Published:Updated:

50 நாள்களைக் கடந்த திருவண்ணாமலை சிப்காட் போராட்டம்; அரசின் மௌனத்தால் ஆதங்கத்தில் மக்கள்!

50வது நாள் போராட்டம்

``இந்த சிப்காட் இப்பகுதிக்கு வந்தால் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும், 300-க்கும் மேற்பட்ட வீடுகளும் பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் இவர்களுடைய முக்கிய நோக்கமே, இரும்புத்தாது வளம் இருக்கும் கவுத்திமலைதான். அந்த மலை வரை இந்த சிப்காட் வரைபடம் போடப்பட்டுள்ளது."

50 நாள்களைக் கடந்த திருவண்ணாமலை சிப்காட் போராட்டம்; அரசின் மௌனத்தால் ஆதங்கத்தில் மக்கள்!

``இந்த சிப்காட் இப்பகுதிக்கு வந்தால் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும், 300-க்கும் மேற்பட்ட வீடுகளும் பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் இவர்களுடைய முக்கிய நோக்கமே, இரும்புத்தாது வளம் இருக்கும் கவுத்திமலைதான். அந்த மலை வரை இந்த சிப்காட் வரைபடம் போடப்பட்டுள்ளது."

Published:Updated:
50வது நாள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய சிப்காட் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையில், அந்த சிப்காட் அமையவிருக்கும் இடம் குறித்து தற்போது வரை அரசு தரப்பிலிருந்து எவ்விதமான அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் பாலியப்பட்டு கிராமத்தை மையப்படுத்தி புதிய சிப்காட் அமைய இருப்பதாகக் கசிந்த உறுதியற்ற தகவலைத் தொடர்ந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்தக் கிராம மக்கள்.

தற்போது இந்தப் போராட்டம் 50 நாள்களைக் கடந்துள்ளது. அப்பகுதி மக்களுக்கு கசிந்ததாகக் கூறப்படும் தகவலின்படி, சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவில் பாலியப்பட்டு கிராமத்தை மையப்படுத்தி சிப்காட் அமையவிருப்பதாகக் கூறுகின்றனர் அம்மக்கள். ``இந்த சிப்காட் இப்பகுதிக்கு வந்தால் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும், 300-க்கும் மேற்பட்ட வீடுகளும் பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் இவர்களுடைய முக்கிய நோக்கமே, இரும்புத்தாது வளம் இருக்கும் கவுத்திமலைதான். அந்த மலை வரை இந்த சிப்காட் வரைபடம் போடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

சிப்காட்: பாலியப்பட்டு கிராம மக்கள் போராட்டம்
சிப்காட்: பாலியப்பட்டு கிராம மக்கள் போராட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வி.ஏ.ஓ, மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ என முக்கிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. நாங்கள் முறையிடும்போது, அதிகாரிகள் எங்களிடம் பேசும் விதமே எங்களின் சந்தேகங்களை மேலும் உறுதியாக்குகிறது. இந்த சிப்காட் அமைவதால் எங்க பஞ்சாயத்துக்கு மட்டுமல்லாமல், சுத்துப்பட்டில் இருக்கின்ற பஞ்சாயத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள். எங்கள் பகுதியில் எப்போதும் விவசாயம் செழிப்பாக நடக்கும். நல்ல முறையில் விவசாயம் செய்து நல்லபடியாக வாழ்கிறோம். செயற்கை விவசாயம் செய்தாலும், பெரும்பாலும் நாங்கள் ரசாயனத்தைப் பயன்படுத்துவதில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முடிந்த அளவுக்கு ரசாயனம் பயன்படுத்தாமல், சுத்தமான உணவுப் பொருளைத்தான் உற்பத்தி செய்கிறோம். சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களைக் கைப்பற்றி, பின்னர் மாற்று இடமோ, காசோ கொடுத்துவிட்டால் அது எங்களின் வாழ்வாதாரத்தை ஈடு செய்துவிடுமா? கவுத்திமலையில் இருந்து உருவாகும் நான்கு முக்கிய நீர்வளங்கள் எங்கள் பகுதியின் வழியே திருவண்ணாமலைக்குச் செல்கிறது. இவ்வளவு இயற்கை வளத்தையும் விவசாயத்தையும் அழித்து எங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் சிப்காட் கொண்டு வர வேண்டுமா? அப்படிப்பட்ட சிப்காட் எங்களுக்கு வேண்டாம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

எனவே, சிப்காட் அமைக்கும் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 4-ம் தேதி ஊர் மக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று சிப்காட் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பதிலளிக்கும்படி 424 மனுக்களைக் கொடுத்திருக்கிறோம். 11.02.2022 பதில் கிடைக்கலாம் எனக் கூறுகிறார்கள். இந்நிலையில், நேற்றைய தினத்தோடு போராட்டம் 50 நாளை எட்டியதால், அதை அதிகாரிகளுக்கு நினைவுபடுத்தும் வகையில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். எங்கள் வாழ்க்கை போராட்டத்திலேயேதான் சென்றுகொண்டிருக்கிறது.

எங்களது பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். எங்களது பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்" என்று தங்களின் ஆதங்க குரல்களை முன்வைக்கின்றனர் பாலியப்பட்டு கிராம மக்கள்.

பாலியப்பட்டு கிராம மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism