Published:Updated:

வறட்சியைத் தாங்கும் நெல் ரகம்... பழங்களைத் தரம் பிரிக்கும் கருவி...

பல்கலைக்கழகத்தின் புதிய வெளியீடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
பல்கலைக்கழகத்தின் புதிய வெளியீடுகள்!

பல்கலைக்கழகத்தின் புதிய வெளியீடுகள்!

வறட்சியைத் தாங்கும் நெல் ரகம்... பழங்களைத் தரம் பிரிக்கும் கருவி...

பல்கலைக்கழகத்தின் புதிய வெளியீடுகள்!

Published:Updated:
பல்கலைக்கழகத்தின் புதிய வெளியீடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
பல்கலைக்கழகத்தின் புதிய வெளியீடுகள்!

மிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் புதிய பயிர் ரகங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 17 புதிய ரகங்களை (வேளாண் பயிர்கள் -9 மற்றும் தோட்டக்கலை, காய்கறிப் பயிர்கள்- 8) அறிமுகப்படுத்தியுள்ளது பல்கலைக்கழகம். கூடவே, விவசாயத் தொழில்நுட்பங்கள்- 4 மற்றும் பண்ணை இயந்திரங்கள்- 5 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வேளாண்மைத்துறை முதன்மைச் செயலர், வேளாண்மைத்துறை இயக்குநர், தமிழ்நாடு தோட்டக்கலை இயக்குநர், வேளாண் பல்கலைக்கழகச் செயல் துணைவேந்தர் உள்ளிட்ட குழு அங்கீகரித்து, அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

நெல்
நெல்

கோ-55

ஏடிடீ-43 x ஜிஇபி-24 ஆகிய ரகங்களின் மரபு கலப்பின சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. குறுகிய கால ரகம். 115 நாள்கள். ஹெக்டேருக்கு 6,050 கிலோ சராசரி மகசூல். 66 சதவிகிதம் அரவைத் திறன். 62 சதவிகிதம் முழு அரிசி காணும் திறன் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கார், குறுவை, நவரை போன்ற பருவங்களுக்குப் பயிர் செய்ய ஏற்றது. சமையலுக்கு உகந்த மத்திய சன்ன ரகம்.

நெல், அரிசி
நெல், அரிசி

ஏடீடி-57

ஏடீடி 45 x ஏசிகே-03002 ஆகிய ரகங்களின் மரபு கலப்பின சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. குறுகிய கால ரகம். 115 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 6,500 கிலோ. 69 சதவிகிதம் அரவைத் திறன். 60 சதவிகிதம் முழு அரிசி காணும் திறன் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கார், குறுவை, நவரை மற்றும் கோடை போன்ற பருவங்களுக்குப் பயிர் செய்ய ஏற்றது. சமையலுக்கு உகந்த மத்திய சன்ன ரகம்.

நெல், அரிசி
நெல், அரிசி

வறட்சியைத் தாங்கி வளரும் ரகங்கள்

டி.கே.எம்-15


டிகேஎம்-12 x ஐ.இ.டி-21620 ஆகிய ரகங்களின் மரபு கலப்பின சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. 115 - 120 வயதுடைய குறுகிய கால ரகம். மத்திம வறட்சியில் ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 4,200 கிலோ கொடுக்கக்கூடியது. 68 சதவிகிதம் அரவைத் திறன். 63 சதவிகிதம் முழு அரிசி காணும் திறன் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் நேரடி நெல் விதைப்பிற்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் விதைக்க ஏற்ற ரகம். வறட்சி மற்றும் நீர்ப் பற்றாக்குறையைத் தாங்கி வளரும். சமையலுக்கு உகந்த மத்திய சன்ன ரகம்.

நெல்
நெல்
நெல்
நெல்

டிஆர்ஒய்- 5

டிஆர்ஒய்-2- என்ற ரகத்தின் மரபு உருமாற்றத்தில் பெறப்பட்டது. 115 - 120 வயதுடைய குறுகிய கால ரகம். மத்திம வறட்சியில் ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 5,100 கிலோ கொடுக்கக்கூடியது. 64 சதவிகிதம் அரவைத் திறன். 54 சதவிகிதம் முழு அரிசி காணும் திறன் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் குறுவை, பின் தாளடி மற்றும் நவரை போன்ற பருவங்களுக்குப் பயிர் செய்ய ஏற்றது. உவர் நிலங்களுக்கு ஏற்ற ரகம்.

நெல்
நெல்
நெல், அரிசி
நெல், அரிசி
உளுந்து
உளுந்து
உளுந்து
உளுந்து

உளுந்து ஏடீடி-7

உளுந்து ஏடீடி-3 என்ற ரகத்தின் மரபு உருமாற்றத்தில் பெறப்பட்ட ரகம். 65 - 70 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 724 கிலோ. நெல் தரிசுக்கு உகந்த ரகம்.

