Published:Updated:

புதிய நெல் ரகங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள்... திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையம்!

திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையம்!
பிரீமியம் ஸ்டோரி
திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையம்!

ஆராய்ச்சி

புதிய நெல் ரகங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள்... திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையம்!

ஆராய்ச்சி

Published:Updated:
திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையம்!
பிரீமியம் ஸ்டோரி
திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையம்!

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் ‘நாஞ்சில் நாடு’ எனப் போற்றப்படு கிறது. ‘நாஞ்சில்’ என்றால் ‘கலப்பை’ என்று பொருள். முன்பு இம்மாவட்டத்தின் முதன்மைப் பயிராக நெல் திகழ்ந்தது. இப்போது தோட்டக்கலைப் பயிர்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன. மொழிவழி மாநிலங் கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு, கேரளாவின் நெற்களஞ்சியமாக நாஞ்சில் நாடு விளங்கியது.

இயற்கை வளம் சூழ்ந்த இம்மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகளுக்குச் சேவையாற்றி வருகிறது திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையம். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சின்னஞ்சிறிய ஊர் திருப்பதிசாரம். இங்கு 1981-ம் ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட ஆரம்பித்த பிறகு, தமிழகம் தழுவிய அளவில் விவசாயிகள் அவ்வப்போது உச்சரிக்கும் பெயராகத் திருப்பதிசாரம் புகழ்பெறத் தொடங்கியது. இங்கு கண்டு பிடிக்கப்பட்ட நெல் ரகங்கள் விவசாயிகளிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது.

நெல் ஆராய்ச்சி நிலையம்
நெல் ஆராய்ச்சி நிலையம்

நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங் களைப் புகுத்துதல், விவசாயிகளுக்கு அவ்வப்போது தேவைப்படும் ஆலோசனை களை வழங்குதல் எனப் பல வகைகளிலும் சேவையாற்றி வரும் திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஒரு பகல்பொழுதில் இங்கு பயணம் மேற்கொண்டோம். சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் இந்த ஆராய்ச்சி நிலையத்தில், பச்சைப் பசேலென காட்சி அளித்துக்கொண்டிருந்த நெற்பயிர்கள் காற்றில் அசைந்தாடி நம்மை வரவேற்றது.

இந்நிலையத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் முனைவர் ஷோபாவை சந்தித்துப் பேசினோம். “இந்த மாவட்டத்தில் தற்போது 28,000 ஹெக்டேரில் ரப்பர், 24,000 ஹெக் டேரில் தென்னை, 12,000 ஹெக்டேரில் நெல், 5,000 ஹெக்டேரில் வாழை, 1,000 ஹெக்டேரில் மரவள்ளிக்கிழங்கு, 300 ஹெக்டேரில் அன்னாசியும் சாகுபடி செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின் மூன்றாவது முக்கியப் பயிராக நெல் விளங்குகிறது.

அசோலா
அசோலா

தண்டு சாயாத நெல் ரகங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைப் பொழிவு அதிமாக இருக்கும். ஓர் ஆண்டின் சராசரி மழையளவு 1,000 முதல் 1,200 மில்லி மீட்டர். ஆனால், கடந்த ஆண்டு 2,000 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப் பொழிந் துள்ளது. இம்மாவட்டத்தைப் பொறுத்தவரை, நெல் சாகுபடிக்கு மிகவும் சவாலாக இருப்பது மழைதான். எனவே, தண்டு சாயாமல் வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய நெற்பயிர் ரகங்கள், இந்த மாவட்ட விவசாயிகளுக்கு மிகவும் அவசியமானது. இதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையம், நெல் ரகங்களைக் கண்டுபிடித்து விவசாயிகளுடன் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆராய்ச்சி நிலையத்தில் ஷோபா
ஆராய்ச்சி நிலையத்தில் ஷோபா

