Published:Updated:

50,000 விவசாய மின் இணைப்புகள்... வெறும் அறிவிப்புதானா?

விவசாய மின் இணைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாய மின் இணைப்பு

எதிர்பார்ப்பு

‘கைக்கு எட்டியது... வாய்க்கு எட்டவில்லை’ என ஒரு சொலவடை உண்டு. இலவு காத்த கிளிபோல் விவசாய மின் இணைப்புக்காக, தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகப் பல லட்சம் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த மார்ச் 13-ம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற மின் மானிய கோரிக்கையின்போது ‘தமிழ்நாட்டில் 4.25 லட்சம் விவசாயிகள், விவசாய மின் இணைப்புக்காகக் காத்திருப்பதாகவும், இந்த ஆண்டு 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும்” என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், அறிவிப்பு வெளியாகி இரண்டரை மாதங்களுக்கு மேலாகியும்கூட, இன்னும் இதற்கான அரசாணை வெளியிடப்படவே இல்லை. இது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்துவிடப்போகிறதோ என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது. விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இது தொடர்பாக ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.

சுவாமிமலை சுந்தரவிமலநாதன்
சுவாமிமலை சுந்தரவிமலநாதன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்துக் கேள்வி எழுப்பும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன், “ ‘தமிழ்நாடு மின்மிகை மாநிலம்’னு நம்ம ஆட்சியாளர்கள் பெருமையா சொல்லிக்கிறாங்க. உபரி மின்சாரம் வெளிமாநிலங்களுக்கு வழங்கப்படும்னும் சொல்றாங்க. ஆனால், இங்கவுள்ள விவசாயிகளோட நிலைமை ரொம்பப் பரிதாபமா இருக்கு. ஆற்றுப்பாசனத்துக்கு வழியில்லாத விவசாயிகளுக்கு போர்வெல்தான் மாற்றுவழி. விவசாய மின் இணைப்புக் கிடைச்சாதான் விவசாயிகள் தங்களோட வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். விவசாய மின் இணைப்புக்காக, சாதாரண மற்றும் சுயநிதித் திட்டத்துல பதிவு செஞ்ச, ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் பல லட்சம் பேர், நீண்டகாலமாகக் காத்திருக்காங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
50,000 விவசாய மின் இணைப்புகள்... வெறும் அறிவிப்புதானா?

ஆந்திரா, தெலங்கானாவுல எல்லாம் இந்த மாதிரியான மோசமான அவலநிலை இல்லை. விவசாய மின் இணைப்பு கேட்டுப் பதிவு செஞ்ச 30 நாள்களுக்குள், எந்த ஒரு கட்டணமும் இல்லாமல், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இங்கே, சுயநிதித் திட்டம்ங்கற பேர்ல 10,000, 25,000, 50,000 ரூபாய்னு, குதிரைத் திறனுக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படுது. உடனடி மின் இணைப்புத் திட்டமான தட்கலுக்கு 2.5 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுது. ஆனால், இதுவும்கூட முறையாக உரிய காலத்துல வழங்கப்படுறதில்லை. இந்த ஆண்டு 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்னு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சட்டமன்றத்துல அறிவிச்சார். அது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கு. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுக்கான அரசாணை வெளியிடப்படவே இல்லை. இதுல ஏதோ மர்மம் இருக்கு. மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சாரத் திருத்த சட்டத்துக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் ஏற்பாடுகள்ல மத்திய அரசு தீவிரம் காட்டிக்கிட்டு இருக்கு. இதனால்தான் அறிவிக்கப்பட்டுள்ள 50,000 விவசாய இணைப்புக்கான அரசாணை வெளியிடப்படாமல் இருக்கோனு சந்தேகப்படுகிறோம். இல்லைனா, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்துல அரசாணை போட்டு, விவசாயிகளைக் கவர்ந்து வாக்குகளை வாங்கலாம்னு திட்டம் போடுறாங்களோனு எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கு. எப்படிப் பார்த்தாலும் இது விவசாயிகளை ஏமாற்றும் செயல். பொதுவாக, சட்டமன்றத்துல எந்த ஒரு அறிவிப்பு வெளியானாலும் உடனே அரசாணை வெளியிடப்படும். இது ஒண்ணும் கடினமான பணியல்ல. மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும்னு மார்ச் 24-ம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிச்சார். அதுக்கான அரசாணை ஏப்ரல் 4-ம் தேதி வெளியானது. இது கொரோனா ஊரடங்கு காலம்னு நொண்டிச் சாக்கெல்லாம் சொல்ல முடியாது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 59 ஆக உயர்த்தப்படும்னு சில நாள்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டிருக்கு. ஆனால் 50,000 விவசாய மின் இணைப்புக்கு மட்டும் ஏன் அரசாணை வெளியிடப்படாமலே இருக்கு. இது உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட்டால் தமிழக அரசுக்கு 750 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். நிதிப் பற்றாக்குறையில் தவிச்சிக்கிட்டு இருக்குற தமிழக அரசுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்” என்றார்.

இது தொடர்பாகத் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசியபோது, “கொரோனா பிரச்னையாலதான், இதுக்கான அரசாணை போட முடியலை. விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.