமானம் எடுத்து வருகிறேன். இந்த முறையால் மற்ற விவசாயிகளுக்கும் நன்மை விளையும் என்று நம்புகிறேன்” என்றார்.