கன்னிப்பூ, கும்பப்பூவுக்கு ஏற்ற நெல் ரகங்கள்

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இரண்டு பருவங்களில் நெல் சாகுபடி செய்வார்கள். கன்னிப்பூ (குறுவை) பருவத்துக்கு ஜூன் முதல் ஜூலை மாதம் வரை விதைப்பார்கள். கும்பப்பூ பருவம் (சம்பா) நெல் சாகுபடிக்கு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை விதைப்பார்கள். கன்னிப்பூ பருவத்தில் குறுகிய கால ரகங்களையும், கும்பப்பூ பருவத்தில் மத்திம கால மற்றும் நீண்டகால ரகங்களையும் விதைப்பு செய்வார்கள். இதற்கு ஏற்றவாறு நெல் ரகங்களை அறிமுகம் செய்துள்ளோம்.

‘சிறந்த வேளாண் அறிவியல் நிலையத்துக்கான விருது’
‘சிறந்த வேளாண் அறிவியல் நிலையத்துக்கான விருது’

காவிரி டெல்டா விவசாயிகளிடமும் வரவேற்பு

டி.பி.எஸ்-1, டி.பி.எஸ்-2, டி.பி.எஸ்-3, டி.பி.எஸ்-4, டி.பி.எஸ்-5 என இதுவரை 5 நெல் ரகங்களை இந்த ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது. திருப்பதி சாரம் என்பதன் சுருக்கம்தான் டி.பி.எஸ். இந்த 5 ரகங்களில் டி.பி.எஸ்-3 மற்றும் டி.பி.எஸ்-5 ஆகிய இரண்டு ரகங்களும் குமரி மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல், காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. டி.பி.எஸ்-5 கன்னிப்பூ பருவத்துக்கும், டி.பி.எஸ்-3 கும்பப்பூ பருவத்துக்கும் ஏற்றவை.

ஆடு வளர்ப்பு கூண்டு
ஆடு வளர்ப்பு கூண்டு

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் நெல் சாகுபடியில் இலைக்கருகல் நோயும், தண்டுதுளைப்பான் தாக்குதலும்தான் சவாலானவை. இவற்றைச் சமாளிக்க இந்தப் பகுதி நெல் விவசாயிகள் மிகவும் சிரமப்படுவார்கள். இதற்கு விவசாயிகளின் விருப்பத்துக்கு ஏற்ப இயற்கை முறை மற்றும் ரசாயன முறையிலும் ஆலோசனை வழங்கி வருகிறோம். அதேசமயம் இயற்கை விவசாயத் தின் அவசியம் குறித்து இப்பகுதி விவசாயி களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதுமட்டுமல்லாமல், நெல் சாகுபடியில் அவ்வப்போது ஏற்படும் அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்குகிறோம்.

கோழி வளர்ப்பு கூண்டு
கோழி வளர்ப்பு கூண்டு

ஆராய்ச்சியில் புதிய ரகங்கள்

டி.பி.எஸ்-3-க்கு மாற்றாகவும், டி.பி.எஸ்-5-க்கு மாற்றாகவும் புதிய நெல் ரகங்கள் வெளியிட திட்டமிடப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. டி.பி.எஸ் 3-க்கு மாற்றாக... கட்டிச்சம்பா மற்றும் மொட்டக் குறுவா ஆகிய ரகங்களை ஒட்டுச் சேர்த்து புதிய ரகம் ஒன்றை வெளியிட உள்ளோம். டி.பி.எஸ்-5-க்கு மாற்றாக... ஆதிரா மற்றும் டி.பி.எஸ்-5 ஆகிய ரகங்களை ஒட்டுச் சேர்த்து, புதிய ரகம் ஒன்றையும் வெளியிட இருக்கிறோம்.

அரிசி
அரிசி

விதை தேவைக்குத் தொடர்புகொள்ளலாம்

டி.பி.எஸ்-3 மற்றும் டி.பி.எஸ்-5 ஆகிய இரண்டு நெல் ரகங்களுமே இங்கு கையிருப்பில் உள்ளன. விதை தேவைப்படும் விவசாயிகள் எங்கள் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம். இரண்டு ரக நெல் விதைகளுமே ஒரு கிலோ ரூ.31-க்கு விற்பனை செய்யப்படுகின்றன’’ எனத் தெரிவித்தார்.

இங்கு கே.வி.கே-வும் இயங்குகிறது

திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் கே.வி.கே என அழைக்கப்படும் வேளாண் அறிவியல் நிலையமும் இயங்கி வருவது கூடுதல் சிறப்பு. விவசாயிகள் திருப்பதிசாரம் கிராமத்துக்கு வருகை புரிந்தால் இரட்டிப்பு பயன் அடையலாம். இந்நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப் பாளராகவும் பதவி வகிக்கும் முனைவர் ஷோபா, இதன் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார்.

கே.வி.கே
கே.வி.கே

‘‘கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக 2004-ம் பேச்சிப்பாறையில் கே.வி.கே ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதன் சுற்றுட்டார கிராமங்களில் ரப்பர் தோட்டங்கள்தான் அதிகம். ஆனால், திருப்பதிசாரத்தைச் சுற்றியுள்ள அகஸ்தீஸ் வரம், தோவாளை, குறுந்தங்கோடு, ராஜாக்க மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்தான் நெல், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதிக்கு கே.வி.கே-வை மாற்ற வேண்டு மென விவசாயச் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதன் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு இங்கு கே.வி.கே இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கக் களப்பயிற்சி அளிக்கிறோம். பூச்சி, நோய்க் கட்டுப்பாட்டு, உழவு செய்யும் முறைகள், செம்மை நெல் சாகுபடி, பழ வகை மரங்கள் மற்றும் மலர்கள் சாகுபடி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு ஆகியவை குறித்து இங்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்நிலையத் தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, 2021-ம் ஆண்டுக்கான ‘சிறந்த வேளாண் அறிவியல் நிலையத்துக்கான விருது’ வழங்கியது.

கோழி வளர்ப்பு கூண்டு
கோழி வளர்ப்பு கூண்டு

விவசாயிகளின் நிலங்களில் பரிசோதனை

தமிழ்நாட்டில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையங்கள் புதிதாக அறிமுகம் செய்யும் நெல் ரகங்களின் விதைகளை விவசாயி களுக்கு வழங்கி, சாகுபடி முறைகள் குறித்தும் வழிகாட்டுகிறோம். புதிய நெல் ரகங்களைப் பரிசோதனை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள்... விதைப்பு முதல் அறுவடை வரை ஒவ்வொரு படிநிலையையும் தொடர்ச்சி யாகக் கண்காணிக்கிறார்கள். அறுவடையின் போது கிடைக்கும் மகசூலை ஏற்கெனவே சாகுபடி செய்த மற்ற ரகங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இதன் மூலம் மகசூல் மட்டுமல்லாமல் புதிய நெல் ரகங்களின் பூச்சி, நோய் எதிர்ப்புத்திறனை விவசாயிகள் நேரடியாக அறிந்துகொள்ள முடிகிறது. அதே நெல் ரகத்தை வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கி பரிசோதிக்க வைக்கிறோம். இதன் மூலம் எந்த மண்ணுக்கு எந்தெந்த நெல் ரகங்கள் சிறப்பானது என்று ஒரு முடிவுக்கு வர முடிகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் விவசாயிகளின் நிலத்தில் நேரடி யாகப் பரிசோதனை செய்து, அவர்களின் கருத்துகளுக்கு ஏற்பதான், அந்தத் தொழில் நுட்பத்தை மற்ற விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்கிறோம்.

