Published:Updated:

மூணாறில் 10 மாடுகளை கடித்து கொன்ற புலிகள்! கூண்டுகள் வைத்து பிடிக்க கேரள வனத்துறை தீவிரம்!

காயமடைந்த மாடுகள்

நேற்றுமுன்தினம் கொன்ற மாடுகளில் மூன்றை தொழுவில் வைத்தும், இரண்டை வேறுபகுதியிலும் வைத்து புலி மீண்டும் வருகிறதா எனக் கண்காணித்தோம். ஆனால் அந்தப் புலி 100 மீட்டருக்கு அருகே உள்ள வேறொரு தொழுவில் சென்று தாக்கிவிட்டது...

மூணாறில் 10 மாடுகளை கடித்து கொன்ற புலிகள்! கூண்டுகள் வைத்து பிடிக்க கேரள வனத்துறை தீவிரம்!

நேற்றுமுன்தினம் கொன்ற மாடுகளில் மூன்றை தொழுவில் வைத்தும், இரண்டை வேறுபகுதியிலும் வைத்து புலி மீண்டும் வருகிறதா எனக் கண்காணித்தோம். ஆனால் அந்தப் புலி 100 மீட்டருக்கு அருகே உள்ள வேறொரு தொழுவில் சென்று தாக்கிவிட்டது...

Published:Updated:
காயமடைந்த மாடுகள்

கேரளா மூணாறில் கடந்த ஒரு வாரமாகவே புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், கே.டி.எச்.பி நிறுவனத்துக்கு சொந்தமான எஸ்டேட்டில் பசுக்களை அடைப்பதற்கான மாட்டுத் தொழுவம் உள்ளது. இங்கு அடைக்கப்பட்டிருந்த பழனிசாமி என்பவரின் ஒரு பசு மற்றும் கன்று, மாரியப்பன் என்பவரின் 3 பசுக்களை புலி ஒன்று கடித்துக் கொன்றது. இதில் சில மாடுகள் காயங்களுடன் உயிர் தப்பின. 

காயமடைந்த மாடுகள்
காயமடைந்த மாடுகள்

மூணாறு பகுதியில் அடிக்கடி புலி, சிறுத்தைகளால் ஆண்டுதோறும் கால்நடைகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இதைத்தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கால்நடை வளர்போர் புலி பசுக்களை தாக்கிய பகுதியை பார்வையிட அனுமதிக்காமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்போருக்கு இழப்பீடும், சிசிடிவி கேமரா வைத்து புலிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து உரிய பாதுகாப்பை ஏற்படுத்துவோம் எனவும் வனத்துறையினர் உறுதியளித்தவுடன் போராட்டம் கைவிடப்பட்டது. 

நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தொழுவத்துக்கு அருகே வசிக்கும் மக்கள் சத்தம் கேட்டதும் வேகமாக சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு புலி மாட்டை கடித்து கொண்டிருந்துள்ளது. மனிதர்களை பார்த்தும் அங்கிருந்து புலி தப்பியது. பிறகு உள்ளே சென்று பார்க்கையில் அனைத்து மாடுகளும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்துள்ளன.

கால்நடை வளர்ப்போர்
கால்நடை வளர்ப்போர்

இரண்டு நாள்களுக்கு முன்பும் இதேபோல தொழுவத்துக்கு புலிகள் வந்து சென்றுள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை அதேபகுதிக்கு வந்த புலி ஒரு கன்று உள்பட 4 பசுமாடுகளை கடித்து கொன்றுவிட்டு தப்பிவிட்டது. இதுவரை 2 கன்றுகள் உள்பட 10 மாடுகள் பலியாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

ஒரு வாரமாக புலிகள் இரவு முழுவதும் கால்நடைகள் அதிகம் இருக்கும் கோதைமேடு, ராஜமலை, இரவிகுளம், நேஷனல் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வருகின்றன. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து புலியை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விட வேண்டும் என்பது வலியுறுத்தி இன்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மூணாறு-உடுமலைபேட்டை இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

வனப்பகுதி
வனப்பகுதி

மேலும் ,தொடர்ந்து இவ்வாறு கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த, வருவாய்த்துறை, வனத்துறை, விவசாயிகள், அரசியல்வாதிகள் அழைத்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா உறுதியளித்துள்ளார். 

இதுகுறித்து வனத்துறையுடன் இணைந்து புலியை பிடிக்கும் பணியில் உள்ள வனஉயிரின ஆர்வலர் செந்தில்குமாரிடம் பேசினோம். “நேற்றுமுன்தினம் கொன்ற மாடுகளில் மூன்றை தொழுவில் வைத்தும், இரண்டை வேறுபகுதியிலும் வைத்து புலி மீண்டும் வருகிறதா எனக் கண்காணித்தோம். ஆனால் அந்தப் புலி 100 மீட்டருக்கு அருகே உள்ள வேறொரு தொழுவில் சென்று புலிகளை தாக்கிவிட்டது. இந்தப் பகுதியில் ஒரு குட்டி புலியின் கால்தடங்களும் தென்படுவதால், அதன் குட்டிக்கும் சேர்த்து இறைச்சியை தேடுகிறது.

போராடிய மக்கள்
போராடிய மக்கள்

கடுமையான பசியில் இருக்கும் அந்தப் புலி மிகவும் வலிமையானது என்பதை அது மாடுகளை தாக்கியிருப்பதை வைத்தே கூறிவிட முடியும். மேலும் இந்தப் புலி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் பிடிப்பதில் மிகவும் சிரமம் இருக்கும். இதற்காக முறையான அனுமதி பெற்று இப்பகுதியை சுற்றி 3 இடங்களில் கூண்டுகள் அமைத்துள்ளோம். வனத்துறை சார்பில் நான்கு குழுக்கள் அமைத்து தொடர்ச்சியாக நடமாட்டத்தை கண்காணித்தும் வருகிறோம்” என்றார்.