Published:Updated:

`ரசாயன உரங்களை நோக்கிச் சென்றதால் மண்ணின் வளம் குறைந்துவிட்டது!'- TNAU துணைவேந்தர் கீதாலட்சுமி வேதனை

செய்தியாளர் சந்திப்பில் துணைவேந்தர் கீதாலட்சுமி

பாரம்பர்ய தொழில்நுட்பத்துடன், அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து சாகுபடியை அதிகரிப்பதுடன், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்.

`ரசாயன உரங்களை நோக்கிச் சென்றதால் மண்ணின் வளம் குறைந்துவிட்டது!'- TNAU துணைவேந்தர் கீதாலட்சுமி வேதனை

பாரம்பர்ய தொழில்நுட்பத்துடன், அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து சாகுபடியை அதிகரிப்பதுடன், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்.

Published:Updated:
செய்தியாளர் சந்திப்பில் துணைவேந்தர் கீதாலட்சுமி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழககத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் கீதாலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தராகப் பதவியேற்றுக் கொண்ட கீதாலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் 70 சதவிகிதம் பேர் மாணவிகள்தான். இங்கு பணியாற்றுபவர்களில் 53 சதவிகிதம் பெண் ஊழியர்கள்தான் உள்ளனர். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளனர். இப்போது உணவுப் பாதுகாப்புப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கிச் செல்வதும் அவசியம்.

கவர்னர் ரவியுடன் துணைவேந்தர் கீதாலட்சுமி
கவர்னர் ரவியுடன் துணைவேந்தர் கீதாலட்சுமி
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பருவகால நிலை மாற்றம் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. தீவிர பருவநிலை மாற்ற நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக் கிறது. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்பியுள்ளோம். மண் வளம் குறைந்துவிட்டது. மண் வளத்தின் கரிமச் சத்தும் 0.5-க்குக் கீழ் சென்றுவிட்டது. இயற்கை உரங்களைவிட்டு, ரசாயனங்களை நோக்கிச் சென்றதன் விளைவு அது.

இதைச் சரிசெய்ய, விளைச்சலை அதிகரிக்க அனைத்துத் துறைகளிலும் இணைந்து ஆராய்ச்சி செய்ய உள்ளோம். நானோ தொழில்நுட்பம், டிரோன் வழியாகப் பூச்சிக்கொல்லி தெளிப்பது, ரோபோடிக்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்துவோம்.

மண் வளம்
மண் வளம்

பாரம்பர்ய தொழில்நுட்பத்துடன், அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து சாகுபடியை அதிகரிப்பதுடன், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். மாணவர்கள்தான் நம் தூண்கள். மாணவர்களை வேலை வாய்ப்பை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச அளவில், தேசிய அளவில் உள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு செய்து அறிவியல் ரீதியாகக் கொண்டு செல்ல திட்டமுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

எல்லோரிடமும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. வானிலை, விலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விவசாயிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி, குரல் செய்திகளை அறிவிப்பாக அனுப்பி வருகிறோம். அதை இன்னும் வலுப்படுத்த உள்ளோம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்குக் கீழ் 9 வேளாண் அறிவியல் நிலையங்கள் உள்ளன. அடுத்தகட்டமாக 5 அறிவியல் நிலையங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அரசின் உழவன் செயலி உள்ளது. ஒவ்வொரு முறை பயிரிடும்போது, என்ன மாதிரியான தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும் என்ற அனைத்துத் தகவல்களும் உள்ளன.

கீதாலட்சுமி
கீதாலட்சுமி

புதுப்புது ரகங்களைக் கண்டுபிடித்துள்ளோம். அதற்கு அதிக விளைச்சலைக் கொடுப்பதற்கான தொழில்நுட்பத்தையும் கண்டறிந்துள்ளோம். அதை மதிப்புக்கூட்டி விற்கும்போது அதிக லாபம் கிடைக்கும். அதற்கான உதவியும் நாம் செய்து வருகிறோம். இது எங்களுக்கு பொன் விழா ஆண்டு. இதையொட்டி, விவசாயிகளுக்கு வேளாண் பெருவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை அழைத்து ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.

வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு நான் பேராசிரியர், துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளேன். ஒரு பருவம் தொடங்குவதற்கு முன்பே, மழை மற்றும் வறட்சி போன்ற அனைத்து விவரங்களையும் மாவட்ட வாரியாக வழங்கி வருகிறோம்.

விவசாயம்
விவசாயம்

ஒவ்வோர் ஆண்டு தென்மேற்கு பருவ காலத்தையொட்டி மே மாதமும், வடகிழக்குப் பருவமழை காலத்தையொட்டி செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறோம். இதுதவிர மத்திய கால முன்னறிவிப்பையும் வெளியிட்டு வருகிறோம். பேரிடர் மேலாண்மையில் பெரும் பங்காற்றி வருகிறோம். பேரிடர் நடப்பதற்கு 4 - 5 நாள்களுக்கு முன்பே விவசாயிகளுக்கு அறிவிப்பு கொடுத்து வருகிறோம்.

இந்திய வானிலை மையம், சென்னை வானிலை மையத்துடன் இணைந்து நாங்களும் ஆராய்ச்சி செய்து அறிவிப்புகளை கொடுக்கிறோம். இதன் மூலம் பெரிய அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது “ என்றார்.