விவசாயிகள்
விவசாயிகள்


இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை

இயன்றவரை ரசாயன இடுபொருள்களைத் தவிர்க்க விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறோம். அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கிறோம். அதே சமயம் வெறும் ஆலோசனைகளோடு மட்டும் நின்றுவிடாமல், இயற்கை வழி விவசாயத்தில் சாகுபடி செய்ய பயிற்சிகளும் அளிக்கிறோம். ரசாயன விவசாயத்திலிருந்து மாற மறுக்கும் விவசாயிகளிடம் ‘குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பிலாவது இயற்கை முறையில் சாகுபடி செய்யுங்கள். அதன் வித்தியாசத்தை நீங்களே நேரடியாக உணருங்கள்’ என வலியுறுத்து கிறோம். இதற்கு நல்ல பலன் தெரிகிறது.

மண்புழு உரம்
மண்புழு உரம்

வாரம்தோறும் பயிற்சிகள்

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், இயற்கை இடுபொருள் தயாரிப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, மதிப்புக்கூட்டுதல், ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தல், வங்கியில் கடனுதவி பெறுதல் உள்ளிட்ட 30 வகையான பயிற்சிகள் இந்தக் கே.வி.கே-வில் அளிக்கப்படுகிறது. வாரம்தோறும் 5 முதல் 7 பயிற்சிகள் வரை நடைபெறுகின்றன’’ எனத் தெரிவித்தார்.



தொடர்புக்கு:

1. பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,

திருப்பதிசாரம்,

கன்னியாகுமரி மாவட்டம்

தொலைபேசி: 04652 293999.



2. திட்ட ஒருங்கிணைப்பாளர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

திருப்பதிசாரம்,

கன்னியாகுமரி மாவட்டம்

தொலைபேசி, 04652 292758

அரிசி
அரிசி

கன்னியாகுமரி மக்கள் விரும்பும் பருவெட்டு அரிசி!

கன்னியாகுமரி மாவட்டம், துவரங்காடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி செண்பகசேகரன், “தமிழ்நாட்டுல மற்ற மாவட்டங்கள்ல வசிக்கும் மக்களோட உணவுப் பழக்கத்துக்கும் குமரி மாவட்ட மக்களோட உணவுப் பழக்கத்துக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. இங்கவுள்ள மக்கள் பருவெட்டான (மோட்டா) அரிசியைத்தான் சோறு சமைச்சு சாப்பிடுவாங்க. சன்னரக அரிசியை விரும்ப மாட்டாங்க. திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தால் இதுவரை வெளியிடப்பட்ட 5 ரகங்களுமே பருவெட்டு ரகம்தான். இந்தப் பகுதிக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

செண்பக சேகரன்
செண்பக சேகரன்

இங்க மழைப்பொழிவு அதிகம்.

அதுமட்டுமல்லாம, ‘ஏலா’னு சொல்லப்படுற பள்ளக்கால் நிலங்கள் இங்க அதிகம். மழைத்தண்ணி தேங்கி நின்னாலும் தண்டு சாயாத நெல் ரகங்களை அறிமுகப்படுத்தியிருக்காங்க. முன்னாடி இந்தப் பகுதி விவசாயிகள் ‘அம்பை-16’ ரகத்தைதான் பரவலாகச் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தோம். திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட டி.பி.எஸ்.3 மற்றும் டி.பி.எஸ்.5 ரெண்டு ரகங்களுமே அம்பை-16 ரகத்துக்கு இணையா மகசூல் கொடுக்குறதுனாலயும் கேரளாவுலயும் பருவெட்டு அரிசிக்கான தேவை அதிகரிச்சதுனாலயும், இந்த ரகங்களை குமரி மாவட்ட விவசாயிகள் அதிக அளவுல சாகுபடி செய்றோம்.

நெல் நடவு
நெல் நடவு
விவசாயப் பணி
விவசாயப் பணி

டி.பி.எஸ்-3-ஐ கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய ரெண்டு பருவத்துலயுமே சாகுபடி செஞ்சு வெற்றிகரமா மகசூல் எடுக்க முடியுது. இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்குத் தரமான விதைகளும் கிடைக்குது. நெற்பயிர்கள்ல பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு இங்கவுள்ள பேராசிரியர்கள் தகுந்த ஆலோசனைகள் சொல்றாங்க’’ என்றார் மகிழ்ச்சியுடன்.