பச்சைப்பயறு விபிஎன் 5

விபிஎன் (ஜிஜி)-2 x எம்எல்- 1451 ஆகிய ரகத்தின் மரபு கலப்பின சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. வயது 70 - 75 நாள்கள். ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 870 கிலோ. மஞ்சள், தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை (ஜனவரி – பிப்ரவரி), காரிப் (ஜூன் – ஜூலை), ரபி (செப்டம்பர்- அக்டோபர்) பருவங்களுக்கு ஏற்ற ரகம்.

விஆர்அய்-9

விஜி-0420 x விஆர்ஐ ஜிஎன்-6 ஆகிய ரகத்தின்மரபு கலப்பின சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. வயது 95 - 110 நாள்கள். குறுகிய கால அடர் கொத்து ரகம். ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 2,500 கிலோ. எண்ணெய் சத்து 47 - 49 சதவிகிதம். இலைப்புள்ளி மற்றும் துரு நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. பயிர் முதிர்ந்த பருவத்தில் முதிர்ந்த காய்கள் செடியிலேயே முளைக்கும் பண்பு அற்றது. தமிழ்நாட்டில் சித்திரை, ஆடி, ஐப்பசி போன்ற பருவங்களில் மழைப் பயிராகவும், மார்கழிப் பட்டத்தில் இறவைப் பயிராகவும் பயிரிட ஏற்ற ரகம்.

விஆர்அய்-10

விஆர்ஐ-2 x என்ஆர்சிஜி சிஎஸ்-349 ஆகிய ரகத்தின்மரபு கலப்பின சேர்க்கையால் உருவாக்கப்பட்ட ரகம். வயது 95 நாள்கள். குறுகிய கால அடர்கொத்து ரகம். ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 2,530 கிலோ. எண்ணெய் சத்து 48 சதவிகிதம். இலைப்புள்ளி மற்றும் துரு நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. பயிர் முதிர்ந்த பருவத்தில் முதிர்ந்த காய்கள் செடியிலேயே முளைக்கும் பண்பு அற்றது. தமிழ்நாட்டில் சித்திரை, ஆடி, ஐப்பசி போன்ற பருவங்களில் மழைப் பயிராகவும், மார்கழிப் பட்டத்தில் இறவைப் பயிராகவும் பயிரிட ஏற்ற ரகம்.

கரும்பு
கரும்பு

கரும்பு

கோஜி-7

89 வி 74- என்ற ரகத்தின் தாய்வழி தேர்வில் உருவாக்கப்பட்ட ரகம். நல்ல மண் வளத்தன்மையில் ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 134 டன். உவர் நிலத்தில் 126 டன் மகசூல் கொடுக்கக்கூடியது. ஹெக்டேருக்கான சர்க்கரை மகசூல் 17.8 டன். சிவப்பு அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

வாழை
வாழை

வாழை கோ-3

கற்பூரவள்ளி (ஏபிபி) x எச்201 என்ற ரகத்தின் மரபு கலப்பினச் சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. வயது 13 மாதங்கள். வாழைக் குலையில் 12 சீப்புகளும், ஒரு சீப்பில் 16 பழங்களும் இருக்கும். வாழைக்குலையின் எடை சராசரியாக 21 கிலோ இருக்கும். பழம் வெளிர் மஞ்சள் நிறத்தில் சாம்பல் படிவம் இல்லாமல் காணப்படும். வேர் நுண்புழு தாக்குதலைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

பலா
பலா

பலா பிகேஎம்-1

தாய் மரபு வழி தேர்வால் உருவாக்கப்பட்டது. பழத்தின் எடை 21 கிலோ. மரத்துக்கு 2.3 டன் பழங்கள் கொடுக்கும். ஒரு மரத்தில் 106 பழங்கள் கிடைக்கும். ஹெக்டேருக்கு 156 மரங்கள் நடலாம். மார்ச் – மே, நவம்பர் – டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம். வெப்ப மண்டல மற்றும் மிதமான வெப்ப மண்டல பகுதிகளுக்குப் பயிர் செய்ய ஏற்றது.

நாவல் பிகேஎம்-1.

தாய்வழி மரபு தேர்வால் உருவாக்கப்பட்டது. மரத்தின் கிளைகள் கீழ்நோக்கி சாய்ந்த நிலையில் இருக்கும். பழம் பெரிதாக இருக்கும். ஒரு பழத்தின் எடை 17 கிராம். மரத்துக்கு 82 கிலோ மகசூல். இதில் மருத்துவ குணங்களான ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் முக்கிய தாதுக்கள் உள்ளன. வறண்ட, பயன்படாத நிலங்களில் பயிர் செய்ய ஏற்றது.

