Published:Updated:

நெல், சிறுதானியம்... ``வாடகைக்கு அறுவடை இயந்திரம்" தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

நெல் அறுவடை இயந்திரம்

இந்த இயந்திரம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையை சரி செய்ய பயன்படும், குறித்த நேரத்தில் அறுவடை செய்து முடிப்பதோடு தானிய இழப்பையும் தவிர்க்கும். மேலும், அறுவடைக்கான செலவினங்களைக் குறைக்கும்.

நெல், சிறுதானியம்... ``வாடகைக்கு அறுவடை இயந்திரம்" தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

இந்த இயந்திரம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையை சரி செய்ய பயன்படும், குறித்த நேரத்தில் அறுவடை செய்து முடிப்பதோடு தானிய இழப்பையும் தவிர்க்கும். மேலும், அறுவடைக்கான செலவினங்களைக் குறைக்கும்.

Published:Updated:
நெல் அறுவடை இயந்திரம்

விவசாயிகள் தங்கள் அறுவடைப் பணியை விரைவாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையானது விவசாயிகளுக்கான அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு வழங்குகிறது.

அறுவடை இயந்திரம்
அறுவடை இயந்திரம்

``இதன் மூலம் நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைப் பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்ய பயன்படுத்தலாம். இந்த இயந்திரம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையை சரி செய்ய பயன்படும், குறித்த நேரத்தில் அறுவடை செய்து முடிப்பதோடு தானிய இழப்பையும் தவிர்க்கும். மேலும் அறுவடைக்கான செலவினங்களைக் குறைக்கும்" என்று தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை தெரிவித்துள்ளது. இவ்வியந்திரத்தின் வாடகையாக அரசு நிர்ணயம் செய்திருக்கும் கட்டணம், மணிக்கு ரூபாய் 1,010 ஆகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேளாண் துறையை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், வாடகைக்கு அறுவடை இயந்திரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அறுவடை இயந்திரம்
அறுவடை இயந்திரம்

இந்தத் திட்டம் நடைமுறையில் செயல்படும்போது விவசாயிகளின் பணிச்சுமை, செலவினங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் மாவட்ட அளவில், செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற் பொறியாளரைத் தொடர்புகொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, தலைமைப் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600035, 044-29515322 என்ற முகவரியை அணுகலாம்.

அல்லது அரசின் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க http://mis.aed.tn.gov.in இதை க்ளிக் செய்யுங்கள்.