Published:Updated:

``விவசாயிகளைவிட இடைத்தரகர்கள்தான் அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்!" - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

உபாசி மாநாடு

பெரு விவசாயிகளுக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது. சிறு விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

``விவசாயிகளைவிட இடைத்தரகர்கள்தான் அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்!" - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பெரு விவசாயிகளுக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது. சிறு விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

Published:Updated:
உபாசி மாநாடு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் `உபாசி' எனப்படும் தென்னிந்திய தோட்ட அதிபர்களின் சங்கம் இயங்கி வருகிறது. நூற்றாண்டு களைக் கடந்து செயல்பட்டு வரும் இந்தச் சங்கத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தோட்ட அதிபர்கள் பலரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

உபாசி மாநாடு
உபாசி மாநாடு

இந்த சங்கத்தின் 129-வது ஆண்டு மாநாடு திங்கள்கிழமை குன்னூர் உபாசி அரங்கில் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழாவுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக நிறைவு விழாவில் பங்கேற்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாநாட்டில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்திய நிதியமைச்சர் அமைச்சர், ``விவசாயிகள் அதிக வருவாய் பெற்று நுகர்வோருக்கு குறைந்தபட்ச விலையில் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதே நமது மாநில அரசின் நோக்கமாக இருக்கிறது. பெரு விவசாயிகளுக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது.

சிறு விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனால், உண்மையில் இடைத்தரகர்கள்தான் அதிக லாபம் பெறுகின்றனர். இஸ்ரேல் நாட்டில் இருப்பதைப் போன்ற தோட்டக்கலைத்துறை தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் அதிக பலன் பெரும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இவற்றை சீர் செய்ய மாநில அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

உபாசி மாநாடு
உபாசி மாநாடு

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்கு வழிவகை செய்கிறது. அரசின் திட்டங்கள் தற்போது துறை ரீதியாக இருக்கிறது. இவற்றை பயனாளிகள் ரீதியாக மாற்றி செயல்படுத்த நமது அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் தமிழகம் இந்த நடவடிக்கைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது. இருப்பினும், நமது தகுதிக்கு ஏற்ப நாம் இன்னும் இலக்கை எட்டவில்லை. நமது பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கிறது. காலநிலை மாற்றம், இறக்குமதி விதிமுறைகள், தொழிலாளர்கள் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தோட்டக்கலைத்துறைக்கு அரசு உதவ வேண்டும். குறைவான விலை, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போட்டி ஆகியவற்றால் தோட்டக்கலைத்துறை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டத்துறைக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கும்" என்றார்.