கத்திரி
கத்திரி

கத்திரி எம்டியூ-2

ஏசிஎம் எஸ்எம்-9 x அண்ணாமலை-1 ஆகிய ரகங்களின் மரபு கலப்பின சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. வயது 140 நாள்கள். ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 31 டன். ஜூன் - செப்டம்பர், நவம்பர் - பிப்ரவரி மாதங்களில் பயிரிட ஏற்றது. தண்டு துளைப்பான் மற்றும் பூஞ்சண நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

அவரை கோ-15

எல்பி (பி)-6 என்ற மரபு கலப்பின ரக சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. கொம்பில் வளரக்கூடிய ரகம். செடிக்கு 14 கிலோ மகசூல் கொடுக்கும். பச்சை அவரை நட்ட 70-ம் நாள் முதல் காய்க்கத் தொடங்கி 240 நாள்கள்வரை காய்க்கும். சுமார் 25 நாள்கள் அறுவடை செய்யலாம்.

சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கு கோ-2

மரபு வங்கித் தேர்விலிருந்து உருவாக்கப்பட்டது. வயது 240 நாள்கள். ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 50 டன். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடவு செய்யலாம். ஏற்கெனவே சேனை பயிரிடப்படும் மாவட்டங்கள் மற்றும் சரளை மண் நில வகைகளுக்கு ஏற்றது.

கொத்தமல்லி
கொத்தமல்லி
நிலக்கடலை
நிலக்கடலை
நிலக்கடலை
நிலக்கடலை

கொத்தமல்லி கோ-5

மரபு வங்கியிலிருந்து தேர்வு செய்யப்பட்டது. கரிப் மற்றும் ரபி பருவங்களில் பயிர் செய்ய ஏற்றது. 35-ம் நாள் முதல் இலைகளை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு 4.7 டன் மகசூல் கிடைக்கும்.

மஞ்சள்
மஞ்சள்

மஞ்சள் பிஎஸ்ஆர்-3

பகுதம்பாளையம் தாய் வழித் தேர்விலிருந்து உருவாக்கப்பட்டது. வயது 240 - 250 நாள்கள். மே - ஜூன் மாதங்களில் நடவு செய்யலாம். ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 51 டன். ‘குர்குமின்’ மற்ற ரகங்களைவிட அதிகமாக (4.8 சதவிகிதம்) உள்ளது. இலைப்புள்ளி நோய் மற்றும் இலைக்கருகல் நோய் போன்றவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. தமிழ்நாட்டில் மஞ்சள் பயிரிடும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது.

மண்மேம்பாட்டு தொழில்நுட்பம்

துத்தநாகத்தைக் கரைக்கும் நுண்ணுயிர் பாக்டீரியா கலவை மண்ணில் உள்ள துத்தநாகத்தை முழுதாகக் கரைத்துக் கொடுக்கும்.

மஸ்க்மிலான் உலர் தூள்

குளிர்பானம் தயாரிக்க உதவும். வைட்டமின் ‘சி’ நிறைந்தது.

ஈஸ்ட் கலவை

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஈஸ்ட் கலவை பயிர் வகைகளில் தழைச்சத்தைச் சேமிக்கும் ரைசோபியம் பாக்டீரியாவின் செயல்திறனை ஊக்குவித்து அதிகமான வாயுமண்டல தழைச்சத்தைச் சேமிக்க உதவும்.

கருவி
கருவி

தேங்காய் மற்றும் பழ வகைகளைத் தரம் பிரிக்கும் கருவி

விற்பனையை அதிகமாக்கும் வகையில் பெரியது, சிறியது என அளவு மூலமாகவும் நிறத்தைக் கொண்டும் தரம் பிரிக்கும் கருவி.

நெல் நடவு இயந்திரத்தினால் இயங்கும் களையெடுக்கும் கருவி

இயந்திரம் மூலமாக நடவு செய்த நெல் வயலில் ஒன்று அல்லது இரண்டு முறை களையெடுக்க உதவும் கருவி.

கருவி
கருவி

சூரிய உலர்த்தி

இந்த கருவி மூலம் தேங்காய் கொப்பரை, மிளகாய் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்தலாம். உலர வைக்கலாம்.

சூரிய ஒளி சிறிய கூண்டு

வீட்டு உபயோகத்திற்காகச் சூரிய ஒளியில் உலர வைக்கும் சிறிய கூண்டு கருவியினால் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை உலர்த்தலாம்.

கருவி
கருவி
கருவி
கருவி

புல் மற்றும் சிறிய புதர்களை வெட்டும் கருவி

டிராக்டர் இணைப்புடன் செயல்படும் இந்த கருவி மூலம் புல் தரைகள், பாதைகள், நிறுவனங்களின் சுற்றுப்புறத்தூய்மை பணிகள் செய்ய உதவும் கருவி.தொடர்புக்கு:

பயிர் ரகங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு...

இயக்குநர், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். தொலைபேசி: 0422 6611215.